தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே, வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுகின்றதாக வீடியோ பரவி வைரலாகி வருகிறது. இதற்கிடையில், வட மாநிலத்தவர்கள் சென்னை சென்ட்ரலில் படையெடுத்து நிற்பதாகக் கூறப்படுவது அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வட மாநிலத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே பிரச்சனைகள் நிலவுவது போலும், இதில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாகவும் வீடியோ பரவி வந்தது. இந்த சூழ்நிலையில், தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் அனைவரும் ஒன்று கூடி இருப்பதாகக் கூறப்படுகிறது. இது, சமூக வலைதளங்களில் பரவிய போலி வீடியோ காரணமாக வட மாநிலத்தவர்கள் வெளியேறுவதால், தொழில் பாதிக்கப்படும் என தென்னிந்திய நூற்பாலை சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து, சிலர் குறிப்பிட்டுள்ளதாவது அடுத்த வாரம் வரும் ஹோலி பண்டிகைக்காகவே, சொந்த ஊர் செல்வதாக விளக்கம் தருகின்றனர். சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ குறித்து சட்டப்பேரவையில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளதாவது, பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறுவது வதந்தி என விளக்கம் தந்துள்ளார். வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை ஆராயவும் தமிழகம் முயற்சி செய்து வருகிறது. அதன் படி, வெளிமாநில தொழிலாளர்களுக்காக உதவி எண்களை தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது. அவர்களுக்குப் புரிவதற்காக, தமிழ்நாடு காவல்துறை ஹிந்தியில் தகவல்களை வெளியிட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…