Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

How To Do Facial At Home In Tamil: இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே ஃபேசியல் செய்யலாம்... ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள்....!!

Nandhinipriya Ganeshan July 06, 2022 & 13:30 [IST]
How To Do Facial At Home In Tamil: இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே ஃபேசியல் செய்யலாம்... ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள்....!!Representative Image.

How To Do Facial At Home In Tamil: சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தை சுத்தமாகவும் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவும் ஒரு சிறந்த வழிமுறை தான் ஃபேஷியல். இதை பார்லருக்கு சென்று தான் செய்ய வேண்டும் என்று கிடையாது. நீங்க ஃபேஷியலை பார்லரில் செய்வது போல வீட்டிலேயே செய்யலாம். இப்போது இயற்கை பொருட்களை (how to do facial at home with natural ingredients) கொண்டு அதற்கான ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

ஸ்டெப் 1: க்ளென்சிங்

ஃபேஷியலின் முதல் படி தான் க்ளென்சிங். இது முகத்தில் இருக்கும் அழுக்கு, எண்ணெய் சுரப்பு போன்றவற்றை முதலில் அகற்ற வேண்டும். ஒரு பவுலில் காய்ச்சாத பாலை எடுத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் வட்டவடிவில் மசாஜ் செய்து அழுக்கை துடைத்து எடுங்கள். இதை 2, 3 முறை செய்ய வேண்டும். பாலில் இருக்கும் லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கும் தன்மை உடையது.

ஸ்டெப் 2: எக்ஸ்ஃபோலியேட்  

க்ளென்சிங் செய்து 5 நிமிடம் கழித்து காட்டன் துணியால் முகத்தை ஒற்றி எடுக்கவும். பின்னர் அடுத்த ஸ்டெப் ஸ்கிரப் செய்ய வேண்டும். அதற்கு எலுமிச்சை சாறு 3 ஸ்பூன், பொடித்த சர்க்கரை 2 ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து மென்மையாக தேய்த்து ஸ்கிரப் செய்யவும். மசாஜ் செய்து 2 நிமடங்கள் விட்டு முகத்தை துடைத்து விடுங்கள். 

குறிப்பு: கண்களின் அடிப்பகுதியில் மசாஜ் செய்ய வேண்டும். 

ஸ்டெப் 3: மசாஜ்

நன்றாக பழுத்த பப்பாளியை நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் முகம் முழுவதும் அப்ளை செய்து வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். கண்களுக்கு அடியிலும் மசாஜ் செய்யலாம். பின்னர் கழுத்துப் பகுதியில் கீழிருந்து மேல்நோக்கி 20 முறை மசாஜ் செய்ய வேண்டும். 20 முறை தாடைப் பகுதியில் மேல்நோக்கி மசாஜ் செய்யவும். பின்னர் கன்னத்தில் இருந்து காதுவரை மசாஜ் செய்யவும். மூக்கு பகுதியில் இரண்டு புறமும் விரல்களை வைத்து மசாஜ் (steps to do facial at home) செய்யவும். 

ஸ்டெப் 4: ஃபேஸ் மாஸ்க்

எல்லாப் பகுதியிலும் மசாஜ் செய்த பின்பு ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். அதற்கு நன்றாக பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள். அந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஃபேசியல் முடிந்தது. இப்போது உங்க முகம் பளிச்சென்று மிருதுவாக இருப்பதை உணர (face facial at home) முடியும். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:

How To Do Facial At Home In Tamil | Steps to do facial at home | Face facial at home | Home facial at home | How to do facial at home with natural ingredients in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்