Tue ,Jun 18, 2024

சென்செக்ஸ் 77,276.33
283.56sensex(0.37%)
நிஃப்டி23,545.05
79.45sensex(0.34%)
USD
81.57
Exclusive

சுய சுத்தம் பேணுவது எப்படி? அனைவரும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை! | 10 Personal Hygiene Practices in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
சுய சுத்தம் பேணுவது எப்படி? அனைவரும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை! | 10 Personal Hygiene Practices in TamilRepresentative Image.

➤ இப்போதெல்லாம் போனில் பேசுபவர்களை காட்டிலும் ஹெட்போனை பயன்படுத்தி பேசுபவர்கள் தான் அதிகம் இருக்கிறோம். இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் அவை அழுக்காகின்றன. அதனால், பாக்டீரியாக்கள் அதிகமாக உருவாகி காதில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, கிருமி நாசினியை பயன்படுத்தி 2 நாட்களுக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்வது நல்லது. அதேபோல், நீண்ட நாட்களாக ஒரே ஹெட்போனை உபயோகிக்காமல் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அவற்றை மாற்றுவது நல்லது. 

➤ நம்மில் பலருக்கும் நகங்களை கடிக்கும் பழக்கம் இருக்கும். இது ஒரு மோசமான பழக்கம். ஏனென்றால், நமது விரல் நகங்களுக்கு கீழே உள்ள ஈரமாக இருப்பதால் அங்கு ஏராளமான கிருமிகள் வளர தொடங்குகின்றன. நகத்தை கடிக்கும்போது அவை அனைத்தும் வாய்வழியாக உடலுக்கு சென்று ஆரோக்கிய சீர்க்கேடுகளை ஏற்படுத்தும். எனவே, நகம் கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதை நிறுத்துவது நல்லது. அதேபோல், நீளமாக நகம் வளர்ப்பதையும் தவிர்ப்பது நல்லது. 

➤ வாயை சுத்தமாக வைத்திருந்தால் கூட சில சமயங்களில் வாயில் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகின்றன. குறிப்பாக, தம்பதிகள் முத்தமிடும்போது பாக்டீரியாக்கள் அதிகளவில் பரவுகின்றன. எனவே, முத்தமிடுவதற்கு முன்பாக மவுத் வாஷ் பயன்படுத்துவது நல்லது. தினமும் 2 முறை பல்துளக்க வேண்டியது அவசியம். வாயில் உணவு துகல்கள் இருந்தாலும் வாயில் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகும் எனவே, எது சாப்பிட்டாலும் வாயை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்துக்கொள்ளுங்கள்.

➤ பெரும்பாலான மக்கள் தாங்கள் தினமும் பயன்படுத்தும் தலையணைகளின் உறைகளை மாற்றுவதே கிடையாது. இதனால், தூசிப்பூச்சிகள் படுக்கையறையில் நிறைந்திருக்கும். அவை நம் கண்களுக்கு தெரியாது, ஆனால் தும்மல், ஆஸ்துமா, இருமல் போன்ற மூச்சு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, தோலில் பலவிதமான அலற்சியும் ஏற்படுத்தும். எனவே, வாரத்திற்கு ஒருமுறையாவது தலையணை உறைகள், மெத்தை விரிப்பு, மெட்சீட் போன்றவற்றை மாற்றுவது நல்லது. 

➤ ஆண்களுக்கு அழகே அடர்த்தியான தாடி தான். என்னதான் அழகாக இருந்தாலும் அதிலும் பாக்டீரியா உற்பத்தியாகும். அதற்காக தாடி வளர்க்க வேண்டாம் என்று கூறவில்லை. அதை அவ்வப்போது பராமரிப்பது ரொம்ப முக்கியம். அதுமட்டுமல்லாமல், தாடி வளர்ப்பதால் புறஊதா கதிர்களிலிருந்து சருமத்தை பாதுக்கலாம். 

➤ அனைவருக்குமே மோதிரம் அணியும் பழக்கம் இருக்கும். அதிலும் சில பேர் தாங்கள் அணியும் மோதிரத்தை எப்போதும் அகற்றுவதே கிடையாது. இதனால், மோதிரம் அணியும் இடத்தில் ஈரப்பதம் ஏற்பட்டு பாக்டீரியா அதிகளவில் உற்பத்தியாகின்றன. இவை நாம் சாப்பிடும்போது உணவு வழியாக உள்ளே சென்று ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, வாரத்திற்கு ஒருமுறையாவது மோதிரம், தோடு, மூக்குத்தி போன்றவற்றை சுத்தம் செய்யுங்கள். 

➤ பெண்கள், ஆண்கள் என்று இருவருமே அதிகம் பயன்படுத்தும் பொருள் பர்ஸ். பலர் ஒரே பர்ஸை நீண்ட நாட்களாக வைத்திருப்பார்கள். விலை அதிகம் கொடுத்து வாங்கியதாலையோ என்னவோ அதை தூக்கி எறிய மனம் வருவதில்லை. ஆனால், ஒரே பர்ஸை ரொம்ப நாட்கள் பயன்படுத்துவதனால் பாக்டீரியா உற்பத்தியாகி, சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே, 2 வாரத்திற்கு ஒருமுறையாவது பர்ஸை சுத்தம் செய்யுங்கள். முடிந்தால் 1 வருடத்திற்கு ஒருமுறை பர்ஸை மாற்றுவது நல்லது. 

➤ இன்றைய காலக்கட்டத்தில் லேப்டாப், கம்பியூட்டர், போன் இல்லாமல் வேலையே ஓடாது என்றளவிற்கு வந்துவிட்டது. குறிப்பாக, அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போனை 2 நாட்களுக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள். செல்போன் கவரை கிருமி நாசினியை கொண்டு சுத்தம் செய்யுங்கள். அதேபோல, லேப்டாப் கீபோர்டுகளை தூசி இல்லாமல் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக, மவுஸ் (mouse) 2 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்தல் வேண்டியது அவசியம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்