Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,718.77
229.78sensex(0.32%)
நிஃப்டி22,047.30
51.45sensex(0.23%)
USD
81.57
Exclusive

மூட்டு வலிக்கு மஞ்சள்.. இப்படி பயன்படுத்துங்க.. சீக்கிரம் குணமாகும்.! | How To Use Turmeric For Knee Pain

Gowthami Subramani Updated:
மூட்டு வலிக்கு மஞ்சள்.. இப்படி பயன்படுத்துங்க.. சீக்கிரம் குணமாகும்.! | How To Use Turmeric For Knee Pain Representative Image.

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே, நம்மிடம் தீர்வு உள்ளது. ஆனால், அவற்றை எல்லாம் பயன்படுத்தாமல் பெரிய அளவிலான சிகிச்சை எடுத்துக் கொண்டு அதிக செலவு செய்கிறோம். அந்த வகையில், மூட்டு வலியும் ஒன்று. மூட்டு வலி குணப்படுத்துவதற்கு மஞ்சள் பெரிதும் உதவுகிறது. மஞ்சளைப் பயன்படுத்தி மூட்டு வலியை எப்படி குணப்படுத்துவது என்பதைப் பார்க்கலாம்.

மூட்டு வலிக்கு மஞ்சள்.. இப்படி பயன்படுத்துங்க.. சீக்கிரம் குணமாகும்.! | How To Use Turmeric For Knee Pain Representative Image

மூட்டு வலி

இந்த நவீன வசதிகள் எல்லாம் வருவதற்கு முன், மக்கள் தங்களது உடலுக்குத் தேவையான அசைவுகளையும், இயற்கையான உணவு ஆதாரங்களை உட்கொண்டவை மூலமாகவும் பெற்றதால் பெரிதளவு மூட்டு வலி என்பதை உணர்ந்திருக்கமாட்டார்கள். ஆனால் கை, கால்களை அசைப்பது, மடக்குவது உள்ளிட்ட காரியங்கள் மிக சிரமமானதாக மாறிவிடும்.

மூட்டு வலிக்கு மஞ்சள்.. இப்படி பயன்படுத்துங்க.. சீக்கிரம் குணமாகும்.! | How To Use Turmeric For Knee Pain Representative Image

மஞ்சள் சேர்த்தல்

மூட்டுவலி பிரச்சனையானது தற்போது அனைவருக்கும் இருக்கக் கூடிய பிரச்சனைகளுள் ஒன்றாகும். மூட்டு வலியால் வீக்கம், அசௌகரியம் போன்றவை ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வடு அவசியம். அந்த வகையில், மூட்டு வலியயைக் கட்டுப்படுத்த உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம்.

மூட்டு வலிக்கு மஞ்சள்.. இப்படி பயன்படுத்துங்க.. சீக்கிரம் குணமாகும்.! | How To Use Turmeric For Knee Pain Representative Image

அலர்ஜியைக் குறைக்க

மஞ்சளானது கிருமி நாசினியாக இருப்பதால், இது மூட்டு வலி குறைப்பதற்கு மட்டுமல்லாமல், அலர்ஜியைக் குறைக்கவும் பயன்படுகிறது. ஏனெனில், மஞ்சளில் முக்கிய வேதிப் பொருளான குர்குமின் என்ற சத்து நிரம்பிக் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல், உணவுக்கு நிறமூட்டுதலையும், நல்ல மனம் தருவதாகவும் மஞ்சள் இருப்பதால் சிறப்பான பலன்களைப் பெற முடியும்.

மூட்டு வலிக்கு மஞ்சள்.. இப்படி பயன்படுத்துங்க.. சீக்கிரம் குணமாகும்.! | How To Use Turmeric For Knee Pain Representative Image

மஞ்சள் பயன்கள்

மஞ்சளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. மேலும், மன அழுத்தத்தையும் குறைக்கிறது. குறிப்பாக, இதயத்திற்கு செல்லக் கூடிய இரத்த குழாய்களின் உட்புறச் சுவர்களில் ஏற்படக் கூடிய பாதிப்பால் இதய நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நிலையில், மஞ்சளில் உள்ள குர்குமின் மூலம், இதய நோய் பாதிப்பு தடுக்கப்படுகிறது. மேலும், புற்றுநோய் எதிர்ப்புச் சக்தியாகவும் மஞ்சள் உள்ளது.

மூட்டு வலிக்கு மஞ்சள்.. இப்படி பயன்படுத்துங்க.. சீக்கிரம் குணமாகும்.! | How To Use Turmeric For Knee Pain Representative Image

உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது எப்படி?

மூட்டு வலி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு உதவும் வகையில், டீ-யில் மஞ்சள் சேர்த்து அருந்துவது சிறந்தது.

பொரியல் வகை, சாலட் அல்லது கூட்டு போன்றவற்றில் மஞ்சள் சேர்க்கலாம்.

பாலில், 2 அல்லது 3 பூண்டு பற்கள் தட்டி, அதனுடன் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து அருந்துவதன் மூலம் உடல் நலத்திற்கு நன்மை தரும்.

மூட்டு வலிக்கு மஞ்சள்.. இப்படி பயன்படுத்துங்க.. சீக்கிரம் குணமாகும்.! | How To Use Turmeric For Knee Pain Representative Image

மஞ்சள் பொடி தயாரிக்கும் முறை

பாக்கெட்டுகளில் உள்ள மஞ்சள் பொடிகளைப் பயன்படுத்துவதைக் காட்டிலும், இயற்கையாக மஞ்சள் பொடி தயாரித்து பயன்படுத்துவது சிறப்பைத் தரும். ஆலைகளில் தயாரிக்கப்படும் மஞ்சள் பொடிகளில் இருக்கக் கூடிய குர்குமின் சத்து நீக்கப்படலாம்.

எனவே, மஞ்சளை கட்டியாக வாங்க வைத்து அதனை வெயிலில் நன்றாக உலர்த்திக் கொள்ள வேண்டும். பின்பு, பொடி செய்து வைத்து அதில் வண்டு பிடிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அதனை இறுக்கமான பாட்டிலில் சேமித்து வைத்து உபயோகம் செய்யலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்