Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காது எப்படி சுத்தம் செய்யணும் தெரியுமா…? | How to Clean Ear at Home Naturally

Gowthami Subramani Updated:
காது எப்படி சுத்தம் செய்யணும் தெரியுமா…? | How to Clean Ear at Home NaturallyRepresentative Image.

காது ஒரு முக்கிய உறுப்பாகச் செயல்படுகிறது. நம்முடைய உடலில் உள்ள ஒரு சில உறுப்புகள் மெல்லிய தன்மையைக் கொண்டதாக அமைகிறது. அந்த வகையில், கேட்பதற்குப் பயன்படும் உறுப்பான காது அடங்கும். பொதுவாகவே, காதுக்குழாய் ஆனது மெல்லிய நரம்பியல் தன்மை கொண்டவையாக அமையும். இதனை நாம் கவனமாகக் கையாள்வது மிகவும் அவசியமாகும். காதுகளைப் பொறுத்த வரை, அதனை நன்றாகப் பாதுகாக்கவும், அதன் ஆரோக்கியத்திற்கும் சில நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் ஆகும்.

காது எப்படி சுத்தம் செய்யணும் தெரியுமா…? | How to Clean Ear at Home NaturallyRepresentative Image

காதுக்குழாய்

காது குழாய் ஆனது, தோல், எண்ணெய் இரண்டும் சேர்ந்த கலவையாகும். இருந்த போதிலும், இதனை நம் கண்களால், கூர்ந்து பார்க்க முடியாத அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் உள்ள கால்வாய் போன்ற அமைப்புகள் காதில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது. இதற்கு அதில் உள்ள மெழுகே காரணம் ஆகும்.

இந்த மெழுகு மூலமே, காதின் உட்பகுதியில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்படுகின்றன. மேலும், இந்த காதுக்குழாயில் இருக்கக் கூடிய தூசிகள், அழுக்கு, பாக்டீரியா போன்றவற்றில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. அதன் படி, காது தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்வதாக அமைப்பைக் கொண்டுள்ளது.

காது எப்படி சுத்தம் செய்யணும் தெரியுமா…? | How to Clean Ear at Home NaturallyRepresentative Image

காது குடைதல்

காதில் உள்ள அழுக்குகளை எடுப்பதற்கு, காதை அடிக்கடி குடைந்து கொண்டே இருப்பர். ஆனால், தினந்தோறும் காதுகளை குடைந்து வந்தால், பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். பொதுவாகவே, காதில் உள்ள அழுக்குகளைத் தானாகவே வெளியேற்றும் பண்பு கொண்டதாகும். நமது கீழ்த்தாடையானது, நாம் பேசும் போதும், உணவை மெல்லும் போதும் காதில் உள்ள அழுக்குகளை இயற்கையாகவே வெளியேற்றும் பண்பு கொண்டுள்ளதாக அமைகிறது.

நாம் பலரும் பட்ஸ் பயன்படுத்தி காதுகளைச் சுத்தம் செய்வர். அது மட்டுமில்லாமல், காட்டன் துணிகள், மற்ற துணி வகைகள் அல்லது இன்னும் சிலவற்றை பயன்படுத்தி காதுகளைச் சுத்தம் செய்து வருகின்றனர். இதன் மூலம், நாம் நம் காதுகளைச் சுத்தப்படுத்துகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு பட்ஸ் உபயோகிப்பதன் மூலம், நமது காதுகளில் உள்ள மென்மையான நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால், அழுக்குகள் வெளியே வராமல் காதுகளின் கால்வாயின் உட்புறம் நோக்கித் தள்ளப்படுகிறது.

காது எப்படி சுத்தம் செய்யணும் தெரியுமா…? | How to Clean Ear at Home NaturallyRepresentative Image

காது அழுக்கு

காது மெழுகுவர்த்தி ஆனது காதுகளில் இருக்கக் கூடிய அழுக்கு அல்லது மெழுகை எடுப்பதற்கு ஒரு முறையாக உள்ளது. ஒரு பொருளை காதில் போடுவதால், உட்புற கால்வாய்கள் சிதைத்து விடக்கூடும்.

சில சமயங்களில், காதுகளில் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். காதில் மந்தமாக ஒலி கேட்பது டின்னிடஸ் என அழைக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனையால், காது வலி அல்லது உள் காது வலி ஏற்படலாம்.

காது எப்படி சுத்தம் செய்யணும் தெரியுமா…? | How to Clean Ear at Home NaturallyRepresentative Image

காது பாதுகாப்பிற்கு

காதில் உள்ள மென்மையான நரம்புகளைப் பாதுகாப்பதற்கு, காதுகளில் எந்த ஒரு பொருளையும் விடாமல் இருப்பது நல்லது. காது அடைத்து, மோசமான நிலையை அடையும் சமயத்தில், மருத்துவர்களின் ஆலோசனைப் படி காதுகளைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். நாமே செய்யும் போது, அதனை ஒரு சில வழிகாடு நெறிமுறைகளின் படி செய்வதென்பது கடினம். எனவே மருத்துவர்களிடம் சென்று, காது பாதுகாப்பிற்கான வழியைப் பின்பவற்ற வேண்டியது அவசியம் ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்