Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உயிரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுக் கொண்டிருக்கும் ஃபேவரட் உணவுகள்…

Nandhinipriya Ganeshan July 26, 2022 & 14:00 [IST]
உயிரை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுக் கொண்டிருக்கும் ஃபேவரட் உணவுகள்…Representative Image.

நாட்டில் நிகழும் அதிக அளவிலான மரணத்திற்கு இருதய நோய்கள் முக்கிய காரணங்களில் ஒன்றாக மாறியுள்ளன. இருதய நோய் வருவதற்கு பல காரணிகள் இருந்தாலும் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்களும் ஒரு காரணம். பொதுவாக, நாக்கிற்கு சுவையாக இருக்கும் பொருட்கள் அனைத்திலும் ஆபத்துதான் குடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் ரசித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். அப்படி நாம் அதிகம் விரும்பி சாப்பிட கூடிய உணவுப்பொருட்களால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். உண்மையில், இந்த உணவுகள் இவ்வளவு ஆபாத்தா? என உங்களுக்கே ஷாக்காக இருக்கும்.

ஆபாத்தான ஃபேவரட் ஃபுட்ஸ்:

ஐஸ்கிரீம்: ஐஸ்கிரீம் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும், சிறிவர்கள் முதல் பெரியவர்கள் ரசித்து ருசித்து சாப்பிடக்கூடிய ஒரு உணவாக ஐஸ்கிரீம் உள்ளது. இதை எந்த அளவிற்கு ருசித்து சாப்பிடுகிறோமோ, அந்த அளவிற்கு நம் உயிரை நாமே வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். கலோரிகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அதிகளவில் உள்ள இந்த ஐஸ்கிரீம்கள், உடலில் எடை அதிகரிப்பதற்கும், மோசமான இதய ஆரோக்கியத்திற்கும் காரணமாக அமைகிறது.

பிரெஞ்சு பிரைஸ்: இந்த மொறுமொறு ஸ்நாக்ஸிற்கு பலரும் அடிமையாக இருக்கிறார்கள். ஆனால், இதில் இருக்கும் ஆபத்து தெரியாமல் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். உருளைக்கிழங்கை மிகவும் சூடான எண்ணெய்யில் பொறித்து எடுப்பதால் இதில் எளிதில் ஜீரணமாக கூடிய கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருக்கும். இதை சாப்பிடும் போது உடலில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், இதில் இருக்கும் அதிகளவு கொழுப்பு, உப்பு இதயத்திற்கு மிகவும் ஆபத்தானது.

ஃபிரைடு சிக்கன்: சிக்கனா..? அடடா! என்ன சுவை என்ன சுவை.. சிக்கனை எண்ணெயில் போட்டு பொறித்து அப்படியே மொறு மொறுப்பாக எடுத்து சாப்பிட்டால் அவ்வளவு ருசி. ஆனால், அது தான் உங்க உயிருக்கு ஆப்பு. எண்ணெயில் டீப் ப்ரை செய்யப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு எக்கச்சமாக அதிகரிக்கும். இதனால் ஹார்ட்அட்டாக் எளிதில் ஏற்படும்.

கூல்டிரீங்ஸ்: இன்றைய காலத்தில் எதற்கெடுத்தாலும் ஜில்லுனு கூல்டிரீங்ஸை தான் தேடுகிறார்கள் நம் மக்கள். ஆனால், அடிக்கடி இவற்றைக் குடிக்கும்போது உடலில் இன்சுலில் அளவு அதிகமாக்கும். எடை அதிகரிப்பதோடு, வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை சீர்குலைத்துவிடும்.

பீட்சா: மைதாவில் செய்த எந்த உணவுகளுமே ஆபத்தானவை தான். அதிலும் பலரால் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய உணவான பீட்சா ஆபத்தான நிறைவுற்ற கொழுப்பைக் கொண்ட உணவுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பீட்சா சாப்பிடுவதே தவறு என்று சொல்லவில்லை, அளவிற்கு அதிகமாக வேண்டாம். ஆனால், இந்த காலத்திலும் பீட்சாவை இன்னும் சுவைத்துகூட பார்க்காதவர்களும் இருக்கின்றனர். உண்மையில் அவர்கள் அதிர்ஷ்டசாலி தான்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்