Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

How to Increase Men’s Sperm Count Naturally in Tamil: ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையையும், அதன் வீரியத்தையும் அதிகரிக்கும் உணவுகள்..!!

Nandhinipriya Ganeshan July 26, 2022 & 11:45 [IST]
How to Increase Men’s Sperm Count Naturally in Tamil: ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையையும், அதன் வீரியத்தையும் அதிகரிக்கும் உணவுகள்..!!Representative Image.

How to Increase Men’s Sperm Count Naturally in Tamil: சமீப காலமாக குழந்தைப்பேறு இன்மையால் இன்ஃபெர்ட்டிலிட்டி மையங்களில் குவியும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏனென்றால், பெண்களை போன்று ஆண்களும் உடல் ஆரோக்கிய குறைபாடுகளை கொண்டிருக்கிறார்கள். அவற்றில் முக்கியமானது விந்தணுக்களின் வீரியமின்மையும், குறைவான எண்ணிக்கையும் தான். உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின் படி, ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு 15 மில்லியனாக அல்லது விந்து வெளியேறுவது குறைந்தது 39 மில்லியனாக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

ஒருவேளை விந்தணுக்களின் எண்ணிக்கை ஒரு மில்லிக்கு 15 மில்லியனுக்கும் குறைவாக இருந்தால், கருவுறுதலில் பிரச்சனையை உண்டாக்கும். இதை ஆண்மை குறைவு என்று சொல்வார்கள். ஆனால், ஒரு சில உணவுகளை அன்றாடம் சேர்த்துக் கொண்டாலே வீரியத்தன்மை மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இப்போது, அவை என்னென்ன உணவுகள் என்பதை பார்க்கலாம்.

ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கும் சில உணவுகள்.. கட்டாயம் தவிர்க்க வேண்டும்...

ஆண்மையை அதிகரிக்கும் உணவுகள்:

வாழைப்பழம்: வாழைப்பழத்தை சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம், இதில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த வகையில், ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றின் வீரிய தன்மையை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது. எனவே, தினமும் ஒரு வாழைப்பழம் தவறாமல் எடுத்துக்கொண்டால், கண்டிப்பாக நல்ல ரிசல்ட் கிடைக்கும். அதேபோல், வாரத்திற்கு ஒருமுறையாவது அவகேடோவை சாப்பிடுங்கள், இதில் இருக்கும் வைட்டமின் இ, விந்தணுக்களின் உற்பத்திக்கு மிகவும் சிறந்தது.

வெந்தயம்: வெந்தயத்தின் மகிமையை பலமுறை கேள்விப்பட்டிருப்போம், இது பெண்களின் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த கை வைத்தியம். அதேபோல், ஆண்களுக்கும் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகிறது. எனவே, தினமும்  தாளிப்பதற்கு வெந்தையத்தை சேர்த்துக் கொள்ளலாம். வாரத்திற்கு இரு முறை வெந்தய கஞ்சி செய்தும் குடிக்கலாம்.

முட்டை: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் காணப்படும் புரதம் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் ஆண்களின் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் வீரியத்தன்மையை அதிகரித்து, கருத்தரித்தல் வாய்ப்பை ஊக்குவிக்கிறது. எனவே, தினமும் ஒரு முட்டை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பூசணி விதை: விந்தணுக்களின் தரத்துக்கும், சீரான வளர்ச்சிக்கும், டெஸ்டோஸ்டீரானின் உற்பத்திக்கும் உதவும் துத்தநாகம் என்ற தாதுப்பொருள் பூசணி விதையில் அதிகளவில் காணப்படுகிறது. இனி, பூசணி விதைகளை தூக்கி எறியாமல், உங்க வீட்டு ஆண்களுக்கு கொடுத்து சாப்பிட சொல்லுங்கள். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே, அளவோடு சாப்பிடுவது நல்லது.

தக்காளி: தக்காளியில் காணப்படும் லைக்கோபின் விந்தணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் மோசமான ஃப்ரீ ராடிக்கல்ஸிடம் இருந்து பாதுகாத்து, அவற்றின் வீரியத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. எனவே, தினமும் தக்காளியை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் துளசி, திராட்சை, தண்ணீர்விட்டான் கிழங்கு, சிவப்பு முட்டைக்கோஸ், சிவப்பு கொய்யா, தர்பூசணி, பப்ளிமாஸ் போன்ற உணவுகளிலும் லைக்கோபின் சத்து அதிகளவில் நிறைந்துள்ளது.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், வீட்டு வைத்தியம் போன்றவை பொதுவான தகவல்களை அடிப்படியாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம். Search Around Web இதற்கு பொறுப்பேற்காது.

Tags:

How to increase sperm count in tamil | How to increase sperm count naturally in tamil | How to increase sperm count for male | How to increase sperm count by food in tamil | How to increase men’s sperm count naturally in tamil | Natural food to increase sperm count in tamil | How to increase sperm count at home in tamil | Sperm count increase foods tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்