Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cuddling Therapy: ‘கட்டிப்பிடி வைத்தியம்’ – ஆனா ஃபீஸ் தான் கொஞ்சம் ஜாஸ்த்தி…!!

Nandhinipriya Ganeshan July 16, 2022 & 10:00 [IST]
Cuddling Therapy: ‘கட்டிப்பிடி வைத்தியம்’ – ஆனா ஃபீஸ் தான் கொஞ்சம் ஜாஸ்த்தி…!!Representative Image.

Cuddling Therapy: கமல் நடித்த “வசூல் ராஜா” படத்தில் அறிமுகமானது தான் இந்த கட்டிப்பிடி வைத்தியம். இதை சும்மா சொல்லவில்லை, இதன் பின்னால் பெரிய அறிவியல் காரணம் இருக்கிறது. அதாவது, மன அழுத்தத்தை குறைக்க சில வகையான தொடுதல்கள் உதவுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன.

அந்தவகையில், ஒருவர் அன்போடு ஒருவரை கட்டிப்பிடிப்பதன் மூலம் உடலில் மன அழுத்தத்தை குறைக்க உதவும் ஆக்ஸிடாஸின் அளவு அதிகளவு வெளியிடப்படுகிறது. இதன் மூலம் ஒரு மனிதன் மன அழுத்ததிலிருந்து எளிதில் விடுபடுகிறான். இதற்காக பல ஆய்வுகளும் நடத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், அடிக்கடி கட்டிப்பிடிப்பதன் மூலம் ஒரு நபர் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படுவதாகவும் உடலில் வலி நிவாரணிகளாக செயல்படுவதாகவும் (Cuddle therapy benefits in tamil) விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் நன்மைகளை உணர்ந்த கனடா நாட்டை சேர்ந்த ட்ராவர் ஹூர்ட்டன் என்ற 30 வயது இளைஞர் இதை ஒரு தொழிலாகவே செய்து வருகிறார். இவர் ஒரு மணிநேரம் கட்டிப்பிடிப்பதற்காக இந்திய மதிப்பில் 7000 ரூபாய் வரை வசூலிக்கிறாராம். வசூல் ராஜா படத்தில் வரும் கட்டிப்பிடி வைத்தியம் போல இந்த இளைஞரின் தெரிபிகள் அமைவதாக பலரும் சொல்கிறார்கள். இது சம்மந்தமாக இந்த இளைஞர் சமூகவலைதளங்களில் இப்போது வைரலாகியுள்ளார்.

கட்டிப்பிடிப்பதை ஆமாசமாக பார்க்கும் வரை ஆமாசமாக தான் தெரியும். ஆனால் அதை ஒரு தெரபியாக பார்க்கும் போது உடலில் பல நன்மைகளை பெற முடியும் என்கிறார் இந்த இளைஞர்.

Tags:

Cuddling therapy | Cuddling therapist | Cuddle therapy cost | Cuddle therapy benefits in tamil | Professional cuddling | Kattipudi Vaithiyam


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்