Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Stop White Discharge Naturally in Tamil: 7 நாட்களில் வெள்ளைப்படுதல் முழுமையாக குணமாக வீட்டு வைத்தியம்…!!

Nandhinipriya Ganeshan July 14, 2022 & 14:00 [IST]
How to Stop White Discharge Naturally in Tamil: 7 நாட்களில் வெள்ளைப்படுதல் முழுமையாக குணமாக வீட்டு வைத்தியம்…!!Representative Image.

How to Stop White Discharge Naturally in Tamil: அனைத்து பெண்களுமே சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகளில் வெள்ளைப்படுதலும் ஒன்று. பொதுவாக, பருவம் அடையும் வயதில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கும், மாதவிலக்கு நாட்களுக்கு முன்னரும், கர்ப்பிணி பெண்களுக்கும் இந்த பிரச்சனை சாதாரணமாகவே இருக்கும். அதாவது, பெண் உறுப்பில் உள்ள சுரப்பிகள், இறந்த செல்கள், பாக்டீரியாக்களை வெளிவேற்றும். இதை தான் ‘வெள்ளைப்படுதல்’ என்போம்.

ஒரு சில பெண்களுக்கு இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனை எப்போதும் இருந்துக் கொண்டே இருக்கும். அதை அப்படியே கண்டுக்கொள்ளாமல் இருக்க கூடாது. ஏனென்றால், உடலில் வேறு ஏதாவது பிரச்சனை இருப்பதை காட்டும் அறிகுறியாகக் கூட இருக்கலாம். இந்த வெள்ளைப்படுதல் அதிகரிக்கும் போதும், துர்நாற்றம் வீசும் போதும், முக்கியமாக நிறம் மாறி இருந்தாலோ மருத்துவரிடம் சென்று அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வெள்ளைப்படுதல் குணமாக வீட்டு வைத்தியம்:

பொதுவாக, உடல் சூடு காரணமாக அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படலாம். இதை வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே சரி செய்துவிட இயலும்.

❖ பதநீர், இளநீர், மோர், நன்னாரி சர்பத் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் உடல் சூடு குறையும். இதன் மூலம் வெள்ளைப்படுதலும் படிப்படியாக குறையத் தொடங்கும்.

❖ வெந்தயம், வெட்டி வேர், சப்ஜா விதைகள் போன்றவற்றில் ஒன்றை இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் சூடு தணியும்.

❖ கர்ப்பப்பை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் சிறந்த மருந்து கற்றாழை. எனவே, தொடர்ந்து 48 நாட்களுக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்து குடித்து வர உடலில் சூடு தணிந்து வெள்ளைப்படுதல் முழுமையாக குணமாகிவிடும்.

❖ இந்த வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாக தினமும் மாதுளை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், நெல்லிக்காய், தென், வாழைப்பழம், தேங்காய் பூ, வெள்ளரிக்காய் போன்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

❖ சைனஸ், ஆஸ்துமா, தலைவலி போன்ற பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பிறகு இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த செடிகள் வீட்டில் இருந்தால் செல்வ அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கலாமா?

அடேங்கப்பா.. வாயடைத்து போக வைக்கும் தென்னிந்திய நடிகைகளின் சொத்து மதிப்பு.. யார் டாப் தெரியுமா?

கெட்டியான தயிருக்கு இனி 8 மணி நேரம் வெயிட் பண்ண தேவையில்ல.

மாதவிடாய் வலியை போக்கும் சூப்பரான வீட்டு வைத்தியம்.

Tags:

How to stop white discharge naturally in tamil | White discharge reason in tamil | White discharge treatment in tamil | White discharge remedy in tamil | What is white discharge in tamil | Home remedies for white discharge in tamil | How to cure white discharge in tamil | What to eat to stop white discharge in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்