Abhaya Hridaya Mudra benefits: அபய ஹிருதய முத்ரா என்பது ஒரு புதிய நிலை யோகா சைகை, இது காதலுக்கான முத்ரா என்றும் சொல்லுவார்கள். சமஸ்கிருதத்தில் 'அபயா' என்றால் அச்சமின்மை; 'ஹிருதய' என்றால் இதயம், 'முத்ரா' என்றால் முத்திரை என்று பொருள். இந்த முத்திரையை காதலுக்கான முத்திரை என்று சொல்ல என்ன காரணம் தெரியுமா? இது ஒரு குறியீட்டு சைகையாகும், இது உங்கள் இதயத்தைப் பின்தொடர தைரியத்தைக் கண்டறிய உதவுகிறது. பொதுவாக, இந்த முத்திரை உங்களை உங்கள் இதயத்துடன் இணைத்து, உண்மையாகவும், வலிமையுடனும் நடந்துக்கொள்ள உதவுகிறது. இது உங்களின் அனைத்து அச்சங்களையும் நீக்கி உங்களை தைரியமாக ஆக்குகிறது மேலும் அமைதி மற்றும் பாதுகாப்பையும் பிரதிபலிக்கிறது. சித்தி மந்திரம் மற்றும் குண்டலினி தந்திரத்தை பயிற்சி செய்பவர்களுக்கு முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் உள்ள குண்டலினி சக்தியை செயல்படுத்தவும், புத்துயிர் பெறவும் அபய ஹிருதய முத்ரா அவசியம். இந்த முத்திரை மற்ற யோகா சைகளில் மிகவும் பிரபலமானது.
அபய ஹிருதய முத்ரா ஸ்டெப் பை ஸ்டெப் | Abhaya Hridaya Mudra Steps
படி 1: உங்கள் உடலையும் மூளையையும் ரிலாக்ஸ் செய்யுங்கள்.
படி 2: உங்கள் மார்பின் முன் அஞ்சலி முத்ராவை (பிரார்த்தனை நிலை) அமைக்க உங்கள் கைகளை ஒன்றாகக் கொண்டு வாருங்கள்.
படி 3: உங்கள் மார்பெலும்புக்கு முன்னால் இடது மணிக்கட்டில் வலது மணிக்கட்டைக் கடக்கவும். உங்கள் உள்ளங்கைகள் எதிர் திசையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
படி 4: இப்போது நடுவிரல், ஆள்காட்டி விரல், மற்றும் சுண்டுவிரலை ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொள்ளுங்கள்.
படி 5: அடுத்து மோதிர விரலை கட்டை விரலை தொடுமாறு இணைக்கவும். இது உங்களை இதயத்துடன் இணைக்கிறது.
நேரம் மற்றும் நிலை:
அபய ஹிருதய முத்ராவின் (abhaya mudra benefits) பலன்கள்:
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…