ஜனவரி மாத ஆரம்பத்தில்புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து சில நாட்களில் பொங்கல் பண்டிகை வந்தது. அதிலும் புதிதாகச் சுவையான உணவுகள் எதுவும் முயற்சி செய்யவில்லை என யோசிக்கிறீங்களா?. கவலை வேண்டாம் வருகின்ற 74வது குடியரசு தின விழா ஜனவரி 26அன்று கொண்டாடப்பட உள்ளது.
நம் தேசப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் நமது பழங்கால உணவான இட்லியை வித்தியாசமாக செய்து பார்க்கலாம். சரி வாங்க, மூவர்ண இட்லி (Tricolor Idli) எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
✤இட்லி மாவு - 3கப்
✤வெண்ணெய் - 1 டீஸ்பூன்
✤துருவிய கேரட் - 1 கப் (ஆரஞ்சு நிறத்திற்கு)
✤கீரை கூழ் - 1 கப் (பச்சை நிறத்திற்கு)
✤முதலில் ஒரு கப் துருவிய கேரட்டை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து எடுத்தால் கேரட் கூழ் கிடைக்கும். அதை ஒரு கப் அளவு இட்லி மாவுடன் சேர்த்து நன்றாகக் கலந்தால் ஆரஞ்சு நிறம் கிடைக்கும்.
✤மற்றொரு பாத்திரத்தில் அரைத்த கீரை கூழ் மற்றும் ஒரு கப் அளவிற்கு மாவு சேர்த்து நன்றாகக் கலந்து கொண்டால் பச்சை நிறம் கிடைக்கும்.
✤மூன்றாம் கப் மாவில் எதையும் சேர்க்காமல், ஒரு கப் அளவு மாவை எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது இட்லி பாத்திர தட்டில் வெண்ணெய்யை தேய்த்து அதில் கலந்து வைத்துள்ள மாவை (பச்சை கலவை மாவு, ஆரஞ்சு கலவை மாவு, வெள்ளை கலவை மாவு) தனித்தனியாக ஊற்றி அதை நன்றாக வேக வைக்கவும்.
✤சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சூடான சுவையான நம் தேசப் பற்று மிக்க மூவர்ண இட்லி தயார்.
அனைவருக்கும் இனிய குடியரசு தின விழா நல்வாழ்த்துக்கள்!!!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…