Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுயிங் கம் சாப்பிடுவதால் இவ்வளவு பக்கவிளைவுகளா..? - இளைஞர்களே உஷார்.. | Chewing Gum Side Effects in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
சுயிங் கம் சாப்பிடுவதால் இவ்வளவு பக்கவிளைவுகளா..? - இளைஞர்களே உஷார்.. | Chewing Gum Side Effects in Tamil Representative Image.

நம்மில் பலரும் நாள்தோறும் சந்திக்கக்கூடிய சங்கடமான விஷயம் வாய்துர்நாற்றம். பல்வேறு காரணங்களால் ஏற்படும் இந்த வாய்துர்நாற்றத்தை சமாளிப்பதற்காக தினமும் சுயிங் கம் சாப்பிடுவோம். இந்த சுயிங் கம் சாப்பிடுவதால் வாய்துர்நாற்றத்தை நீக்குவதோடு, வாயை ஃபிரஸாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இது ஒரு காரணம் என்றாலும் கூட, ஸ்டைலுக்காக சாப்பிடுபவர்களும் உண்டு. அதையே பழக்கமாகவும் வைத்திருப்பார்கள். ஏன் இது ஒரு ட்ரெண்டாகவும் இருந்து வருகிறது.

ஆனால், தினமும் சுயிங் கம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துகளை தெரிந்தும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்களை இதை சாப்பிட்டு வருகின்றனர். காரணம் முன்பெல்லாம் சுயிங் கம் என்பது மரங்களின் பட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்டன. ஆனால், இப்போதெல்லாம் பெரும்பாலான சுவிங் கம்கள் செயற்கை ரப்பர்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இது உடலுக்கு மிகவும் கெடுதல்களை விளைக்கக்கூடியவை. இந்த பதிவில் அடிக்கடி சுயிங் கம் சாப்பிடுவதால் ஏற்படும் மோசமான பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

சுயிங் கம் பக்கவிளைவுகள்:

➥ நாம் சுயிங் கம்மை அடிக்கடி மென்று சாப்பிடுவதால், பல் சொத்தை, துவாரங்கள் மற்றும் ஈறுகளில் நோய் போன்ற பல் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதுமட்டுமல்லாமல், சுயிங் கம்மில் இருக்கக்கூடிய சர்க்கரை பற்களின் ஈறுகளை படிப்படியாக சேதப்படுத்தும். இதனால் சிறியவயதிலேயே பற்கள் விழுந்துவிடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

➥ மேலும், நாம் தொடர்ந்து ஒரு பொருளை வாயில் போட்டு மெல்லும்போது தாடை தசைகள் வலுவிழந்து போகின்றன. அந்தவகையில், இந்த சுயிங் கம்மை தினமும் வாயில் போட்டு மென்றுக் கொண்டே இருந்தால் தாடை பகுதி சதை வலுவிழந்து, மற்ற பொருட்களை மென்று சாப்பிடும்போது தாடையில் ஒரு விதமான வலியை ஏற்படுத்தவும் காரணமாகின்றன.

➥ வாயின் ஒரு பக்கத்தை மட்டும் அதிகமாக அசைப்பதால் தாடையில் இருக்கும் தசைநார்கள் பலவீனமடைந்து, நாளடைவில் பல்வலி, காதுவலி, தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

➥ நாம் சுயிங் கம்மை மெல்லும்போதும் அதிகப்படியான காற்று நம் வயிற்றுப் பகுதிக்கு செல்கிறது. இதன் விளைவு அடிக்கடி தசைப்பிடிப்பு, வயிற்று வலி, குடல் வீக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

➥ மேலும், இதில் இருக்கும் செயற்கை இனிப்புகளான சோர்பிடால் மற்றும் மன்னிடோல் போன்றவை வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்