Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Avocado health benefits in tamil: அவகேடோ பழத்தின் 8 ஆரோக்கிய நன்மைகள்!

Manoj Krishnamoorthi August 18, 2022 & 10:45 [IST]
Avocado health benefits in tamil: அவகேடோ பழத்தின் 8 ஆரோக்கிய நன்மைகள்!Representative Image.

Avocado health benefits in tamil: அவகேடோ பழம் (வெண்ணெய் பழம்) ஒரு வகை கல் பழமாகும், மேலும் இது அலிகேட்டர் பேரிக்காய் அல்லது வெண்ணெய் பழம் என்றும் அழைக்கப்படும். இந்த பழம் சூடான காலநிலையில் நன்றாக வளரும் தன்மையும் கிரீம் சுவையும் கொண்டதாகும். பல்வேறு வகைகளில் கிடைக்கும் இதை சூப்பர் பழம் என்றே கூறலாம். இந்த அற்புதமான பழம் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பிய ஊட்டச்சத்து நிறைந்தாகும். 

அவகேடாவின் வகைகள்

பல்வேறு அளவு, நிறம், வடிவங்களில் கிடைக்கும் இந்த வெண்ணெய் பழத்தின் (அவகேடா) பிரபலமான வகைகளைக் காண்போம்.

  • ஹாஸ் அவகேடோ (Haas avocado)- ஓவல் வடிவத்தில்/ பேரிக்காய் போல, அடர்த்தியான தோல் உடன் நன்கு பழுத்த பிறகு பச்சை நிறத்திலிருந்து அடர் ஊதா நிறமாக மாறும்.
  • பேக்கன் அவகேடோ (Bacon avocado)- ஓவல் வடிவத்தில், நடுத்தர அளவிலான, பச்சை நிற தோல் மற்றும்  பிரகாசமான மஞ்சள் சதையுடன்  இருக்கும்.
  • மாலுமா அவகேடோ (Maluma avocado)- பேரிக்காய் வடிவத்தில் கூழாங்கல் போல கரடுமுரடான அடர் ஊதா நிற தோலைக் கொண்ட பெரிய பழம் ஆகும்.
  • சோகட்டி அவகேடோ (Choquette avocado)- ஓவல் வடிவத்தில், மென்மையான மற்றும் பளபளப்பான தோல் உடன் அதிக நீரை உள்ளடக்கம் கொண்ட மிகவும் பெரிய பழமாகும்.
  • ஃயூர்ட் அவகேடோ (Fuerte avocado)- பேரிக்காய் வடிவில்  நடுத்தர அளவு கொண்ட பச்சை தோலுள்ள தடிமனான பழமாகும், மேலும் இது தோலுரிக்க எளிதானது.
  • மெக்ஸிகோலா அவகேடோ (Mexicola avocado)- முட்டை வடிவ  கருப்பு நிறம் கொண்ட சிறிய பழம். மிருதுவாகவும் பளபளப்பாகவும் உடையக்கூடிய தோலுடன் இருக்கும் பழமாகும்.
  • ஷார்வில் அவகேடோ (Sharwil avocado)- பேரிக்காய் வடிவ  நடுத்தர அளவில் கரடுமுரடான பச்சை தோல் மற்றும் மஞ்சள்-பச்சை சதை கொண்ட பழமாகும். 

மேற்குறிப்பிட்ட வகைகளில், ஹாஸ் அவகேடோ (Haas avocado) உலகம் முழுவதும் பிரபலமானது.

VKDBஇன் அபாயத்தைக் குறைக்கிறது

வைட்டமின் K குறைபாட்டால் உடலில் உருவாகும் குறைபாடே வைட்டமின் K  குறைபாடு இரத்தபோக்கு (VKDB) ஆகும். பொதுவாக இது கர்ப்ப காலத்தில்  வைட்டமின் கே  சத்துகளை குறைவாக உட்கொள்வதால் வரும்.  இந்த குறைபாடு முக்கியமாகத் தாயிடமிருந்து  பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும்,  இந்த நிலை புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இரத்தத்தில் போதுமான வைட்டமின் K இல்லாத இரத்தபோக்கை ஏற்படுத்தும்.

எனவே கர்ப்பிணிப் பெண்கள் வைட்டமின் K நிறைந்த உணவுகளை போதுமான அளவு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 40% வைட்டமின் K நிறைந்த அவகேடா பழத்தை தினமும் உட்கொள்ளுவது நல்லதாகும். முக்கியமாக அவகேடா பழத்தைக் கர்ப்ப காலத்தில்  சேர்ப்பது புதிதாகப் பிறந்த குழந்தைகளில் VKDB அபாயத்தைக் (avocado fruit benefits) குறைக்கலாம்.

கொலஸ்ட்ராலை பராமரித்தல்

சிறந்த அளவு பீட்டா-சிட்டோஸ்டெரால் உள்ள அவகேடா பழம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும் இது LDL மற்றும் HDL கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்த அவகேடா இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே ஒரு நாளைக்கு 100 கிராம் அவகேடா பழத்தை உட்கொள்வது  இதய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

பார்வை திறனை அதிகமாக்குதல்

அவகேடா பழம் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் நிறைந்த பழமாகும், இந்த இரண்டு பைட்டோ கெமிக்கல்களும் கண்ணில் ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்பட்டு கண் பாதிப்பைக் குறைக்கும். முக்கியமாக, இது கண்புரை உருவாவதைத் தடுத்து பார்வைத் தெளிவை மேம்படுத்துகிறது. வழக்கமான உணவில் வெண்ணெய் பழத்தைச் சேர்ப்பது வயது தொடர்பான மாகுலர் சிதைவின் அபாயத்தையும் குறைக்கும். என்வே பார்வையை மேம்படுத்த, கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவு முறையில் சிலஅவகேடா  பழங்களைச் சேர்த்து கொள்ளுவோம்.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் அவகேடா

சரியான அளவு ஃபோலேட் உள்ள அவகேடா புற்றுநோய் செல்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு தடையாக செயல்படும். இதேபோல், குளுதாதயோன் ஒரு முக்கிய கலவை ஆகும், இது புற்றுநோய் செல்கள் உருவாவதைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த அற்புதமான பழத்தில் இருக்கும் கரோட்டினாய்டு மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு பெருங்குடல், வயிறு, வாய்வழி, மார்பகம், கர்ப்பப்பை வாய் மற்றும் கணைய புற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.  இது புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் உயிரணுக்களின் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது. எனவே, போதுமான பலன்களைப் பெற ஒரு கிளாஸ் அவகேடோ சாறு குடிக்கவும்.

வலிமையான எலும்பு தரும் அவகேடா

கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் துத்தநாகம் போன்ற கனிமங்களின் நிறைந்த அவகேடோவில் முக்கியமாக  எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் K கொண்டது ஆகும்.  பொதுவாக வைட்டமின் K ஐ விட  எலும்பு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வைட்டமின் D மற்றும் கால்சியம் தான் தேவை. ஆனால் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதில் வைட்டமின் K ஒரு சிறப்பு பங்கு வகிக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை ஆதரித்தல் மற்றும்  சிறுநீரில் கால்சியம்  வெளியேறுதலைக் குறைக்கிறது.

மேலும் அவகேடோவில் பரந்த அளவிலான பைட்டோகெமிக்கல்கள், ஃபிளாவனாய்டுகள், கரோட்டினாய்டுகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் தசைகள், திசுக்கள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதுடன் இடுப்பு அல்லது முழங்கால் ஆஸ்டியோபோரோசிஸையும் தடுக்கின்றது.

செரிமானத்திற்கு உதவும் அவகேடோ

தரமான உடலுக்கு சரியான ஊட்டச்சத்து எவ்வளவு அவசியமோ அதைப்போல் கழிவுகள் உடலில் இருந்து அகலுவதாகும். எனவே மலச்சிக்கலைத் தடுக்கவும்  ஆரோக்கியமான செரிமானப் பாதையை பராமரிக்கவும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். அவகேடோவில் இருக்கும் போதுமான நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கும். கூடுதலாக, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் குழந்தைகளின் அமிலத்தன்மையைக் குறைக்கலாம். எனவே நார்ச்சத்து போதுமான அளவு உட்கொள்வது வழக்கமான குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது, மேலும் இது மலம் வழியாக நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

சரும மற்றும் முடிகளுக்கு ஊட்டமளிக்கும் அவகேடோ 

ஆரோக்கியமான சருமத்தைப் பராமரிக்க தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அவகேடோவில் உள்ளது. UV கதிர்கள் மற்றும் வெயிலினால் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதில் கரோட்டினாய்டுகள் முக்கிய பொறுப்பு கொண்டதாகும்.  அவகேடோவுலுள்ள பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன், முதுமையைத் தடுத்து சருமத்தை ஒளிரச் செய்வதோடு (advantages of avocado) தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது.  

எடையைக் குறைக்க உதவும் அவகேடோ

நம் உடல் எடையைக் குறைப்பதில் அவகேடோவின் குறைவான கலோரிகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் சத்துகள் உதவுகிறது. எனவே இந்த பழத்தை வழக்கமான உணவில் சேர்ப்பது பருமனான நபர்களின் எடை இழப்பை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்