Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'ப்ரா' அணிவது நல்லதா? அறிவியல் சொல்லும் உண்மை...!!

Nandhinipriya Ganeshan August 10, 2022 & 09:25 [IST]
'ப்ரா' அணிவது நல்லதா? அறிவியல் சொல்லும் உண்மை...!!Representative Image.

இந்த காலத்திலும் ஒரு சில பெண்கள் 'ப்ரா' அணியாமல் தான் இருக்கிறார்கள். ஆனால், பலரோ அது இல்லாமல் வெளியில் கூட செல்வதில்லை. ஏனென்றால், ப்ரா அணிவது ஒரு சமூக கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வயதுக்கு வந்த இளம்பெண்கள் ப்ரா அணியாமல் பொது இடங்களுக்கு சென்றால் நம்ம கலாச்சார உலகம் அவர்களை அனுமதிப்பதில்லை. இப்படி ஒருபக்கம் இருக்க, பல பெண்கள் ப்ரா அணியாமல் இருந்தால் மார்பகங்கள் விரைவில் தொங்கிவிடும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். 

ஆனால், அது முற்றிலும் தவறான கருத்து என்கின்றனர் நிபுணர்கள். உண்மையில், ப்ரா அணிவதால் பெண்களுக்கு எந்த பலனும் கிடைப்பதில்லை, அதற்கு மாறாக பாதிப்பே அதிகம் என்று 15 ஆண்டுகால ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் 330 பெண்கள் கலந்துக் கொண்டனர்.

பெண்களே உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தா அலட்சியம் காட்ட வேண்டாம்...

ஆராய்ச்சியின் முடிவில், ப்ரா அணியும் பெண்களை காட்டிலும், ப்ரா அணியாமல் வாழ்ந்து வரும் பெண்களுக்கு மார்பகத்தை தாங்கும் இயற்கை சதைகள் வளர்ந்துள்ளதாகவும், மன அழுத்தமும் சற்று குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளன. அதேப்போல், பல வருடங்களாக ப்ரா அணிந்து வந்த பெண்களுக்கு இயற்கையாக வளரும் மார்பக திசுக்களின் வளர்ச்சி தடைபட்டு, மார்பகங்கள் மேலும் தொங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஆனால், பல ஆண்டுகளாக ப்ரா அணிந்து தற்போது நிறுத்துவதாலும் எந்த பலனும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையில், மார்பகங்களின் தொய்வு என்பது எத்தனை முறை அவர்கள் தாய்மையடைகின்றனர் என்பதை பொறுத்தே உள்ளதே தவிர, ப்ரா அணியாமல் இருப்பதால் அல்ல. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்