Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Egg Cutlet | Muttai Cutlet: மொறுமொறு ஸ்நாக்ஸ் முட்டை கட்லெட் செய்வது எப்படி…?

Nandhinipriya Ganeshan June 12, 2022 & 14:00 [IST]
How to Make Egg Cutlet | Muttai Cutlet: மொறுமொறு ஸ்நாக்ஸ் முட்டை கட்லெட் செய்வது எப்படி…?Representative Image.

How to Make Egg Cutlet in Tamil

தேவையான பொருட்கள்:

  • வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
  • வேகவைத்த முட்டை - 5
  • பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
  • வெங்காயம் - 1 சிறிய அளவு பொடியாக நறுக்கியது
  • மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி தூள் - 3/4 டீஸ்பூன்
  • உப்பு தேவைக்கேற்ப
  • வறுத்த சீரகப் பொடி - 3/4 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
  • பிரட்தூள் - 1 கப்
  • இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
  • கொத்தமல்லி இலை - 1/2 கப்
  • எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கை எடுத்து துருவி கொள்ளவும். அதில் 5 வேக வைத்த முட்டைகளை பொடிபொடியாக நறுக்கி போடவும். 

நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். இப்போது மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும்.


அனைவரும் விரும்பும் டேஸ்ட்டான ரோஜா பூ ஜாம்… இதை சேர்த்துக் கொண்டால் உடலில் இந்த பிரச்சனையே வராது….


வறுத்த சீரகப் பொடி மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்துக் கொள்ளவும். இதை அனைத்தையும் ஒரு கரண்டியை பயன்படுத்தி நன்றாக கலந்து கொள்ளவும். 

இப்போது மசாலாவில் ஒரு சிறிய எலுமிச்சை அளவு பகுதியை எடுத்து நன்றாக தட்டவும். மசாலா ஒட்டும் தன்மையுள்ளதாக உணர்ந்தால், உங்கள் உள்ளங்கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளலாம்.

எல்லா மசாலாவையும் கட்லட் வடிவில் தட்டி வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து நன்றாக கலக்கி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

மற்றொரு தட்டில் பிரட் தூளை எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது தட்டி வைத்த கட்லட் உருண்டைகளை ஒவ்வொன்றாக முதலில் முட்டையில் தோய்த்து, பின்னர் பிரட் தூளில் நன்றாக பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.


Nayanthara Wedding Jewellery: நயன்தாரா திருமணத்தில் தாலி மட்டும் தான் தங்கம்.... வாய்பிளக்க வைக்கும் நகைகளின் மதிப்பு....


இப்போது பிரட்டி எடுத்த கட்லட் உருண்டைகளை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற விடுங்க. 

ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் போதுமான அளவு சூடானதும், கட்லட் உருண்டைகளை மெதுவாக போட்டு பொரித்துக் கொள்ளவும்.

குறைந்த தீயில் எல்லா பக்கமும் நன்றாக வேகும் படி அதை திருப்பி திருப்பி விடுங்க. இப்போது கட்லட் பொன்னிறமாக மாறியதும், எண்ணெயிலிருந்து வடிகட்டி எடுத்து வைக்கவும். 

இப்போது சூடான, சுவையான, மொறுமொறு முட்டை கட்லெட் (Muttai Cutlet) தயார்...

இதை வீட்டில் தக்காளி சாஸ் அல்லது சில்லி சாஸ் அல்லது மயோனைஸ் இருந்தால் அதில் தொட்டு சாப்பிடலாம். சுவை இன்னும் தூக்களாக இருக்கும். 


How to Make Palapalam Biriyani in Tamil: சுவையான பலாப்பழ பிரியாணி ரெடி….! இப்படி செஞ்சு அசத்துங்க…. 


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


Ajith Kumar Life History Tamil: பர்த்டே ஸ்பெஷல்… தல அஜித்குமாரின் கூலான லைஃப் ஸ்டைல்….


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்