Mon ,Apr 22, 2024

சென்செக்ஸ் 73,694.27
605.94sensex(0.83%)
நிஃப்டி22,362.00
215.00sensex(0.97%)
USD
81.57
Exclusive

Beetroot Benefits in Tamil: உங்களுக்கு பீட்ரூட் பிடிக்காதா? அப்போ இத்தன நன்மைகளை மிஸ் பண்ணிட்டு இருக்கிங்க...!

Nandhinipriya Ganeshan August 03, 2022 & 18:30 [IST]
Beetroot Benefits in Tamil: உங்களுக்கு பீட்ரூட் பிடிக்காதா? அப்போ இத்தன நன்மைகளை மிஸ் பண்ணிட்டு இருக்கிங்க...!Representative Image.

Beetroot Benefits in Tamil: பொதுவாக, நம்மில் பலருக்கும் பீட்ரூட் காய்கறியை சமைத்தாலே சாப்பிட பிடிக்காது. ஏனெனில், அதன் இனிப்பு சுவை சிலருக்கு பிடிக்காமல் போய் விடுகிறது. இதனாலேயே ஏகப்பட்ட அற்புதமான நன்மைகளை கொண்ட பீட்ரூட்டை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம். இதில் இருக்கும் சில சேர்மங்கள் மற்ரும் தாதுக்கள் மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. எனவே, அன்றாட உணவில் இதையும் ஒரு பகுதியாக சேர்த்துக்கொண்டால் உடலுக்கு அத்துனை நன்மைகள் கிடைக்கும். இதன் விலை மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானதுதான். இப்போது உடலுக்கு தேவையான அத்தனை அத்தியாவசியத்தையும் தன்னுள் வைத்திருக்கும் பீட்ரூட் காயின் மகத்துவத்தை (beetroot health benefits in tamil) பற்றி தெரிந்துக் கொள்வோம். 

இருதய நலன் 

இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் என்ற அமினோ அமிலம் உள்ளது. ஒருவேளை உடலில் ஹோமோசைஸ்டீன் அளவு அதிகரித்தால், அது இதய நோய்க்கு தான் வழிவகுக்கும். பீடைன், ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி6 மற்றும் பி12 ஆகியவை இணைந்தால், ஹோமோசிஸ்டீன் உற்பத்தி குறைகிறது. இந்த அனைத்து ஊட்டச்சத்துகளும் பீட்ரூட்டில் காணப்படுகிறது. எனவே, இதய நோய் பிரச்சனையில் இருந்து தப்பிக்க பீட்ரூட்டை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், பொதுவாக இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது உயர் இரத்த அழுத்தம். பீட்ரூட் ஜூஸில் (beetroot juice in tamil) உள்ள நைட்ரேட் இரத்த அழுத்தத்தைக் குறைத்து உங்க இதயத்தை பல பிரச்சனைகளிலிருந்து காக்கிறது.

ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு

பீட்ரூட்டில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது அல்லது நேரடியாக கூந்தலில் தடவுவது, முடி உதிர்தல் மற்றும் முடி உடைவதைத் தடுக்கும். பீட்ருட் காயை வேகவைக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரைக் கொண்டு உங்கள் தலைமுடியை மசாஜ் செய்யவும், இது பொடுகுத் தொல்லையைக் குணப்படுத்த உதவுகிறது.

சருமச் சுருக்கமா? 

பீட்ரூட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் வயதான அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. மேலும், பீட்ஸில் உள்ள ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் ஏ ஆகியவை உங்கள் சருமத்தை சுருக்கங்கள் மற்றும் பிற சரும பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் புற ஊதா கதிர் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

சரும அழகிற்கு

பீட்ரூட்டில் சக்திவாய்ந்த நச்சு நீக்கும் பண்புகள் இருக்கின்றன, அவை உங்கள் சருமத்தை பிரகாசமாக்கவும், கருவளையங்களைக் குறைக்கவும், நிறமிகளை (pigmentation) குறைக்கவும் உதவுகிறது. மேலும், பீட்ரூட் ஜூஸ் தினமும் குடித்துவந்தால், பருக்கள் மற்றும் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து வடுபடலாம். இரத்ததை சுத்தம் செய்து ருமத்திற்கு இயற்கையான பளபளப்பையும்  நிறத்தையும் அளிக்கிறது.

இரத்த அழுத்தம்

பீட்ரூட்டில் இருக்கும் அதிகளவு நைட்ரேட்ஸ் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றப்படுகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் அதன் சுழற்சியை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தை சமன் செய்யலாம். அதுமட்டுமல்லாமல், பக்கவாதம், மாரடைப்பு, இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். இந்த வேர் காய்கறி உடலில் வீக்கம், வலி மற்றும் பிற அசௌகரியங்களில் இருந்தும் பாதுகாக்கிறது. 

புற்றுநோய்க்கு 

பீட்ரூட்டில் உள்ள பீட்டாலைன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் செல் சேதம் மற்றும் புற்று நோய் வராமல் தடுக்கிறது. பீட்டாசயனின், ஒரு தாவர நிறமி, இது உடலில் தீங்கு விளைவிக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செல்களைப் பாதுகாக்கிறது. வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் சத்தான உணவுகள் புற்றுநோயைத் தடுக்கவும் தோற்கடிக்கவும் உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

கல்லீரல் பிரச்சனையா?

பீட்ரூட்டில் பீடைன் உள்ளது, இது நச்சுகள் மற்றும் கழிவுகளை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மேலும், கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுத்து அதன் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

இரத்த சோகைக்கு சிறந்த மருந்து

உங்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் இரத்த சிவப்பணுக்களை சாதாரண அளவை விட குறைவாக இருந்தால், அது இரத்த சோகை நோயை ஏற்படுத்துகிறது. ஹீமோகுளோபின் இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவும், மேலும் ஹீமோகுளோபின் இல்லாததால் முக்கிய உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனின் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுவாக இரும்புச்சத்து குறைபாடும் இரத்த சோகையை ஏற்படுத்தும். பீட்ரூட்டில் இரும்புச்சத்து (benefits of beetroot in tamil) அதிகளவில் உள்ளதால் இது இரத்த சோகையை கட்டுப்படுத்துவதோடு, இரத்தில் உள்ள ஹிமோகுளோபின் அளவையும் அதிகரிக்கச் செய்கிறது.

Tags:

Beetroot juice benefits in tamil, Beetroot Benefits in Tamil, Beetroot health benefits in tamil, Beetroot juice in tamil, Benefits of beetroot in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்