Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

வரகு அரிசி வெண் பொங்கல் செய்யும் முறை. | How to Make Varagu Arisi Ven Pongal

Gowthami Subramani Updated:
வரகு அரிசி வெண் பொங்கல் செய்யும் முறை. | How to Make Varagu Arisi Ven PongalRepresentative Image.

தை மாதம் என்றாலே, தைப் பொங்கல் தான் முதலில் நினைவுக்கு வருவது. சிறப்பு வாய்ந்த தை மாதத்தில், பொங்கல் வைத்து, வழிபட்டு போகி, காணும், மாட்டுப் பொங்கல் என பொங்கல் வைத்து வழிபடுவர். அந்த வகையில், உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையிலும் ருசியாகவும் வேண்டுமென்றால், வரகு அரிசி வெண்பொங்கலைச் செய்யலாம். இதில், வரகரிசி வெண்பொங்கல் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

வரகு அரிசி வெண்பொங்கல்

தினந்தோறும் காலை உணவாக இந்த வரகு அரிசி வெண்பொங்கலை எடுத்துக் கொள்வது உடலுக்கு நன்மை தரக் கூடியவையாக இருக்கும். ஒரு சிலருக்கு வெண்பொங்கல் என்றாலே ஆகாது. ஆனால், இதில் கொடுக்கப்பட்டுள்ளவாறு வரகு அரிசியைப் பயன்படுத்தி, வெண்பொங்கல் செய்தால் அவ்வளவு எளிதாக இதன் ருசியை மறக்க மாட்டார்கள். சரி வாங்க.. வரகு அரிசி வெண் பொங்கல் எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காணலாம்.

வரகு அரிசி வெண் பொங்கல் செய்யும் முறை. | How to Make Varagu Arisi Ven PongalRepresentative Image

வரகு அரிசி வெண் பொங்கல் தயாரிக்க தேவையானவை

வரகு அரிசி – 1 கப்

பருப்பு – ¼ கப்

இஞ்சி – 1 துண்டு

முழு மிளகு – 1 டீஸ்பூன்

ஜீரா – 1½ டீஸ்பூன்

நெய் – 4 டீஸ்பூன்

தண்ணீர் – 3½ கப்

முந்திரி – 4

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

வரகு அரிசி வெண் பொங்கல் செய்யும் முறை. | How to Make Varagu Arisi Ven PongalRepresentative Image

வரகு அரிசி வெண் பொங்கல் செய்யும் முறை

✤ முதலில் இஞ்சி, முழு மிளகு, ஜீரா உள்ளிட்டவற்றை கரடுமுரடான பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

✤ பின், தினை மற்றும் பருப்பை ஒன்றாகக் கழுவி, உப்பு சிறிதளவு சேர்த்து, குக்கரில் வைக்கவும்.

✤ அதன் பிறகு, 6 விசில்களுக்கு அதிகமாக வந்தவுடன், 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும்.

✤ பின், பிரஷர் குக்கரைத் திறந்து அதில் சமைத்த அரிசியை நன்றாக மசிக்கவும்.

✤ சாதத்தின் மேல் இஞ்சி பொடிகலவை மற்றும் கறிவேப்பிலையைப் போட வேண்டும்.

✤ பிறகு, நெய்யை சூடாக்கி முந்திரியை வறுத்து, நெய்யுடன் அரிசியில் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.

✤ இப்போது தயாரான வரகு அரிசி வெண்பொங்கலை சட்னியுடன் சூடான பரிமாறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்