Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Manuka Honey Benefits in Tamil: நீங்கள் யாராவது மனுகா தேன் கேள்வி பட்டிருக்கீர்களா? அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு இதுல..??

Priyanka Hochumin August 20, 2022 & 12:30 [IST]
Manuka Honey Benefits in Tamil: நீங்கள் யாராவது மனுகா தேன் கேள்வி பட்டிருக்கீர்களா? அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு இதுல..??Representative Image.

Benefits of Consuming Manuka Honey: நீங்கள் யாராவது மனுகா தேன் கேள்வி பட்டிருக்கீர்களா? நமக்கு மலைத் தேன் தான் தெரியும், இது என்ன மனுகா தேன்? அப்படி இதில் என்ன சிறப்பு இருக்கிறது? என்பதை பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும். 

இந்த மனுகா தேன் நியூஸிலாந்து பகுதியில் உருவாகும் ஒரு வகையான தேனாகும். லெப்டோஸ்பெர்மம் ஸ்கோபேரியம் என்ற பூ செல்லமாக மனுகா புஷ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூவில் தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதன் மூலம் நிலையான தேனை விட அதிக ஆற்றல் கொண்ட தேனை உற்பத்தி செய்கிறது. இதனுடைய ஸ்பெஷல் எது என்றால், இயற்கையாக நிகழும் சேர்மமான (compound) மெத்தில்கிளையாக்சால் (MGO) அதிக செறிவு (higher concentration) இருப்பதால், இது மிகவும் சிறப்பு வாய்ந்த தேனாக கருதப்படுகிறது. எல்லா தேனிலும் அதற்கென்று சில ஆண்டிபயாடிக் குணங்கள் உள்ளன. 

நார்மல் அல்லது சாதாரண தேனில் ஹைட்ரஜன் பெராக்சைடு இந்த நன்மையை வழங்குகிறது. ஆனால் அதே சமயம் மனுகா தேனில், இது தனித்துவமான மனுகா காரணி (Unique Manuka Factor [UMF]) ஆகும். UMF என்பது தேனின் பாக்டீரியா எதிர்ப்பு வலிமையின் (honey’s antibacterial strength) ஒவ்வொரு தொகுதியையும் அளவிட 5 - 20 அளவைப் பயன்படுத்தும் ஒரு கிரேடிங் சிஸ்டம் அமைப்பாகும். மனுகா தேனில் உள்ள மூன்று இயற்கை காம்பௌண்ட்களை UMF-ஐ தீர்மானிக்கிறது.  

  • லெப்டிஸ்பெரின் - மனுகா புஷ்ஷில் இருந்து தேன்.
  • DHA - ஒரு வகை ஒமேகா-3 கொழுப்பு அமிலம்.
  • Methylglyoxal - ஒரு பாக்டீரியா எதிர்ப்பு கூறு. 

UMF எண் மனுகா தேனின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு நேரடியாக விகிதாசாரமாகும் (directly proportional). எனவே, எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, தேனின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அந்த அளவுக்கு வலுவானவை ஆகும். 

மனுகா தேனின் சில நன்மைகள்

1. காயங்கள் குணமடைய உதவுகிறது:

பல நூற்றாண்டுகளாக தேன் - தீக்காயங்கள், காயங்கள் மற்றும் கொதிப்புகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டு (healing benefits of manuka honey) வருகிறது. தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காயப்பட்ட இடத்தில் ஈரமான அல்லது குளிர்ச்சியான சூழலைக் கொண்டு பராமரிக்கிறது. மேலும் தோலில் நேரடியாக பயன்படுத்தும் பொழுது, அது நமக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக பயன்படுகிறது. நமக்கு காயம் ஏற்பட்டால், நிறைய தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் தேனை தடவிய பின்பு, அது பாக்டீரியாவின் வளர்ச்சியைக் குறைப்பதன் மூலம் காயத்தில் மைக்ரோபியல் தொற்றுகளைத் தடுக்கிறது. மனுகா தேன் நமக்கு செய்யும் நன்மைகள்,

  • வீக்கத்தைக் குறைக்கிறது (reduces inflammation)
  • வேகமாக காயம் குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது (promotes wound healing)
  • திசு மீளுருவாக்கம் அதிகரிக்கிறது (increases tissue regeneration)
  • தீக்காயங்களால் ஏற்படும் வலியைக் குறைக்கிறது (reduces pain caused by burns).

2. ஓரல் ஹெல்த்தை மேம்படுத்துகிறது:

உங்களின் பல் சிதைவைத் தவிர்க்க மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். மேலும் பிளேக் உருவாவதற்கு காரணமான தீங்கு விளைவிக்கும் வாய்வழி பாக்டீரியாவைக் குறைப்பது மிகவும் முக்கியம். அதுவே, உங்கள் வாயை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் நல்ல வாய்வழி பாக்டீரியாவை முழுமையாக வைத்திருக்க வேண்டும். பிளேக் உருவாக்கம், ஈறு அழற்சி (gum inflammation) மற்றும் பல் சிதைவு ஆகியவற்றை ஏற்படுத்தும் கெட்ட வாய்வழி பாக்டீரியாவை, மனுகா தேன் போராடி அளிக்கிறது. 

3.  தொண்டை வலியை ஆற்றும்:

வெதுவெதுப்பான தேன் மற்றும் லைம் வாட்டர் சளிக்கு பயன்படுத்தும் ஒரு பரம்பரியமான கை வைத்தியமாகும். மேலும் இந்த மனுகா தேன் குறுகிய கால இருமல் அறிகுறிகளைக் குறைக்க வீட்டு வைத்தியங்களாகவும் பயன்படுத்தப்பட்டது. இதில் உள்ள ஆன்டிபாக்டீரியா மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் வலியை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து வீக்கத்தைக் குறைக்கின்றன. 

4. முகப்பருவை குணப்படுத்துகிறது:

பொதுவாக முகப்பரு ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிறது. இருப்பினும் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, மன அழுத்தம் மற்றும் அடைபட்ட துளைகளில் பாக்டீரியா வளர்ச்சி போன்ற காரணிகளாலும் முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளது. மனுகா தேன் உங்கள் சருமத்தில் பாக்டீரியாக்கள் இல்லாமல் இருக்க உதவும் மற்றும் முகப்பருவை குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. கூடுதலாக, முகப்பருவால் அல்லது முகப்பரு தொடர்பான எரிச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இது போன்ற பல்வேறு நன்மைகளை அனுபவிக்க, மனுகா தேனை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, குறைந்தது 15 நிமிடங்களுக்கு அதை விட்டுவிட்டு, பின்பு எடுத்துவிடுங்கள். 

5. தூக்கத்தை மேம்படுத்துகிறது:

மனுகா தேன் இயற்கையாகவே ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும் இது தூக்கத்தின் போது உடலின் முக்கிய செயல்பாடுகளுக்கு தேவையான கிளைகோஜனை வெளியிடுகிறது. தூங்க போவதற்கு முன்பு பாலுடன் தேனை சாப்பிடுங்கள், ஏனெனில் அது மூளையில் மெலடோனின் வெளியேற்றி ஆழ்ந்த உறக்கத்தை பெற உதவுகிறது.  தூக்கமின்மை (Insomnia) பக்கவாதம், டயாபெடிக்ஸ் மற்றும் மூட்டுவலி போன்ற பல உடல்நலக் கோளாறுகளைத் தூண்டும். இதில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், முதலில் சரியான தூக்கம் உங்களுக்கு தேவை. தேன் ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிப்பதால், உங்களுக்கு உடலில் மற்ற கோளாறுகளை தவிர்க்க (manuka honey benefits in tamil) உதவுகிறது.  

எனவே, தினமும் தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து தேன் எடுத்துக்கொண்டு உங்களின் உடலையும் ஆரோக்கியத்தையும் சீரமைத்து கொள்ளுங்கள். 

Tags: Benefits of Consuming Manuka Honey, medical benefits of manuka honey, healing benefits of manuka honey, manuka honey benefits in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்