Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வீக்கத்திற்கு முதலுதவி எப்படிச் செய்வது | How to give first aid for swelling

Vaishnavi Subramani Updated:
வீக்கத்திற்கு முதலுதவி எப்படிச் செய்வது | How to give first aid for swelling Representative Image.

வீக்கம் என்பது பலவிதமான நேரங்களில் ஏற்படும். அதிகமாகப் படிகளில் ஏறி இறங்கினால் அல்லது வெகுதூரம் பயணித்தால் கால் வீக்கம் ஏற்படும். வீட்டில் அதிகளவில் வேலை செய்தால் வீக்கம் ஏற்படும் மற்றும் வீட்டில் வழுக்கி விழுந்தால் வீக்கம் ஏற்படும். இது போன்ற வீக்கங்களுக்கு எப்படி முதலுதவி செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீக்கத்திற்கு முதலுதவி எப்படிச் செய்வது | How to give first aid for swelling Representative Image

வீக்கத்திற்கான முதலுதவி செய்வது எப்படி?

✤ வீக்கம் பல சூழ்நிலைகளில் ஏற்படும்.சூழ்நிலைக்கு ஏற்ப முதலுதவி செய்ய வேண்டும்.அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டால் அல்லது அதிகமாக வேலை செய்வதால் ஏற்படும் வீக்கம் இது போன்ற வீக்கங்களுக்கு ஏற்ப முதலுதவி செய்வது நல்லது.

✤ வீக்கத்திற்கு பொதுவாக வெந்நீர் ஒத்தடம் மற்றும் ஐஸ் ஒத்தடம் இது போன்று தருவதால் வழிகள் சரியாகி வீக்கம் மிக எளிதாகக் குறையும்.அப்படிகுறையைமால் இருந்தாலோ அல்லது வீக்கம் அதிகமாகயினால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

வீக்கத்திற்கு முதலுதவி எப்படிச் செய்வது | How to give first aid for swelling Representative Image

வீக்கத்திற்கு முதலுதவியாக வெந்நீர் ஒத்தடம்

✤ அதிகளவில் வேலை செய்வதால் ஏற்படும் வீக்கங்கள் மற்றும் தசைப்பிடிப்பினால் ஏற்படும் வீக்கங்கள்,விழுந்த உடனடியாக ஏற்படும் வீக்கங்கள் இது போன்ற வீக்கங்களுக்கு இந்த ஒத்தடம் மிகவும் உதவியாக இருக்கும்.

✤ வெந்நீரை நன்றாகக் காயவைத்து வெதுவெதுப்பாக மாறும் வரை நன்றாக ஆறவிடவும். அந்த நீரை கைபொறுக்கும் சூட்டில் இருக்கும் பொது ஒரு காட்டன் துணியில் நளைத்து கொள்ளவும்.

✤ அதை நன்றாகப் பிழிந்து கொண்டு வீக்கம் இருக்கும் இடத்தில் மெதுவாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். இது போன்று இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் வீக்கம் குறையும்.

✤ இது போன்று இரண்டு நாட்கள் செய்யலாம். வீக்கத்துடன் கூடிய வலி இருந்தால் இதைச் செய்யலாம். இதைச் செய்த பிறகு, வீக்கம் அல்லது வலி சிறிதளவு கூட குறையாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வீக்கத்திற்கு முதலுதவி எப்படிச் செய்வது | How to give first aid for swelling Representative Image

வீக்கத்திற்கு முதலுதவியாக ஐஸ் ஒத்தடம்

✤ வீட்டில் வேலை செய்யும் போது வழுக்கி விழுந்த உடன் வீக்கம் ஏற்பட்டால் மற்றும் விளையாடும் போது கீழே விழுந்து கை அல்லது கால் அடிப்பட்டால் இந்த ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.

✤ இந்த மாதிரியான வீக்கத்தில் ரத்தக் கசிவு ஏற்படும்.அது சில மணிநேரங்களில் உறைந்து அந்த இடம் வீங்கும். அதனால் அந்த இடத்தில் ரத்த ஒட்டம் சீராக இருக்காது. அதைச் சரிசெய்வதற்கு, இந்த முறை பயன்படுத்தலாம்.

✤ ஐஸ் கட்டிகளை எடுத்து அதை வீக்கம் அடைந்த இடத்தில் வைத்து 3முதல் 4 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.இதைச் செய்வதால் ரத்தக் கசிவுகள் குறைந்து ரத்தநாளங்கள் சுருக்கும் விரைவில் வீக்கம் குறையும்.

✤ இதை வீக்கம் குறையும் வரை செய்யவேண்டும்.அப்படி வீக்கம் குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

✤ கீழே விழுந்து அடிப்பட்டால் அது அந்த கால் அல்லது கை அசக்கமுடியால் இருந்தால் அதை அப்படியே விடமால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

வீக்கத்திற்கு முதலுதவி எப்படிச் செய்வது | How to give first aid for swelling Representative Image

வீக்கம் வராமல் இருப்பதற்கு எலாஸ்டிக் கிரிப் பேண்டேஜ் (Elastic grip bandage)

✤ இந்த பேண்டேஜ் கால் அல்லது கைகளில் வலிகள் ஏற்பட்டாலும் மற்றும் அதிகமாகப் பயணம் செய்தாலும் இதைப் பயன்படுத்தலாம்.

✤ இதை அதிகமாக வலிகள் ஏற்படும் இடங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். வலி ஏற்பட்டு சிறிதளவு வீக்கம் இருந்தால் கூட பயன்படுத்தலாம்.

✤ இதனைப் பயன்படுத்துவதனால் ரத்த ஒட்டம் சீராக இருக்கும்.அதிகதூரத்தில் பயன் செய்தாலும் மற்றும் அதிகளவில் விளையாடினாலும் இதைப் பயன்படுத்தலாம்.

✤ பயணம் செய்யும் போது வலிகள் ஏற்பட்டு வீக்கினால் அதைச் சரிசெய்வதற்கு, பயணம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு, கால் அல்லது கைகளில் வலிகள் இருந்தால் தலையணை உயரமாக வைத்துக் கொண்டால் சரியாகும்.

✤ சில தூரப் பயணத்தில் இது போன்ற வீக்கம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும் அல்லது இதயம் மற்றும் சிறுநீரகம் பரிசோதனை செய்ய வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்