Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உடலில் கொழுப்பு அதிகமாகி குண்டா இருக்கீங்களா..? இத செய்யுங்க சீக்கிரம் குறைஞ்சிடும்…

Gowthami Subramani July 27, 2022 & 16:45 [IST]
உடலில் கொழுப்பு அதிகமாகி குண்டா இருக்கீங்களா..? இத செய்யுங்க சீக்கிரம் குறைஞ்சிடும்…Representative Image.

How to Reduce Cholesterol Naturally at Home in Tamil: உடல் பருமன் அதிகம் இருப்பதற்குக் காரணம் கொழுப்பு தான் முக்கிய காரணமாக அமையும். நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளகூடிய உணவுப் பொருள்களில் கொழுப்பு சார்ந்தவற்றை அதிகமாக உண்ணும் போது இத்தகைய விளைவுகள் நமக்கு வர நேரிடும்.

பிறந்த குழந்தையின் உடலில் கொழுப்பு

வயதாகும் போது நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களினால் கொழுப்பு அதிகமாகிறது என்று கூறுவோம். ஆனால், பிறந்த குழந்தைக்குக் கூட கொழுப்பு உள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்குக் காரணம் கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் கொழுப்பு உள்ள உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வதால், அது பிறந்த குழந்தைக்கும் இருக்கும். தாய்ப்பாலில் இருந்து இது குழந்தைக்கு பெறப்படுகிறது. இதயம் மற்றும் மூளையின் பணிகள் மேம்படுவதற்கு கொழுப்பு அவசியமாகிறது.

ஹெச்டிஎல் மற்றும் என்டிஎல்

அதே சமயம், அளவுக்கு அதிகமான கொழுப்பு காரணமாக உடலில் பல்வேறு வகையான விளைவுகளை ஏற்படுத்தும். உடலில் நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளன. அவற்றுள் நல்ல கொழுப்பு உடலில் உள்ள இரத்தத்தில் இருக்கும். ஹெச்டிஎல் எனப்படும் இந்த கொழுப்பு கண்டிப்பாக நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. ஆனால், கெட்ட கொழுப்பான எல்டிஎல் அதிகம் சேரக் கூடாது.

உடலில் கொழுப்பு அதிகம் சேர்வதற்கான காரணம்

நாம் அன்றாடம் உண்ணக்கூடிய பருப்பு வகைகளில் கொழுப்பு அதிகம் சேர வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக, எண்ணெய் வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வது, எண்ணெயில் பொரித்த உணவுப் பொருள்களை உண்ணுதல் போன்றவற்றால் கூட நம் உடலில் அதிகம் கொழுப்பு சேரும்.

இவை அனைத்துமே இரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகரிக்கச் செய்யும்.

மேலும், தூங்குவதற்கு முன் அதிகமாக சாப்படுவது கூட உடலில் கொழுப்பை அதிகரிக்கக் கூடும்.

அதிலும், முக்கியமாக பெண்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும், வயது, ஹார்மோன், சூழ்நிலை போன்றவற்றால் இரத்தத்தில் கொழுப்பின் அளவு மாறிக் கொண்டு தான் இருக்கும்.

கொழுப்பைக் குறைப்பதற்கான சில வழிமுறைகள்

உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைப்பதற்கு சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இயற்கையான முறைகளைப் பயன்படுத்தியே கொழுப்புகளைக் குறைக்கலாம்.

இரவு நேரங்களில் உணவு உண்ணும் போது மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். அதிலும், தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பே உணவை எடுத்துக் கொண்டால் மட்டுமே விரைவாக ஜீரணம் அடையும்.

எண்ணெய் சார்ந்த உணவுப் பொருள்களை மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்வதே நல்லது.

உணவு சாப்பிட்ட பின்பு, வெந்நீர் வைத்து அதை குடிக்கும் பொருட்டு மிதமான சூட்டில் குடித்து வர கொழுப்பு கரையும்.

சித்த மருத்துவத்தில் மிக முக்கியமாகச் சொல்லப்படுவது கருஞ்சீரகம் ஆகும். இதனைப் பொடி செய்து, மதிய உணவு எடுத்துக் கொள்ளும் முன்பு வெதுவெதுப்பாக நீரில் அரை டீஸ்பூன் கலந்து குடிக்கவும். இது போல, தொடர்ந்து 21 நாட்கள் குடிக்க வேண்டும்.

எண்ணெயில் பொறித்த உணவுப் பொருள்களை அரவே தடுப்பது மிக நல்லது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்