Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2022-ன் சுவைக்கத் தூண்டும் பெஸ்ட் ரெசிப்பீஸ் இது தான்! | Best Recipes of 2022

Gowthami Subramani Updated:
2022-ன் சுவைக்கத் தூண்டும் பெஸ்ட் ரெசிப்பீஸ் இது தான்! | Best Recipes of 2022Representative Image.

ஆண்டுகள் ஓடிக் கொண்டிருந்தாலும், பல்வேறு விஷயங்கள் மாறிக் கொண்டு தான் வருகின்றன. புதிய ஆண்டில், புதுபுது விதமான ஆடைகள், ரெசிப்பீஸ் போன்றவை புதியதாகவே நமக்கு கிடைத்து வருகின்றன. ஆடைகள், உணவு மட்டுமல்ல ஒவ்வொரு விஷயத்திலும் புது புதிதாக உருவாக்கப்பட்டோ, கண்டுபிடிக்கப்பட்டோ மக்களுக்கு ஆச்சரியத்தையும், ஆனந்தத்தையும் அளிக்கும் வகையிலேயே அமைகிறது. அந்த வகையில், இந்த 2022 ஆம் ஆண்டின் மனங்கவர்ந்த, அனைவரது கவனத்தையும் ஈர்த்து, விரும்பி உண்ணப்படும் சில டிஷ்களை இங்கு காணலாம்.

2022-ன் சுவைக்கத் தூண்டும் பெஸ்ட் ரெசிப்பீஸ் இது தான்! | Best Recipes of 2022Representative Image

வெள்ளரிக்காய் சாண்ட்விச்

கிரீம் மற்றும் மொறுமொறுப்பு நிறைந்த வெள்ளரிக்காய் சாண்ட்விச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. பொதுவாக வெள்ளரிக்காய் ஆனது, உடல் நலத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியது. இந்த வெள்ளரிக்காய் சாண்ட்விச் ஆனது, முழு கோதுமை ரொட்டியின் சுவையைத் தரக்கூடியதாக அமையும். இது உடலுக்கு நன்மை தரக்கூடியதாகவும், டேஸ்டாகவும் இருப்பதால் வெள்ளரிக்காய் சாண்ட்விச்சை (Cucumber Sandwich) பெருமளவு விரும்புகிறார்கள்.

2022-ன் சுவைக்கத் தூண்டும் பெஸ்ட் ரெசிப்பீஸ் இது தான்! | Best Recipes of 2022Representative Image

இலவங்கப்பட்டை-ரோல் ஓவர் நைட் ஓட்ஸ்

இந்த உணவானது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், இதனைச் சமைக்கத் தேவையில்லை. எளிதாக சில நிமிடங்களிலேயே செய்து முடித்து விடலாம். இதில், பழங்கள் சேர்ப்பதால் சாப்பிடுவதற்கு சுவையாகவும், மீண்டும் சாப்பிட தூண்டும் வகையிலும் உள்ளது.

2022-ன் சுவைக்கத் தூண்டும் பெஸ்ட் ரெசிப்பீஸ் இது தான்! | Best Recipes of 2022Representative Image

சிக்கன் கட்லெட்

கட்லெட் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒன்று. மேலும், சிக்கனைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சிக்கன் பிரியர்கள் ஏராளம். இவை இரண்டையும் சேர்த்து சிக்கன் கட்லெட் செய்தால் எப்படி இருக்கும். மிகவும் டேஸ்டான சிக்கன் கட்லெட், எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருள்களில் ஒன்றாகி விட்டது. இது ஆரோக்கியமான இரவு உணவாக அமைகிறது.

2022-ன் சுவைக்கத் தூண்டும் பெஸ்ட் ரெசிப்பீஸ் இது தான்! | Best Recipes of 2022Representative Image

ப்ரோக்கோலி சாலட்

ப்ரோக்கோலி சாலட் ஆரோக்கியமானதாகவும், அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய வகையிலும் அமைகிறது. இந்த உணவில் சேர்க்கப்படும், புளிப்பு கிரீம், மயோனைஸ், ஸ்காலியன்ஸ் போன்றவை இந்த உணவிற்கு அதிக சுவையை சேர்க்கிறது.

2022-ன் சுவைக்கத் தூண்டும் பெஸ்ட் ரெசிப்பீஸ் இது தான்! | Best Recipes of 2022Representative Image

எடை இழப்புக்கான முட்டைக்கோஸ் சூப்

முட்டைக்கோஸ், கேரட், பெல் பெப்பர், தக்காளி, போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த சூப் ஆனது அதீத சுவையைத் தரக்கூடியவையாக இருக்கும். இதனை காலை மற்றும் மதிய உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். மேலும், இதில் இன்னும் டேஸ்ட் சேர்க்க விரும்பினால் சிறிதளவு சீஸ் அல்லது அவோகேடா பழத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.

2022-ன் சுவைக்கத் தூண்டும் பெஸ்ட் ரெசிப்பீஸ் இது தான்! | Best Recipes of 2022Representative Image

வெள்ளரிக்காய் சாலட்

வெள்ளரிக்காய் சாண்ட்விச்சைப் போலவே, வெள்ளரிக்காய் சாலட்டும் மக்களால் விரும்பப்படும் உணவு வகைகளில் ஒன்றாகும். இந்த டிஷ் ஆனது வித்தியாசமான சுவையைத் தரும். அதாவது, இனிப்பு, புளிப்பு சுவையை சமமாகக் கொண்ட சுவையைத் தரக்கூடியதாக அமையும். இந்த சாலட்டை காலை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

2022-ன் சுவைக்கத் தூண்டும் பெஸ்ட் ரெசிப்பீஸ் இது தான்! | Best Recipes of 2022Representative Image

சுட்ட வாழைப்பழம் – நட் ஓட்ஸ்

வாழைப்பழத்தை நாம் அப்படியே உண்போம். ஆனால், அதனை சுட்டு சாப்பிடுவது என்பது எல்லோருக்கும் புதிதாக இருக்கும். இவ்வாறு, நட் ஓட்ஸ் உடன், வாழைப்பழம் சேர்த்த் சாப்பிடும் போது சுவையைத் தூண்டி அனைவரையும் மீண்டும் மீண்டும் சாப்பிட வைக்கும் திறனைத் தூண்டியது.

2022-ன் சுவைக்கத் தூண்டும் பெஸ்ட் ரெசிப்பீஸ் இது தான்! | Best Recipes of 2022Representative Image

வேர்க்கடலை எண்ணெய் பந்து

இந்த ரெசிப்பியின் பெயரே சற்று வித்தியாசமானதாக அமையும். இது ஆரோக்கியமான வேர்க்கடலை எண்ணெய் மற்றும் சாக்லேட் ஆல் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதுவும் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாகும். இந்த டிஷ்-ஐ ஒரு முறை வீட்டில் சமைத்து பாருங்கள். மீண்டும் மீண்டும் செய்து சாப்பிடத் தூண்டும்.

2022-ன் சுவைக்கத் தூண்டும் பெஸ்ட் ரெசிப்பீஸ் இது தான்! | Best Recipes of 2022Representative Image

உருகும் உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வைத்து நிறைய வகையான டிஷ்களை செய்யலாம்.  இந்த உருகும் உருளைக்கிழங்கு ரெசிபியானது, உட்புறத்தில் கிரீம் ஊற்றப்பட்டு, அவற்றை அதிக வெப்பத்தில் வறுக்கக் கூடியதாக அமையும். இது வெளியில் மொறு மொறுப்பாக இருக்கும். இந்த டிஸ் ஆனது, அற்புதமான சுவையைத் தரக்கூடியதாக அமைகிறது.

2022-ன் சுவைக்கத் தூண்டும் பெஸ்ட் ரெசிப்பீஸ் இது தான்! | Best Recipes of 2022Representative Image

பன்னீர் புர்ஜி கிரேவி

இந்தியாவில், மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவுப் பொருள்களில் பன்னீரும் ஒன்று. அதில் பல்வேறு வகையான டிஷ்களை செய்யலாம். அந்த வகையில், மக்களுக்கு மிகவும் பிடித்ததில் பன்னீர் புர்ஜி கிரேவி ஆகும். இது அனைவராலும் விரும்பப்பட்டு உண்ணக்கூடிய உணவுப் பொருள்களில் ஒன்றாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்