Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடிக்கடி சாப்பிடும் உணவால் ஏற்படும் அபாயம்...இது தெரிஞ்சா இனிமே சாப்பிடாதீங்க!

Priyanka Hochumin Updated:
அடிக்கடி சாப்பிடும் உணவால் ஏற்படும் அபாயம்...இது தெரிஞ்சா இனிமே சாப்பிடாதீங்க!Representative Image.

இந்த பிரபஞ்சித்தலையே நம்முடைய உணவு முறை தான் மிகவும் சத்தான, ஆரோக்கியமான வாழ்வை அளிக்கும் வல்லமை கொண்டது. ஆனால் தற்போது தினமும் அவசர வேலை காரணமாக உடலுக்கு கெட்டது என்று தெரிந்தும் பல உணவுகளை சாப்பிடுகிறோம். இதனால் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் பல கோளாறுகள் ஏற்படுகிறது. காரணம்? அந்த உணவு பொருட்களில் சேர்க்கப்படும் கெமிக்கல்கள், அடிட்டிவ்ஸ் மற்றும் ப்ரிசர்வேட்டிவ்ஸ் ஆகியவை ஆகும்.

இவற்றுள் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் என்னென்ன தீமைகள், அதனால் ஏற்படும் அபாயங்கள் என்ன என்று பாப்போம்.

அடிக்கடி சாப்பிடும் உணவால் ஏற்படும் அபாயம்...இது தெரிஞ்சா இனிமே சாப்பிடாதீங்க!Representative Image

எண்ணெய்

நம்முடைய தினசரி வாழ்வில் அதிகம் பயன்படுவது எண்ணெய் தான். அதில் சுத்திகரிக்கப்பட்ட காய்கறி எண்ணெய்களில் (சோயாபீன், கார்ன் மற்றும் காட்டன் சீட் ஆயில்) omega-6 polyunsaturated fats அதிகம் இருக்கும். இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் Acid reflex உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். மேலும் நம்முடைய உடலுக்குள் ஒமேகா 6 இன் அளவு அதிகரித்தால் புற்றுநோய், அல்சைமர், ஆட்டோ இம்யூன் நோய்கள், இதய நோய் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

அடிக்கடி சாப்பிடும் உணவால் ஏற்படும் அபாயம்...இது தெரிஞ்சா இனிமே சாப்பிடாதீங்க!Representative Image

மைதா

அதிகம் இல்லை என்றாலும் கூட வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் மைதா சேர்த்து கொள்வோம். அதிலும் பரோட்டா சாப்பிடுவது வழக்கமாகி விட்டது. நாவில் பல சுவை வேண்டும் என்பதால் பாஸ்ட் ஃபுட்டிற்கு அதிக நாட்டம் செலுத்தப்பட்டு வருகிறது. அவை அனைத்திலும் கட்டாயம் மைதா இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவற்றை அதிகம் எடுத்துக்கொண்டால் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய், ஹை கொலஸ்ட்ரால் உள்ளிட்ட நோய்களுக்கான தாக்கத்தை அதிகரிக்கும். அதே போல் மைதாவில் இருக்கும் கெட்ட கொழுப்பான LDL-ஐ அதிகரித்தால் - ரத்த அழுத்தம் அதிகமாகும் மற்றும் ரத்த சர்க்கரையின் அளவு சீர்குலைந்துவிடும்.

அடிக்கடி சாப்பிடும் உணவால் ஏற்படும் அபாயம்...இது தெரிஞ்சா இனிமே சாப்பிடாதீங்க!Representative Image

சர்க்கரை

தினமும் அதிகபட்சம் 6 முறையாவது டீ, காபி, ஸ்வீட்ஸ், பால், ஐஸ் கிரீம் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது வழக்கம். அதில் சுவைக்காக வைட் சுகர் சேர்த்து கொள்கிறோம். இதில் வைட்டமின்ஸ், மினரல்ஸ், புரோட்டின், கொழுப்புகள் அல்லது ஃபைபர் உடலுக்கு ஆரோக்கியம் ஆதிகரிக்கும் எந்த சத்துக்களும் இல்லை. வெறும் வெற்று கலோரிகள் (empty calories ) மட்டும் இருப்பதாக கருதப்படுகிறது. இதை தினமும் எடுத்துக்கொள்வதால் உடல் பருமன், டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற அபாயங்கள் அதிகரிக்கும். மேலும் டிமென்ஷியா, கல்லீரல் நோய் மற்றும் சில வகை புற்றுநோய் ஆகியவை ஏற்படவும் வழிவகுக்கும்.

அடிக்கடி சாப்பிடும் உணவால் ஏற்படும் அபாயம்...இது தெரிஞ்சா இனிமே சாப்பிடாதீங்க!Representative Image

சோடியம் நைட்ரேட்

இது இறைச்சிகளை (அதாவது பன்றி இறைச்சி, டெலி இறைச்சி மற்றும் ஜெர்கி) பதப்படுத்தப்படும் ப்ரிசர்வேட்டிவாக பயன்படுத்தப்படுகிறது. இறைச்சிகள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்க, இறைச்சிகளின் நிறம் மற்றும் உப்பு சுவையை பாதுகாக்க என்று பல காரணங்களுக்காக இது பயன்படுத்தப்படுகிறது. இதனை கொண்டு பதப்படுத்தப்பட்ட இறைச்சியை எடுத்துக்கொண்டால் இதய நோய் மற்றும் நீரிழிவு நோயுடன் சேர்ந்து வயிற்று புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயமும் உண்டு.

அடிக்கடி சாப்பிடும் உணவால் ஏற்படும் அபாயம்...இது தெரிஞ்சா இனிமே சாப்பிடாதீங்க!Representative Image

ஈஸ்ட் எக்ஸ்ட்ராக்ட்

இதை நாம் தினமும் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் சீஸ், சோயா சாஸ் மற்றும் பேக்கேஜ்டு உணவுகளில் சால்ட் ஃப்ளேவரை தெரிவிக்க இந்த ஈஸ்ட் எக்ஸ்ட்ராக்ட் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல பேக்கரியில் பன் ஐட்டங்களை இதனை கொண்டு தான் தயாரிக்கின்றனர். கம்மியாக எடுத்துக்கொண்டால் அபாயம் இல்லை, ஆனால் அடிக்கடி எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்தம், ஸ்கின் அலர்ஜி போன்றவற்றை ஏற்படுத்தும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்