Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Keep Liver Healthy Naturally in Tamil: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஜூஸ்கள்…

Nandhinipriya Ganeshan July 27, 2022 & 12:00 [IST]
How to Keep Liver Healthy Naturally in Tamil: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஜூஸ்கள்…Representative Image.

பீட்ரூட் ஜூஸ்: தினமும் ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் எக்கச்சக்கமான நன்மை உண்டு. அதில் கல்லீரல் ஆரோக்கியமும் ஒன்று. உடலில் உள்ள நச்சுக்களை விரைவில் நீக்கி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

ஆப்பிள் ஜூஸ்: கல்லீரலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ள ஆப்பிள் ஜூஸ் குடிங்க. மேலும், செரிமானத்தை மேம்படுத்தி வயிற்று பிரச்சனைகளை போக்குகிறது.

கரும்பு ஜூஸ்: கல்லீரல் தொடர்பான நோய்களை நீக்குவதில் கரும்பு ஜூஸ் முதல் இடம். கரும்பு ஜூஸ் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேறிவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கப்படுகிறது. ஒருவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்தால் கரும்பு ஜூஸ் குடிப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.

கிரீன் டீ: தினமும் ஒரு கப் கிரீன் டீ (சர்க்கரை போடாமல்) குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அகற்றப்படுகிறது. அதோடு, கல்லீரலுக்கும் கூடுதல் நீரேற்றம் கிடைக்கும். இதனால், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

மஞ்சள் தேநீர்: ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூல் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு, கருப்பு மிளகு பொடி சேர்த்து பருகினால் கல்லீரல் நொதிகள் உற்பத்தி அதிகரித்து இரத்தம் சுத்தமாகும். இதனால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

காய்கறி ஜூஸ்: காய்கறிகள் எவ்வளவு ஆரோக்கியமானவை என்று நமக்கு தெரியும். அதனால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். ஆனால், ஜூஸாக குடிக்கும்போது ஊட்டச்சத்து விரைவாக கிடைக்கும். இதனால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்