Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Murungai Keerai Powder in Tamil: முருங்கை கீரை பொடி இப்படி அரைச்சி பாருங்க..!!

Nandhinipriya Ganeshan July 27, 2022 & 12:30 [IST]
How to Make Murungai Keerai Powder in Tamil: முருங்கை கீரை பொடி இப்படி அரைச்சி பாருங்க..!!Representative Image.

How to Make Murungai Keerai Powder in Tamil: தினமும் முருங்கை கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், அவற்றை சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக அதை பொடியாக சேர்த்துக் கொள்ளலாம். முருங்கை கீரை பொடி செய்வது மிகவும் எளிது. தினமும் வெறும் சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெயை ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு ஆரோக்கியம். இந்த பொடியை வெறும் இலைகளை மட்டும் அரைத்தும் பயன்படுத்தலாம். இன்னும் கொஞ்சம் சுவையாக வேண்டும் என்று நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்தும் பயன்படுத்தலாம்.

முருங்கை கீரை பொடியின் பயன்கள்..

தேவையான பொருட்கள்:

முருங்கை கீரை – 2 கப்

மிளகாய் – 10

கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

புளி – சின்ன நெல்லிக்காய் அளவு

பெருங்காயம் – 1 ஸ்பூன்

உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:

❖ பச்சையான முருங்கை இலைகளை 3 நாட்கள் நிழலில் மொறுமொறுப்பாக காய வைத்து எடுத்துக் கொள்ளவும். வெயிலில் காய வைக்கக் கூடாது.

❖ இப்போது, மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பொருட்களை தனித்தனியாக எண்ணெய் விடாமல் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். உப்பையும் வறுத்து கொள்ளுங்கள்.

❖ பின்பு வறுத்த கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், உப்பு மற்றும் பெருங்காயம், புளி, காய வைத்த முருங்கை இலை போன்ற அனைத்துப் பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக நைராக அரைத்துக் கொள்ளவும்.

❖ அவ்வளவு தான், ஆரோக்கியமான முருங்கைப் பொடி ரெடி…!!

Tags:

How to prepare drumstick leaves powder at home | How to make moringa powder at home in tamil | How to make drumstick leaves powder at home in tamil | How to make urungai keerai podi in tamil | How to make murungai keerai powder in tamil | How to Make Murungai Keerai Powder in Tamil at home


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்