Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குளிர்காலத்தில் தினமும் 2 வேக வைத்த முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

Nandhinipriya Ganeshan September 08, 2022 & 19:20 [IST]
குளிர்காலத்தில் தினமும் 2 வேக வைத்த முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?Representative Image.

Boiled Egg Benefits in Tamil: முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன, ஆனால் நீங்கள் அந்த உணவைத் தயாரிக்கும் விதத்தில் தான் அந்த முழு ஊட்டச்சத்துக்களையும் உங்களுக்கு கிடைக்கும். இத்தகைய முட்டைகளை தினமும் உட்கொள்வது குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. குளிர்காலத்தில் தினமும் இரண்டு முட்டைகள் சாப்பிட்டு வந்தால் உடல் சூடாக இருக்கும். பொதுவாக, குளிர்காலத்தில் நமக்கு பல தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. 

எனவே, குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது அவசியம். முட்டை சாப்பிட்டால், சளி பிடிப்பதற்கான வாய்ப்புகளே இருக்காது; அதே தினமும் சாப்பிட்டால் பாக்டீரியா தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். இது தவிர இன்னும் பல நன்மைகள் உள்ளன. ஆம்லெட்டுடன் ஒப்பிடும்போது ஆவியில் வேகவைத்த முட்டையை சாப்பிடும்போது அவற்றிலிருந்து முழுச் சத்தும் நமக்குக் கிடைக்கிறது. இப்போது குளிர்காலத்தில் வேகவைத்த முட்டைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி விரிவாக பார்க்கலாம். 

வேகவைத்த முட்டையில் உள்ள சத்துக்கள்:

ஒரு வேகவைத்த முட்டை (nutritional value of  boiled egg)  உடலுக்கு 77 கலோரிகளை வழங்குகிறது. கூடுதலாக, 0.6 கிராம் கார்போஹைட்ரேட், 5.3 கிராம் கொழுப்பு, 1.6 கிராம் நிறைவுற்ற கொழுப்பு, 2 கிராம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, 212 மி.கி கொழுப்பு, 6.3 கிராம் புரதம், 6 சதவீதம் வைட்டமின் ஏ, 15 சதவீதம் வைட்டமின் பி2, 9 சதவீதம் வைட்டமின் பி12, 7 சதவீதம் வைட்டமின் பி5, 86 மி.கி பாஸ்பரஸ் மற்றும் 22 சதவீதம் செலினியம். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

வேகவைத்த முட்டைகளை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது

தினமும் அவித்த முட்டையை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும். முட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் பல சத்துக்கள் இருப்பதால், இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது

முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகம். இது உணவுக் கொலஸ்ட்ரால் (dietary cholesterol) என்பதால், உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்காது. இதயத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்காது. எனவே, ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க தினமும் முட்டைகளை சாப்பிடுவது நல்லது.

கண்களுக்கு நன்மை பயக்கும்

கண்களின் ஆரோக்கியத்திற்கு முட்டை சரியானது. மேலும், இது கண் செல்களில் அரிப்பு ஏற்படுவதை முற்றிலும் தடுக்க உதவி செய்கிறது. தினமும் இரண்டு முட்டைகளை உணவில் சேர்த்து வந்தால், கண் ஆரோக்கியத்திற்கு தேவையான கரோட்டினாய்டுகள் கிடைக்கும்.

புரோட்டீன் நிறைந்தது

வேகவைத்த முட்டையில் 6 கிராமுக்கு மேல் புரதச்சத்து உள்ளது. எனவே தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள புரதச்சத்து குறைபாடு (benefits of eating boiled eggs daily) நீங்கி, உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும், உடலில் உள்ள செல்களை சரிசெய்யும் வேலையை புரதங்கள் செய்கிறது. எனவே உடல் செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் முட்டையை சாப்பிடுங்கள்.

குளிர்காலத்தில் முட்டை சாப்பிட சிறந்த நேரம்

காலை உணவின் போது முட்டைகளை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், முட்டையில் மெக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகம் உள்ளதால், காலை உணவாக சாப்பிட்டால் வ யிறு நிரம்பவும், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்