Wed ,Jun 19, 2024

சென்செக்ஸ் 77,299.25
-1.89sensex(-0.00%)
நிஃப்டி23,540.90
-17.00sensex(-0.07%)
USD
81.57
Exclusive

Brain Tumor: மூளைக்கட்டி நோயின் அறிகுறிகள் இப்படிதான் இருக்கும்...!! சிகிச்சை முறைகள் என்ன?

Nandhinipriya Ganeshan June 06, 2022 & 11:45 [IST]
Brain Tumor: மூளைக்கட்டி நோயின் அறிகுறிகள் இப்படிதான் இருக்கும்...!! சிகிச்சை முறைகள் என்ன?Representative Image.

Brain Tumor: பொதுவாக மனிதர்களுக்கு தலைவலி வருவது என்பது சாதாரண விஷயம் தான். ஏனெனில், அப்படிபட்ட சூழ்நிலையில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். சாதாரண தலைவலியாக இருந்தால், ஒரு நாளில் சரியாகிவிடும். அதுவே, நீண்ட நாள் தீராத வலியாக இருந்தால் அதற்குரிய சிறப்பு சிகிச்சைக்குரிய டாக்டர்களை பார்ப்பது அவசியம். ஏனென்றால் உயிரைக் கொள்ளும் மூளைக்கட்டியாக கூட இருக்கலாம். மூளைக்கட்டியா? அப்படினா என்ன? அறிகுறிகள் என்னென்ன? சிகிச்சை முறைகள் என்ன? எல்லாவற்றையும் பற்றி விரிவாக பார்க்கலாம். 

மூளைக்கட்டி என்றால் என்ன?

மூளை கட்டி (What is brain tumor in tamil) என்பது மூளை செல்களில் ஏற்படும் அதிகப்படியான வளர்ச்சியாகும். சில சமயங்கள் இந்த கட்டிகள் பாதிப்பற்றதாகவும், அல்லது புற்றுநோய் உருவாக்கக்கூடியதாகவும் இருக்கலாம். உடம்பின் வெளிப்பகுதிகளில் கட்டி ஏற்பட்டால் அதனால் பெரிய பாதிப்பும் எதுவும் இருக்காது. அதுவே மூளைக்குள் ஏற்படும் கட்டி வளரும்போது அது வளருவதற்கு இடமில்லாமல் உள்நோக்கியே வளரும். அத்தகைய கட்டி மூளையை நெருக்குவதால் மூளையின் செயல்திறன் தடைபடும். அப்படி தடைபடுவதால், உடலில் பல விளைவுகளை ஏற்படுத்தும்.

மூளைக்கட்டியின் தீவிர தன்மை:

மூளையில் சிலருக்கு கட்டி மெதுவாக வளரும், சிலருக்கு வேகமாக வளரும், சிலருக்கு மூளையில் ரத்தம் கொஞ்சமாகவோ, அதிகமாகவோ கசியும். எனவே, அதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் தீவிரம் முத்திவிடும், இதனால் கை கால் வலிப்பு, வாந்தி, நன்றாக இருக்கும்போதே மாறி மாறி பேசுவது, திடீரென மயக்கம் போடுதல் போன்றவை ஏற்படும். சில சமயங்களில் உயிரே போகும் அளவிற்கு சென்றுவிடும். இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகாமல் இருக்க உடனடியாக ஸ்கேன் செய்து அறுவைச் சிகிச்சை மூலம் கட்டியை அகற்றி விட வேண்டும். 

அறிகுறிகள் (Brain tumor symptoms in tamil) என்னென்ன?

 • தொடர் தலைவலி
 • பேசுவதில் தடுமாற்றம்
 • பார்வை இழப்பு
 • அடிக்கடி குமட்டல், வாந்தி
 • கை, கால்கள் செயலிழப்பு
 • திடீர் மனநிலை மாற்றம்
 • அடிக்கடி சோர்வு, தலை பலவீனம்
 • மனச்சோர்வு
 • காது சரியாக கேட்காமல் இருப்பது
 • ஹார்மோன்: மூளையில் கட்டி ஏற்பட்டால் அது பிட்யூட்டரி சுரப்பிகள் மற்றும் ஹார்மோன்களை பாதிக்கும். இதனால், பெண்கள் கருவுறுவதில் பிரச்சனை இருக்கும். 

காரணங்கள் என்ன?

மூளையில் கட்டி வளரும் இடம், மற்றும் அதன் அளவு பொறுத்து இவை ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் வேண்டுமானாலும் வரலாம். இந்த நோய்க்கான காரணம் இதுவரை உறுதியாக கண்டறியப்படவில்லை. ஆனால், புகையிலை பழக்கங்கள், மரபு வழி போன்றவை பொதுவான காரணங்களாக (causes of brain tumor in tamil) சொல்லப்படுகிறது. அதேபோல் அதிக அளவு கதிர்வீச்சு வெளிப்பாடும் மூளையில் கட்டி உருவாவதற்கான காரணமாக சொல்லப்படுகிறது. 

மூளைக்கட்டி சிகிச்சைகள்?

 • கட்டி இருக்கும் இடம்
 • கட்டியின் அளவு
 • கட்டியின் வகை
 • கட்டிகளின் எண்ணிக்கை
 • உங்களுடைய வயது
 • உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம்

ஆகியவற்றை பொறுத்து மூளைக்கட்டி சிகிச்சை அளிக்கப்படுகிறது.. பொதுவாக புற்றுநோ அல்லாத மூளைக் கட்டிகளாக இருந்தால் அவை அறுவை சிகிச்சை மூலமே அகற்றப்படலாம், இது மீண்டும் வளராது. அதுவே, புற்றுநோய் கட்டியாக இருந்தால், கீழ்க்கண்ட சிகிச்சை முறைகள் பின்பற்றப்படும்.

 • அறுவை சிகிச்சை
 • கதிர்வீச்சு சிகிச்சை
 • கதிர்வீச்சு அறுவை சிகிச்சை
 • கீமோதெரபி
 • இலக்கு நோக்கிய மருந்து சிகிச்சை

போன்ற சிகிச்சைகள் பயனபடுத்தப்படுகிறது.


புகையிலை பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமல்ல அதைவிட மோசமான உயிரைக் கொல்லும் நோய்களும் வரும்....!!


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்