Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kim Kardashian: நடிகை போல் மாற வேண்டுமென்று இந்த பொண்ணு செஞ்ச காரியத்த பாருங்க…

Nandhinipriya Ganeshan July 13, 2022 & 16:30 [IST]
Kim Kardashian: நடிகை போல் மாற வேண்டுமென்று இந்த பொண்ணு செஞ்ச காரியத்த பாருங்க…Representative Image.

இந்த உலகில் எங்கோ ஓர் மூலையில், சில விசித்தரமான வேடிக்கையான அதிர்ச்சியான சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. தற்போது அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

29 வயதான பிரேசிலிய மாடலான ஜெனிபர் பாம்ப்லோனா (Jennifer Pamplona) ஹாலிவுட் பிரபலம் கிம் கர்டாஷியானை போல மாற வேண்டும் என்று தன்னுடைய 17 வயதில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆரம்பித்துள்ளார். அப்படி ஆரம்பித்து கடந்து 12 ஆண்டுகளில் மட்டும் 40 சர்ஜரிகளை உடலில் செய்திருக்கிறார். இதற்காக ரூ. 4,77,65,580 கோடி வரை செலவழித்திருக்கிறாராம்.

ஒருவழியாக அத்துனை பிளாஸ்டிக் சர்ஜரிகளையும் செய்து கிம் கர்தாஷியன் போல உருமாற்றம் செய்து உலகளவில் பிரபலமடைந்த ஜெனிபர், தி சன் ஆகிய பத்திரிகைகளிலும் இடம் பெற்றிருக்கிறார்.

இத்தன செலவு செய்து இவ்வளவு அழகாக மாறி இந்த மாடல், தற்போது மகிழ்ச்சியாக இல்லையாம். இதற்கு காரணம் அவர் தோற்றத்தில் கர்டாஷியன் போல இருப்பதால், அனைவரும் அவரை கர்டாஷியன் என்று தான் அழைத்தார்களாம். அது அவருக்கு எரிச்சலூட்டும் விதமாக இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ‘எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்; ஆனால், இதெல்லாம் அந்த தோற்றத்திற்காக மட்டும்தானா’ என்று கவலைப்பட்டுள்ளார்.

இதனால், மறுபடியும் தனது பழைய தோற்றத்திற்கு திரும்ப மீண்டும் பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்யத் தொடங்கியிருக்கிறாராம். இதற்காக, இதுவரை சுமார் ரூ. 95 லட்சம் (ரூ. 95,56,500) செலவு செய்துள்ளாராம். ஜெனிபருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள்.

Tags:

Jennifer pamplona | Jennifer pamplona kim kardashian | Kim kardashian | Viral news | Trending news | World news | Kim kardashian surgery


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்