Optical Illusion Game: ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள் உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கக் கூடியவை. ஒவ்வொரு ஆப்டிக்கல் இல்யூசன் படங்களிலும் உள்ள மாயை உருவப்படங்களை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கண்விழி பிதுங்கி, மூளையை கசக்கி, உற்றுக் கவனித்தால் மட்டுமே அதில் மறைந்திருக்கும் புகைப்படங்களை கண்டுபிடிக்க முடியும்.
இந்த மாதிரியான புகைப்படங்கள் சமீப காலமாக இணையத்தில் அதிகப்படியான பயனர்களால் ரசிக்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகின்றன. அப்படி, தற்போது ஸ்காட்லாந்து மலைப்பகுதியில் உள்ள அழகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெல்ஜியத்தைச் சேர்ந்த லாரன்ஸ் டெபைல் என்ற பயணி, நோர்த் இன்வெர்னஸில் பென் வைவிஸ் ஏறும் போது இந்த புதிரான படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை பார்க்கும்போது உங்களுக்கு என்ன தெரிகிறது? மலைப்பகுதியில் பாறைகள் நிறைந்திருப்பது போல் தோன்றலாம். ஆனால், இதில் ஒரு பறவை மறைந்திருக்கிறது. இதை ஒரு நிமிடத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இது தான் சவால்.
அப்படி ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள் உண்மையில் ஆந்தை போன்ற கூர்மையான பார்வையைக் கொண்டவர் என்று அர்த்தம். எந்த செயலையும் தொலைநோக்கு பார்வையில் சிந்தித்து செயல்படுபவர். அதுமட்டுமல்லாமல், திறமைசாலி என்றும் அர்த்தம். என்ன கண்டுபிடிச்சிட்டிங்களா? இந்த படத்தில் எந்த இடத்தில் அந்த பறவை இருக்கிறது என்று. நன்றாக கூர்ந்து கவனித்தால் மட்டுமே, பாறைகள் நிறத்தில் இருக்கும் அந்த பறவையை கண்டுபிடிக்க இயலும்.
ஒருவேளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலை வேண்டாம் அதற்கான பதிலையும் நாங்களே கொடுத்துள்ளோம். முடிந்த வரை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், உங்களுடைய பார்வையின் திறனை அதிகரிக்கலாம்.
இதை அப்படியே உங்க நண்பர்களுக்கும் ஒரு ஷேர் செய்து அவர்களையும் கண்டுபிடிக்க சொல்லுங்க.. இந்த மாதிரியான சுவாரஸ்யமான விளையாட்டுகளை விளையாட எங்கள் பக்கத்தை தொடர்ந்திருங்கள்.
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…