Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தேசியக்கொடி நிறத்தில் தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி..? | How to Make Tricolor Rasagulla in Tamil

Vaishnavi Subramani Updated:
தேசியக்கொடி நிறத்தில் தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி..? | How to Make Tricolor Rasagulla in TamilRepresentative Image.

இந்த பதிவில் மூவர்ண நிறத்தில் நம் பாரம்பரியம் சார்ந்த பல்வேறு வகையான உணவுகள் உள்ளன. அதில் நமக்கு மிகவும் பிடித்த மூவர்ண  ரசகுல்லா(Tricolor Rasgulla) மற்றும் மூவர்ண தேங்காய் லட்டு  (Tricolor Coconut) மற்றும் மூவர்ண இட்லி (Tricolor Idli) உள்ளது. இந்த பதிவில் மூவர்ண ரசகுல்லா வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேசியக்கொடி நிறத்தில் தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி..? | How to Make Tricolor Rasagulla in TamilRepresentative Image

மூவர்ண ரசகுல்லா செய்வதற்குத் தேவையான பொருட்கள்

✤பால் - கால் லிட்டர்

✤எலுமிச்சை பழம் - ஒன்று

✤சர்க்கரை - அரை கிலோ

✤ரோஸ் எசன்ஸ் - 1சிட்டிகை

✤ஏலக்காய்த் தூள் - சிறிதளவு

✤ஆரஞ்சு மற்றும் பச்சை உணவு நிற பொடி- 1 சிட்டிகை

தேசியக்கொடி நிறத்தில் தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி..? | How to Make Tricolor Rasagulla in TamilRepresentative Image

செய்முறை

 ✤முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பால் நன்றாக கொதித்தவுடன் ஒரு எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்துவிடவும். பால் திரிய ஆரம்பிக்கும். 

✤பாலினை அவ்வப்போது கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு சுத்தமான வெள்ளைத் துணியில் கொட்டி நன்றாக அழுத்தி தண்ணீர் இல்லாமல் பிழிந்து 1 மணிநேரம் கட்டித் தொங்கவிடவும்.

✤பின்பு, நன்றாகப் பிழிந்து எடுத்து பன்னீரை மிருதுவாக வரும்வரை பிசையவும். அதை  மூன்று பகுதியாகப் பிரித்து முதல் பகுதியை ஆரஞ்சு நிற உணவு பொடி ஒரு சிட்டிகை அளவிற்குச் சேர்த்து நன்றாகக் கலந்து கொண்டு அதைச் சிறிது சிறிது உருண்டையாக உருட்டவும்.

தேசியக்கொடி நிறத்தில் தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி..? | How to Make Tricolor Rasagulla in TamilRepresentative Image

✤இரண்டாம் பகுதியைப் பச்சை நிற உணவு பொடியைச் சேர்த்து நன்றாகக் கலந்து அதைச் சிறிது சிறிது உருண்டையாக உருட்டவும்.

✤மூன்றாம் பகுதியில் எதையும் சேர்க்காமல் வெள்ளை நிறத்தில் உள்ள பனீர்  உள்ளங்கையில் வைத்து நன்றாகச் சிறிது சிறிது உருண்டையாக உருட்டவும். 

✤இப்போது, ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு அதில் 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ரோஸ் எசன்ஸ்விட்டு கொதிக்கவிட்டால் சர்க்கரை பாகு ரெடி. 

✤உருட்டிய உருண்டைகளை தனித்தனியாக சர்க்கரை பாகில் போட்டு அதை சுமார் 2 - 3 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். அவ்வளவு தான், சுவையான மூவர்ண ரசகுல்லா தயார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்