Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Pooran Kadi Treatment: பூரான் கடிச்சா என்ன செய்யணும்? வீட்டு வைத்தியமும் அறிகுறிகளும்....!!

Nandhinipriya Ganeshan June 08, 2022 & 16:30 [IST]
Pooran Kadi Treatment: பூரான் கடிச்சா என்ன செய்யணும்? வீட்டு வைத்தியமும் அறிகுறிகளும்....!!Representative Image.

Centipede Bite Treatment in Tamil: என்னதான் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலும் கோடைக்காலத்தில் பூச்சிகள் வீட்டை சுற்றி வலம் வரும். வண்டுகள், எறும்புகள், சிறு பூச்சிகள் தவிர பூரான், தேள் போன்ற விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வரும். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போதோ ஏதாவது பூச்சி கடித்து விடும். சில சமயங்களில் பெரியவர்களையும் கூட. கடித்தது எந்த வகை பூச்சி என்பதை தோலில் ஏற்படும் தடிப்புகளை வைத்தே எளிதில் கண்டுபிடித்து விடலாம். 

பூரான் கடி பெரும்பாலும் விஷத்தன்மையற்றது. என்றாலும் உடலில் உபாதை மிக அதிகமாக இருக்கும். பெரும்பாலும் பூரான் கடிக்கும் போது வலி உடனே தெரியாது. இரண்டு நாட்களுக்கு பிறகு தான் தெரியும். எனவே, பூரான் கடித்த இடத்தில் ஆண்டி செப்டிக் சோப் போட்டு நன்றாக கழுவ வேண்டும். பின்னர் அரிப்பு நீங்க கடித்த இடத்தில் மண்ணெண்ணெய் விட்டு நன்றாக தேய்த்தால் அரிப்பும், தடிப்பும் நீங்கும். அதன்பின், உள்ளுக்கு பனைவெல்லம் சாப்பிட வேண்டும்.

இப்போது பூரான் கடித்தால் உண்டாகும் அறிகுறிகள் என்னென்ன, கடித்த உடன் செய்ய வேண்டிய வீட்டு வைத்தியங்கள் (home remedies for centipede bite) என்ன என்பது பற்றி பார்க்கலாம். 

பூரான் கடி அறிகுறிகள்:

  • கடுமையான அரிப்பும் எரிச்சலும் இருக்கும்
  • தோல் சிவப்பாக இருக்கும்
  • தலைவலிப்பது போல இருக்கும்
  • ஒரு சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கும்
  • கடித்த இடத்தில் வீக்கம் இருக்கும்

பூரான் கடிக்கு வீட்டு வைத்தியம்:

மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், கல் உப்பு - ¼ கைப்பிடி, குப்பை மேனி இலை - ஒரு கைப்பிடி ஆகியவற்றை அரைத்து, உடல் முழுவதும் பூசி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் மட்டும் செய்து வந்தால் பூரான் விஷம் முறிந்து தடிப்புகள் (centipede bite treatment in tamil) மறைந்து விடும். 

பூரான் கடித்த இடத்தில் நன்றாக மஞ்சள் கலந்த நீரில் கழுவினால் உடலில் பரவும் நஞ்சு குறையக் கூடும். அரிப்பும் குறையும். 

குழந்தைகளுக்கு பூரான் கடித்த உடன் பனை வெல்லத்தை கரைத்து உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.

குறிப்பு: பூரான் கடி பெரியவர்களை காட்டிலும் குழந்தைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியது. அதனால், கை வைத்தியம் தற்காலிகமாக செய்து முடித்ததும், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. 

குழந்தைகளுக்கு 6 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பு அவசியம். அதுவே பெரியவர்களாக இருந்தால் 2 மணி நேரமாவது அவசியம். 

பூரான் கடித்தால் இதெல்லாம் பண்ணக் கூடாது:

  • புளி அதிகமாக சேர்த்துக் கொள்ள கூடாது.
  • வெயிலில் வராமல் மூன்று நாள் வீட்டிலே இருக்கவேண்டும். 
  • உப்பும் அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்