Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உடல் முழுவதும் முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் அரிய வகை நோய்.. காரணங்களும் அறிகுறிகளும்.. | Werewolf Syndrome Symptoms in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
உடல் முழுவதும் முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் அரிய வகை நோய்.. காரணங்களும் அறிகுறிகளும்.. | Werewolf Syndrome Symptoms in TamilRepresentative Image.

பொதுவாக, மனிதர்களுக்கு தலையில் தான் அதிகப்படியான முடிவளர்ச்சி இருக்கும். மேலும் ஆண், பெண் இருபாலருக்குமே கை, கால் மற்றும் உடலில் மற்ற உறுப்புகளில் முடி இருக்கும். இது இயல்பான ஒன்று தான். ஆனால், உடலின் அனைத்து பகுதிகளிலும் முடி வளர்ந்திருந்தால் எப்படி இருக்கும். பொதுவாக விலங்குகளில் சிலவற்றிற்கு தான் உடல் முழுவதும் முடி வளர்ச்சி காணப்படும். அதுபோல உடல் முழுவதும் மனிதர்களுக்கு இருந்தால் அதை 'ஹைபர்டிரிகோசிஸ்' என்பார்கள். இதை வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இந்த அரிய வகை நோயானது, உலகில் இதுவரை 50 பேருக்கு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வேர்வோல்ஃப் சிண்ட்ரோம் ஏற்படுவதற்கான காரணம், அறிகுறிகள், சிகிச்சை விருப்பங்களை விரிவாக பார்க்கலாம்.

ஹைபர்டிரிகோசிஸ் என்றால் என்ன?

ஹைபர்டிரிகோசிஸ் என்பது ஒரு அரிதான நோய். இது ஒரு நபரின் உடலில் அபிரிமிதமான முடி வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, முடி வளர்ச்சி இல்லாத பகுதிகளிலும் முடி வளர்ந்து காணப்படும். இது வயது மற்றும் பாலினத்தை பொருட்படுத்தாமல் யாரையும் பாதிக்க கூடியது. இதில் பிறவி ஹைபர்டிரிகோசிஸ் லானுகினோசா, பிறவி ஹைபர்டிரிகோசிஸ் டெர்மினலிஸ், நெவாய்ட் ஹைபர்டிரிகோசிஸ், ஹிர்சுட்டிசம் என பல வகைகள் உள்ளன.

ஹைபர்டிரிகோசிஸ் காரணம்:

இந்நோயானது மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வு காரணமாக ஏற்படுகிறது என்று மருத்துவர் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ஊட்டச்சத்து குறைபாடு, ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டுகள் அல்லது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மினாக்ஸிடில் போன்ற மருந்துகளும் இந்த அரிய வகை நோயை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

ஹைபர்டிரிகோசிஸ் அறிகுறிகள்:

அதிகப்படியான முடி வளர்ச்சியே இந்த அரிய வகை நோயின் ஒரே அறிகுறியாகும். இருப்பினும், முடியின் அடர்ச்சியானது மாறுபடும். லானுகோ, வெல்லஸ் மற்றும் டெர்மினல் என்ற மூன்று வகை உண்டு.

வெல்லஸ் வகை முடி மிகவும் குறுகிய நுண்ணறைகளைக் கொண்டிருக்கும். மேலும், இது உதடுகளில் அல்லது கால்களின் பாதங்களில் முடி வளர்ச்சியை ஏற்படுத்தும்.

லானுகோ வகை முடி குழந்தைகளில் பரவலாக காணப்படுகிறது. டெர்மினல் வகை முடி நீளமாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்கும். இருப்பினும், முடியின் நீளம் பகுதியைப் பொறுத்து மாறுபடலாம்.

சிகிச்சை என்ன?

இது ஒரு மரபியல் நோய் என்பதால் இதற்கு நிரந்தர சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், ஷேவிங், வாக்சிங், பிளக்கிங், ஹேர் ப்ளீச்சிங், லேசர் சர்ஜரி, கெமிக்கல் எபிலேஷன் போன்ற முடி அகற்றும் முறைகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த முறைகள் சிறிது காலத்திற்கு மட்டுமே முடியை அகற்றும் மற்றும் அடிக்கடி மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்