Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Chicecream: பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டைக்கு அடுத்தபடியாக உருகாத ஐஸ்கிரிம்.. சீனாவின் சித்து விளையாட்டு…!!

Nandhinipriya Ganeshan July 13, 2022 & 18:15 [IST]
Chicecream: பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டைக்கு அடுத்தபடியாக உருகாத ஐஸ்கிரிம்.. சீனாவின் சித்து விளையாட்டு…!!Representative Image.

Chicecream: சமீபத்தில் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான உணவு பொருட்களான முட்டை மற்றும் அரிசியில் கலப்படம் செய்யப்பட்டு மக்களிடையே பீதியை கிளப்பி வந்தனர். இதற்கெல்லாம் காரணம் விலை வாசி அப்படி ராக்கெட் வேகத்தில் ஏறி வருகிறது. செயற்கை முட்டை, செயற்கை அரிசி போன்றவை சாத்தியமா? இப்படியெல்லாம் நடிக்குமா? என்று யோசித்து கொண்டிருக்கும் வேளையில், சீனா ஒரு வேலையை பார்த்திருக்கிறது. அதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

உருகும் ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீம் என்றால் யாருக்கு தாங்க பிடிக்காமல் இருக்கும். அதுவும் ஐஸ்கிரீம் என்று சொல்லும்போது அதன் உருகும் சுவை தான் நினைவுக்கு வரும். ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து கவரை பிரிக்கும் போதே உருகத் தொடங்கிவிடும். அப்படி உருகிபோய்விடும் என்பதற்காகவே வேக வேகமாக சாப்பிட வேண்டும். கொஞ்சம் ரசித்து ருசித்து சாப்பிடலாம் என்று நினைத்தால் குடிக்க தான் வேண்டும். இப்படி தான் நாம் ஐஸ்கிரீமை சாப்பிடுவோம்.

சீனாவின் புதிய தயாரிப்பு

ஆனால், சீனாவின் பெய்ஜிங் நரத்தை சேர்ந்த சைய்ஸ்கிரீம் 'Zhong Xue Gao (அ) Chicecream' என்ற பிரபல ஐஸ்கிரீம் நிறுவனம் ஒரு வித்தியாசமான ஐஸ்கிரீமை உருவாக்கியுள்ளது. சீனாவில் அதிக விலைக்கு விற்கப்படும் இந்த ஐஸ்கிரீமை நெருப்பில் காட்டினாலும் சரி.. அதை 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உள்ள அறையில் வைத்தாலும் சரி.. ஒரு மணிநேரத்திற்கு பிறகும் அவ்வளவாக உருகுவதே இல்லையாம்.

தங்களது ஐஸ்கிரீம் எவ்வளவு உறுதியானது என்பதை நிறுவனத்தினர் வீடியோவாக எடுத்து, பிரபல சீன இணையதளமான வெய்போவில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ 500 மில்லியன் வீவ்ஸ்களை அள்ளி குவித்துள்ளது. இது தான் இவங்களுக்கே வேட்டாகவும் மாறியிருக்கிறது.

உருகாத ஐஸ்கிரீம்

ஆம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் மறுபுறம் பீதியையும் கிளப்பியுள்ளது. நெருப்பில் கூட உருகவில்லை என்றால் அதில் நிச்சயம் நிறைய கெமிக்கல் கலக்கப்பட்டிருக்கும் என்று தானே நினைக்க தோன்றும். இதனால் நிறுவனம் சர்ச்சைக்கு உள்ளாகியது. இதனால் தங்களது புதிய ஐஸ்கிரீமின் மூலப் பொருட்கள் குறித்த விளக்கத்தையும் சைய்ஸ்கிரீம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயற்கை மூலப்பொருட்களால் ஆனது

நெருப்பில் கூட ஐஸ்கிரீம் உருகவில்லை என்பதற்காக அதில் அதிக ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்குமோ என மக்கள் அஞ்சத்தேவையில்லை. இதில் சேர்க்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்கள் அனைத்தும் சீனாவின் தேசிய உணவு பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டவை என்றும், இயற்கையான மற்றும் உள்நாட்டில் கிடைக்கும் மூல பொருட்களை கொண்டு தான் தயாரிப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை கொஞ்சம் அதிகம்

மேலும், 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் செலுத்தப்பட்டு தயாரிக்கப்படும் இந்த ஐஸ்கிரீமின் விலை 66 சீன யுவான் என்று சொல்லப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 780 ஆம்.

Tags: 

Chicecream | Chicecream price | Viral news | World news | Chicecream don't melt | Chinese ice cream | China viral ice cream


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்