Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செவ்வாழைப்பழத்தை இந்த நேரத்துல சாப்பிடுங்க. இந்த பயன்கள் அனைத்தையும் பெறலாம்.. | Red Banana Benefits in Tamil

Gowthami Subramani Updated:
செவ்வாழைப்பழத்தை இந்த நேரத்துல சாப்பிடுங்க. இந்த பயன்கள் அனைத்தையும் பெறலாம்.. | Red Banana Benefits in TamilRepresentative Image.

நம் உடலுக்கு நன்மை தரக்கூடியவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்வது மருத்துவ ரீதியான பயன்களைத் தரும். ஆனால், ஃபாஸ்ட்புட் என்ற பெயரில் கடைகளில் வாங்கிச் சாப்பிடும் உணவுகளிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் மக்கள். நோயில்லாமல் வாழ்வதற்கு, சில சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியம் ஆகும். காய்கறிகள், பழங்கள் வகைகளில் உள்ள எண்ணற்றவை மருத்துவ ரீதியான பயன்களைத் தரக்கூடியதாக அமைகிறது. அந்த வகையில், தற்போது செவ்வாழைப் பழத்தை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும், அதனால் என்னென்ன பலன்களைப் பெறலாம் என்பது குறித்து இதில் காணலாம்.
 

செவ்வாழைப்பழத்தை இந்த நேரத்துல சாப்பிடுங்க. இந்த பயன்கள் அனைத்தையும் பெறலாம்.. | Red Banana Benefits in TamilRepresentative Image

செவ்வாழை பழம் சாப்பிட சரியான நேரம்

செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவதற்கென சரியான நேரம் உள்ளது. அதன் படி, காலை எழுந்தவுடன் 6 மணிக்கு சாப்பிடலாம். இந்த நேரத்தை விட்டால், பிறகு பகல் 11 மணி அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம். உணவு உட்கொண்ட உடனே, பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், உணவு எடுத்த உடனேயே செவ்வாழைச் சாப்பிடுவதன் மூலம், அது மந்தத்தன்மையை அளிப்பதுடன், முழு சத்துக்களையும் தராது. இது அனைத்துப் பழங்களுக்கும் பொருந்தும்.
 

செவ்வாழைப்பழத்தை இந்த நேரத்துல சாப்பிடுங்க. இந்த பயன்கள் அனைத்தையும் பெறலாம்.. | Red Banana Benefits in TamilRepresentative Image

செவ்வாழை பழத்தின் நன்மைகள்

✤ மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொடர்ந்து செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டு வருவதன் மூலம் அவர்களுக்குக் கண்பார்வை சரியாகி தெளிவாகத் தெரியும்.

✤ நரம்புத் தளர்ச்சி ஏற்படும் போது, உடல் வலிமை குறையும். மேலும், ஆண்மை குறைபாடு குறையும். எனவே, நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரவு நேரத்தில் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம். இவ்வாறு தொடர்ந்து 48 நாள்களுக்கு சாப்பிட நரம்புகள் வலிமை அடையும்.

✤ பல் வியாதிகளைக் குணப்படுத்தவும், செவ்வாழை சிறந்த மருந்தாகச் செயல்படுகிறது. பல் அசைவு, பல்வலி போன்றவை ஏற்பட்டால், தொடர்ந்து 21 நாள்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர பல் சம்பந்தமான பிரச்சனைகளும் குணமாகும்.

செவ்வாழைப்பழத்தை இந்த நேரத்துல சாப்பிடுங்க. இந்த பயன்கள் அனைத்தையும் பெறலாம்.. | Red Banana Benefits in TamilRepresentative Image

✤ வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விதமாக செவ்வாழைப்பழம் உதவுகிறது. அதாவது, முந்தைய தினத்தில் சாப்பிட்ட சில உணவுகள் காரணமாக, மறுநாள் காலையில் மலம் வெளியேற முடியாமல் இருக்கும். காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிடும் போது, அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும்.

✤ தோல் வெடிப்பு, சொரி, சிரங்கு போன்ற சரும வியாதிகளுக்கு நிவாரணம் தரும் விதமாக செவ்வாழைப் பழம் அமையும். தொடர்ந்து ஏழு நாள்களுக்கு செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வர, சரும நோய் குணமடையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்