Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Can I Eat Dates At Night: பேரிச்சம் பழத்தை இரவில் சாப்பிடலாமா?

Nandhinipriya Ganeshan July 13, 2022 & 09:15 [IST]
Can I Eat Dates At Night: பேரிச்சம் பழத்தை இரவில் சாப்பிடலாமா?Representative Image.

Can I Eat Dates At Night: பேரிச்சம் பழத்தை தாராளமாக இரவில் சாப்பிடலாம். இந்த பேரிச்சம் பழத்தில் ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய அனைத்து ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. தினமும் 2-4 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டுவதால் உடலில் எண்ணற்ற அற்புதங்கள் நிகழ்கின்றன. அதுவும் இரவில் சாப்பிட்டு வந்தால் கூடுதல் பலன். இப்போது தினமும் 2 பேரிச்சம் பழத்தை இரவு தூங்க செல்வதற்கு முன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.

❖ உடலில் வைட்டமின் ஏ சத்து குறைவாக இருந்தால் கண்பார்வை மங்கலாகும். எனவே, தினமும் இரவில் 2 பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் வைட்டமின் ஏ சத்து நிறைவு செய்யப்பட்டு கண் பார்வை அதிகரிக்கும். குறிப்பாக மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டும்.

❖ மேலும் இதில் காணப்படும் வைட்டமின்கள், இரும்புச்சத்து, புரோட்டீன் போன்றவை தசைகளை வலுவாக்குவதோடு, உடலில் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

❖ மலம் கழிப்பதில் சிக்கல் இருப்பவர்கள் தினமும் 2 பேரிச்சம் பழம் இரவில் சாப்பிடுங்கள். இந்த பிரச்சனையில் இருந்து விரைவில் குணமடையலாம்.

❖ பேரிச்சம் பழத்தை இரவில் சாப்பிடும் போது இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக் கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. அதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவும்.

❖ மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் தினமும் 2-4 பேரிச்சம் பழத்தை தவறாமல் இரவில் சாப்பிட்டு வாருங்கள். கால்சியம் பற்றாக்குறையால் தான் இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் அந்த பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபட முடியும். ஏனென்றால் பேரிச்சம் பழம் தான் கால்சியத்தின் இருப்பிடம் ஆச்சே.

❖ பேரிச்சம் பழத்தில் காணப்படும் அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் இரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

❖ இதில் உள்ள மக்னீசியம் தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய்கள் நம்மை அண்டவிடாமல் பாதுக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்