Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

வீட்டிலுள்ள பொம்மைகளை எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி?| how to clean teddy bear at home

Vaishnavi Subramani Updated:
வீட்டிலுள்ள பொம்மைகளை எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி?| how to clean teddy bear at homeRepresentative Image.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது பொம்மை.பலருக்கும் கரடி பொம்மைகள் என்றால் பிடிக்கும். காதலிப்பவர்கள் பெரும்பாலும் இந்த கரடி பொம்மைகளைத் தான் பரிசாக வாங்கி தருகிறார்கள். அப்படிப்பட்ட பொம்மையை நாம் விளையாடுவதால் அந்த பொம்மைகள் அதிகளவில் அழுக்குகள் மற்றும் தூசிகள் படிகிறது அதை எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டிலுள்ள பொம்மைகளை எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி?| how to clean teddy bear at homeRepresentative Image

பொம்மைகளைச் சுத்தம் செய்யும் முறைகள்

இந்த பதிவில் மூன்று முறைகளில் கரடி பொம்மைகளைச் சுத்தம் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

1.கரடி பொம்மைகளை கைகளில் சுத்தம் செய்வது எப்படி?

✤ கரடி பொம்மைகள் பல வகையான பொம்மைகள் உள்ளது. சாதாரணமான பொம்மைகள், பேட்டரி பொம்மைகள் மற்றும் கற்கள் அதிகளவில் உள்ள பொம்மைகள் மற்றும் அதிகளவில் வேலைப்பாடு செய்த பொம்மைகள் உள்ளது.

✤ கைகளில் துவைக்கும் பொம்மைகள்.சாதாரணமான பொம்மைகள் மற்றும் துணிகள் செய்த பொம்மைகள் மட்டும் துவைக்க முடியும்.

✤ முதலில் கரடி பொம்மைகளில் கழற்றக்கூடிய துணிகள் இருந்தால் அதைக் கழற்றவும்.

✤ அதன் பின், ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி அதில் சோப்பு 3 சொட்டுகள் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும்.

வீட்டிலுள்ள பொம்மைகளை எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி?| how to clean teddy bear at homeRepresentative Image

✤ அதைப் பொம்மையின் அழுக்குகள் அதிகமாக இருக்கும் இடத்தை முதலில் எடுத்து அந்த நீரில் முழுவதுமாக முழுக்கவும்.

✤ அதன் பின் மற்ற பகுதிகளில் முழுவதுமாக மூழ்கிய பிறகு அந்த பொம்மையை எடுத்து அழுக்குகள் அதிகளவில் இருக்கும் இடத்தில் நன்றாக கைகளில் தேய்த்து கொள்ளவும்.

✤ அதன்பின் அழுக்குகள் நன்றாக வந்த பிறகு, அதை மற்றொரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற்றி அதில் பொம்மையை மூழ்கி நன்றாக அழுக்குகள் சுத்தமான உடன் அந்த பொம்மை எடுக்கவும்.

✤ அதற்குப் பின், அந்த பொம்மையை உலர்த்தச் சூரிய ஒளியில் வைக்காமல் நிழலில் வைத்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அதை எடுத்து நன்றாக உலரவில்லை என்றால் அதை வீட்டில் உள்ள விசிறி காற்றில் வைக்கவும்.

✤ அந்த பொம்மையின் ஆடைகளை எடுத்து தனியைச் சோப்பு நீரில் மூழ்கி அதை நன்றாகப் பிழிந்து கொள்ளவும்.

✤ அதற்குப் பின், அதை மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்றாக மூழ்கி அலச வேண்டும்.அதற்குப் பின், அதை நன்றாக உலர விடவும்.

✤ உலர்ந்த பிறகு, பொம்மையை எடுத்து அதில் துணிகளைப் போட்டு மீண்டும் விளையாடலாம்.

வீட்டிலுள்ள பொம்மைகளை எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி?| how to clean teddy bear at homeRepresentative Image

2.கரடி பொம்மைகளை ஸ்பாஞ் சுத்தம் செய்வது எப்படி ?

✤ இந்த முறையில் பேட்டரி பொம்மைகள் மற்றும் கல் வைத்த பொம்மைகள், அதிகளவில் வேவைப்பாடுகள் கொண்ட பொம்மைகளைச் சுத்தம் செய்யலாம்.

✤ ஆனால் இதில் சாதாரணமான பொம்மைகள் இருந்தால் இதில் பயன்படுத்தக் கூடாது.அந்த மாதிரி பொம்மைகளைப் பயன்படுத்தினால் அதில் உள்ள அழுக்குகள் எளிதில் போகாது.

✤ இந்த முறையில் பொம்மைகளில் அழுக்குகள் உள்ள பகுதிகள் முதலில் ஈரமானதாக மாற்றுவதற்காக ஒரு துணியில் தண்ணீர் சேர்த்து அதை அழுக்குகள் இருக்கும் பகுதிகளில் தேய்த்து விடவும்

வீட்டிலுள்ள பொம்மைகளை எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி?| how to clean teddy bear at homeRepresentative Image

✤ அதற்குப் பின், மைக்ரோஃபைபர் துணியில் 2 சொட்டு சோப்பு நீர் ஊற்றி அதை அழுக்குகள் இருக்கும் இடங்களில் மென்மையாகத் தேய்த்துக் கொள்ளவும்.

✤ அதன் பின், மைக்ரோஃபைபர் துணியில் வெதுவெதுப்பான நீரில் நளைத்து, அதைத் தேய்த்த இடத்தில் வைத்துத் துடைத்து சோப்பு அழுக்குகளை முழுவதுமாக துடைத்து எடுத்துக் கொள்ளவும்.

✤ அந்த பொம்மையைச் சிறிய நிமிடங்கள் உலர்த்தினால் விளையாடுவதற்குப் பொம்மைகள் தயார்.

வீட்டிலுள்ள பொம்மைகளை எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி?| how to clean teddy bear at homeRepresentative Image

3.கரடி பொம்மைகளை வாஷிங் மெஷினில் துவைப்பது எப்படி ?

✤ பொம்மைகளில் உள்ள பராமரிப்பு லேபிளை முதலில் படிக்கவும் அதை கைகளில் அல்லது மெஷினில் துவைக்கலாம் எனப் பரிந்துரைத்தால் மட்டும் அதைத் துவைக்கலாம்.

✤ பேட்டரி மற்றும் கல் வைத்த பொம்மைகள், அதிகளவில் வேலைப்பாடு உள்ள பொம்மைகள் இந்த மெஷினில் துவைக்க வேண்டாம்.

✤ துணிகளால் செய்த பொம்மைகள் மற்றும் குறைந்த வேலைப்பாடு உள்ள பொம்மைகளை மற்றும் பயன்படுத்தலாம்.

✤ முதலில் பொம்மையின் மேல் உள்ள துணிகளைக் கழற்றவும்.அதற்குப் பிறகு வாஷிங் மெஷினில் பொம்மையைப் போட்டு சில சோப்பு துளிகள் மட்டுமே சேர்க்க வேண்டும்.

வீட்டிலுள்ள பொம்மைகளை எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி?| how to clean teddy bear at homeRepresentative Image

✤ அதிகளவில் சேர்த்தால் சோப்புகள் பொம்மையில் தங்கி விடும்.அதனால் சோப்பு சேர்த்த பிறகு, அதில் குளிர்ந்த நீர் ஊற்றி அதை நன்றாகத் துவைக்கவும்.

✤ மெஷினில் சில நிமிடங்களில் கழித்து எடுத்து விடவும் . அதிக நேரம் துவைத்தால் பொம்மையில் உள்ள துணிகள் கிழிந்தும், பொம்மைகளின் அழகு இருக்காது.

✤ வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தக் கூடாது.அதைப் பயன்படுத்தினால் பொம்மை கறைந்து விடவாய்ப்புகள் அதிகம்.

✤ துவைத்தபின்,அதை மற்றொரு நீரை வாஷிங் மெஷினில் மாற்றி அதை அலசவும்.அழுக்குகள் அனைத்தும் நீங்கிய பிறகு அதை எடுத்து நன்றாகத் தண்ணீரைப் பிழிந்து கொள்ளவும்.

வீட்டிலுள்ள பொம்மைகளை எளிமையான முறையில் சுத்தம் செய்வது எப்படி?| how to clean teddy bear at homeRepresentative Image

✤ முடிந்த வரை கைகளில் பிழிந்த பின்,அந்த பொம்மையை எடுத்து வாஷிங் மெஷினில் டிரையரில் போட்டு சில நிமிடங்கள் விட்டு எடுத்தால் பொம்மை நன்றாகக் காய்ந்திருக்கும்.

✤ அதிலிருந்து கழற்றிய துணிகளை மேல் கூறிய முறையில் துவைத்த பின், உலர்த்திய பின் அந்த துணியை பொம்மையில் போட்டு விட்டால் பொம்மை விளையாடுவதற்குத் தயார்.

✤ பொம்மையை வாஷிங் மெஷினில் போடும் போது வேறு எந்த துணிகள் எதுவும் சேர்க்கக் கூடாது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்