Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்களா நீங்கள்.? கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க..! | Contact Lens Drawbacks

Gowthami Subramani Updated:
கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்களா நீங்கள்.? கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க..! | Contact Lens DrawbacksRepresentative Image.

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதால், புற்றுநோய் எவ்வாறு உருவாகிறது என்பது குறித்த முழு விவரங்களை இதில் காணலாம்.

கான்டக்ட் லென்ஸ்

பொதுவாக, கண் குறைபாடுகளை நீக்குவதற்கு கண்ணாடி பயன்படுத்துவர். ஆனால், தற்போது கண்ணாடிகளைப் பயன்படுத்த பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. எனவே, கான்டெக்ட் லென்ஸ்-ஐ பயன்படுத்தி வருகின்றனர். அதே போல, கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கு முன், நாம் நிறைய விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது ஆகும். கான்டாக்ட் லென்ஸ் ஆனது கருவிழியின் வடிவத்தில் டிரான்ஸ்பரன்டாக இருக்கும். ஆனால், இதை உபயோகிப்பதால் பல்வேறு விதமான தீமைகள் உள்ளன. அந்த வகையில் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உண்டு.

புற்றுநோய் ஏற்படும் அபாயம்

சில மென்மையான கான்டாக்ட் லென்ஸ்கள், புற்றுநோயை உண்டாக்கக் கூடிய சில இரசாயனங்களால் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், ஆராய்ச்சியாளர்கள் ஆய்விற்காக 18 வகையான காண்டாக்ட் லென்ஸ்களை பரிசோதித்தனர். அவை ஒவ்வொன்றிலும், BFA எனப்படும் பாலிஃப்ளூரோஅல்கைல் பொருளின் குறிப்பாக ஆர்கானிக் ஃப்ளோரின் மிக அதிக அளவில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.

இரசாயனத்தால் ஏற்படும் விளைவுகள்

குறிப்பாக, PFAS வகையைச் சார்ந்த 14,000 இரசாயனங்களின் வகுப்பைக் குறிக்கிறது. பொதுவாக, நுகர்வோர் தயாரிப்புகளில் இருக்கும் நீர் மற்றும் வெப்பத்தை எதிர்க்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது. அதன் படி, ஆடைகள், பசைகள், கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை இயற்கையாகவே உடைந்து போகாத தன்மையைக் கொண்டுள்ளதால், இதில் இரசாயனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

கான்டாக்ட் லென்ஸால் ஏற்படும் விளைவுகள்

இந்த வகை இரசாயனங்களால், புற்றுநோய், கருவில் சிக்கல் உண்டாகுதல், கல்லீரல் நோய், சிறுநீரக நோய் மற்றும் ஆட்டோஇம்யூன் கோளாறுகள் உள்ளிட்ட சிக்கல்கள் வருவதாகக் கூறப்படுகிறது. கான்டாக்ட் லென்ஸ்களை பரிசோதித்த போது 100 ppm –ஐத் தாண்டிய ஃப்ளோரின் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால். இப்போது வரை PFAS-ஆல் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகள் தெளிவாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கான்டாக்ட் லென்ஸைத் தவிர

இந்த வகையான இரசாயனங்கள், கான்டாக்ட் லென்ஸ் மட்டுமின்றி உலகில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள டாய்லெட் பேப்பர்களில் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஆய்வுகளில் வெளியான தகவல்களின் படி, இந்த கான்டாக்ட் லென்ஸ் ஆனது அதிக அளவு கொழுப்பு, இரத்த அழுத்த அளவு, சிறுநீரகம் அல்லது டெஸ்டிகுலர் புற்றுநோய் ஆபத்து, குழந்தைகளுக்கு தடுப்பூசி திறன் குறைதல் உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்