Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எலுமிச்சை சாற்றில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா? மிஸ் பண்ணிடாதீங்க.. | Lemon Juice Benefits in Tamil

Editorial Desk Updated:
எலுமிச்சை சாற்றில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா? மிஸ் பண்ணிடாதீங்க.. | Lemon Juice Benefits in TamilRepresentative Image.

நமக்கு மிக எளிமையாகவும், விலை மலிவாகவும் கிடைக்க கூடிய ஒரு பழம் தான் எலுமிச்சைப்பழம். இதில், கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மனிதர்களுக்கு ஏற்படும் எல்லா விதமான நோய்களையும் குணமாக்கும் அருமருந்தாக திகளும் இந்த எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்களை விரிவாக பார்க்கலாம்.

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்:

எலுமிச்சை பழத்தில் உள்ள சிட்ரிக் ஆசிட் கல்லீரலில் உள்ள  நொதிகளின் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது.

வாந்தி, குமட்டல், மயக்கம், காது  வலி போன்றவற்றை குணப்படுத்துக் கூடியது.

தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சையை இரண்டாக வெட்டி தேய்த்தால் விஷம் முறியும்.

விரலில் நகச்சுற்றி ஏற்பட்டால் எலுமிச்சையை துளையிட்டு அதனுள் விரலை விட்டால் வலி குறையும்.
    
எலுமிச்சை பழ சாற்றை தலையில் தேய்த்து குளித்தால் பித்தம், உடல் உஷ்ணம் போன்றவை நீங்கும்.    

எலுமிச்சை சாற்றுடன் தேனை கலந்து குடித்து வர வறட்டு இருமல் குணமாகும்.    

மருதாணியுடன் எலுமிச்சை சாற்றை அரைத்து தேய்த்து வந்தால் பாதத்தில் எரிச்சல் குறையும்.    

எலுமிச்சை பழத்தின் விதையை சுடுநீரில் போட்டு அதில் வரும் ஆவியை முகத்தில் படும்படி ஆவி பிடித்தால் முகம் பொழிவு பெரும்.

எலுமிச்சை சாற்றில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா? மிஸ் பண்ணிடாதீங்க.. | Lemon Juice Benefits in TamilRepresentative Image

இரத்தத்தை சுத்தகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த எலுமிச்சையை ஏதாவொரு முறையில் தினமும் சேர்த்துக் கொண்டால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கறையும்.

வெளியூர் பயணம் செல்லும்போது எலுமிச்சை ஜூஸ் குடித்துவிட்டு சென்றால் சிறுநீரக தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

காலை நேரத்தில் வெந்நீரில் 10 மிலி எலுமிச்சை சாற்றை கலந்து குடித்துவந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும். குடல் இயக்கம் சீராக இருக்கும். 

கொலஸ்டிரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் முதலியவற்றை குறைக்கும் இந்த எலுமிச்சை ஜூஸை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும்.

கபம் அதிகம் இருந்தால்  10 மிலி எலுமிச்சை சாற்றுடன், 5 மிலி இஞ்சி சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம். 

எலுமிச்சைச் சாற்ற, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் தூர்நாற்றம், பல் வலி, ஈறுகளில் இரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும். 

வயிற்றில் காற்று அடைத்ததுபோல், அழுத்தமாக இருந்தால் சுடுநீரில் எலுமிச்சைச் சாறு, வறுத்துப் பொடித்த சீரகம் அரை டீஸ்பூன், சிறிது தேன் கலந்து அருந்தினால், சட்டென காற்று  வெளியேறி, வயிறு லேசாகும். 

குறிப்பு: சிறுநீரகத்தில் கல் மற்றும் பிற பிரச்சனை இருப்பவர்கள் அமிலத்தன்மை உடைய பழ வகைகளை தவிர்ப்பது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்