Tue ,May 28, 2024

சென்செக்ஸ் 75,390.50
-19.89sensex(-0.03%)
நிஃப்டி22,932.45
-24.65sensex(-0.11%)
USD
81.57
Exclusive

Daily Face Care Tips in Tamil: எந்த நேரமும் அழகா இருக்க… இத மட்டும் பண்ணுங்க…! பளிச்சினு இருப்பீங்க…

Gowthami Subramani June 14, 2022 & 20:05 [IST]
Daily Face Care Tips in Tamil: எந்த நேரமும் அழகா இருக்க… இத மட்டும் பண்ணுங்க…! பளிச்சினு இருப்பீங்க…Representative Image.

Daily Face Care Tips in Tamil: இளம் பருவமானாலும், முதியவரானாலும் பெண்கள் அனைவரும் எண்ணக் கூடியது அழகாக இருக்க வேண்டும் என்பது. அதே போல, முகம் எப்போது ஜொலித்துக் காணப்பட யாருக்குத் தான் ஆசை இல்லாமல் இருக்கும். முகத்தை நன்றாகப் பராமரித்தால், எந்த விதமான கிரீம்களும் தேவையில்லை. முகம் ஜொலித்துக் காணப்படுவதை உணரலாம் (Daily Face Care Tips in Tamil).

சரும பராமரிப்பிற்கு முக்கிய காரணம்

அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் பழக்கம் வழக்கங்களைப் பொறுத்தும் சரும பொலிவு இருக்கும். நாள்தோறும் நாம் செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்து வந்தாலே, முகப் பராமரிப்பு நன்றாக இருக்கும். அதிலும் குறிப்பாக, இயற்கையாக நாம் எப்படி நம் முகத்தை மிளிரும் அழகில் வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் (Skin Beauty Tips in Tamil).

நல்ல தூக்கம்

A person lying on a bed

Description automatically generated with medium confidence

உடலில் தோன்றும் சருமப் பிரச்சனைகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்தோடும், மன ஆரோக்கியத்தோடும் தொடர்புடையவைகளாகவே உள்ளன (Summer Beauty Tips in Tamil). இதில் குறிப்பாக நல்ல தூக்கத்தைப் பெறாமல் இருப்பது முக்கிய காரணியாக அமையும். நல்ல தூக்கமின்மையால் மன அழுத்தம் அதிகரித்து காணப்படும். மேலும், இதனால் அழகும், ஆரோக்கியமும் மிகுந்த பாதிப்பிற்கு உண்டாகும் எனக் கண்டறியப்பட்டுள்ளது (Glowing Skin Tips in Tamil).

போதுமான அளவு நீர் பருகுதல்

A person drinking from a glass

Description automatically generated with low confidence

நீர் பருகுதல் என்பது பொதுவான ஒரு செயல்முறையாகும். இதன் மூலம் உடல் ஆரோக்கியத்துடன் காணப்படும். ஆனால், உடல் அழகிற்கும் இதற்கும் இடையேயான உறவு என்னவெனில், தினசரி அளவில் நீரைப் போதுமான அளவுப் பருகவில்லை எனில், உடலின் வெப்பம் அதிகரித்துக் காணப்படும். மேலும், இதனால் பல்வேறு வகையான உடல் உபாதைகள் ஏற்படும். அத்துடன் முகத்தில் சருமப் பிரச்சனைகள் தோன்றவும் இது காரணமாக மாறிவிடும் (Healthy Skin Tips in Tamil).

சுத்தமான நீரில் முகம் கழுவுதல்

A person washing the hands in the sink

Description automatically generated with medium confidence

நம் முகத்தை அசுத்த நீரில் கழுவுவதன் மூலமும், சருமப் பிரச்சனைகள் தோன்றி, முகப் பொலிவு குறையும். அதன் படி, சருமத்தை மிகவும் ஈரப்பதமாகவும், மிகவும் அதிகமான வறண்ட நிலையில் இல்லாமலும் சரியான அளவில் பராமரிக்க வேண்டும். எனவே, காலையில் தூங்கு எழுவது முதல், இரவு படுக்கும் நேரம் வரை 5 முறையாவது சுத்தமான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும் (General Skin Care Tips In Tamil).

குறிப்பாக, முகத்துக்கு அதிக நறுமணம் கொண்ட சோப்புகளைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில், இவ்வாறு அதிக நறுமணம் கொண்ட சோப்புகளில் அதிக அளவிலான கெமிக்கல்களை உபயோகப்படுத்தி இருப்பர் (Summer Beauty Tips Tamil).

இவ்வாறு முகம் கழுவுவதினால், முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கப்படும். ஆனால், இதற்கான முகத்தில் விரல் நகங்களைக் கொண்டு தேய்த்தல் கூடாது. இதனுடன், முகத்திற்கு அதிக வெப்பத்துடன் கூடிய வெந்நீர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் (Oily Skin Care in Summer).

வியர்வையைத் துடைக்கக் கூடாது

உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட நீர் சிறுநீரகம் வாயிலாக வெளியேறும். இதற்கு அடுத்தபடியாக வியர்வை வழியாக வெளியேறக்கூடும். உடலில் இருந்து வியர்வையைக் கண்டிப்பாக வெளியேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக, பெண்கள் உடற்பயிற்சி செய்வது மிக நல்லது. ஏனெனில், உடற்பயிற்சியின் போது அதிகப்படியான கெட்ட நீர் வியர்வை வழியாக வெளியேறும் (Summer Beauty Tips for Glowing Skin).

இது போன்ற இன்னும் பிற செயல்முறைகளின் மூலம், சருமத்தை மிகவும் பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்