Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Remove Dark Circles Permanently: முகத்தின் அழகை கெடுக்கும் கருவளையங்களை அகற்ற சூப்பரான வீட்டு வைத்தியம்...!

Nandhinipriya Ganeshan August 14, 2022 & 17:15 [IST]
How to Remove Dark Circles Permanently: முகத்தின் அழகை கெடுக்கும் கருவளையங்களை அகற்ற சூப்பரான வீட்டு வைத்தியம்...!Representative Image.

Dark Circles Solution at Home: பெண்களுக்கு கூடுதல் அழகு சேர்ப்பதில் மிக முக்கியமான பங்கு வகிப்பது அவர்களின் கண்கள் தான். ஆனால், கீழ் இமைகளின் உண்டாகும் கருவளையம் அவர்களின் அழகையும் லுக்கையும் குறைத்து வழக்கத்தை விட வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் வரும் பொதுவான பிரச்சனை. அது அவரவர் தோலின் நிறைத்தை பொறுத்து பல நிறங்களில் தோன்றலாம். இதெல்லாம் எதனால் ஏற்படுகிறது என்று தெரிந்துக் கொள்வோம். 

Also Read: பொடுகை விரட்டுவது எப்படி?

கருவளையம் வருவதற்கான காரணங்கள்:

முதுமை

பொதுவாக, வயதான காலத்தில் வரும் கருவளையங்கள் ஏற்படுவது வழக்கம். உங்களுக்கு வயதாகும்போது, ​​கண்களைச் சுற்றியுள்ள திசு மெல்லியதாகத் தொடங்கும். அப்போது தோல் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க தேவையான கொழுப்பு மற்றும் கொலாஜன் உற்பத்தி குறைந்து, கருவளையம் ஏற்படுகிறது.

அலர்ஜி மற்றும் நீரிழப்பு

சில சமயங்களில், அலர்ஜி எதிர்விளைவுகள் மற்றும் நீரிழப்பின் போது கண்களுக்கு கீழே உள்ள பகுதி கருமையாக தோற்றமளிக்கும். உங்கள் உடலுக்கு சரியான அளவு தண்ணீர் இல்லாமல் இருந்தால், கண்களுக்குக் கீழே உள்ள சரும மங்கலடையும். இப்போதெல்லாம், பெரும்பாலான குழந்தைகள் இந்த பிரச்சனைகளால்  பாதிக்கப்படுகின்றனர்.

Also Read: சிகப்பான உதடுகளை பெற இத பண்ணுங்க..

புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம்

அதிக ஆல்கஹால் உட்கொள்வது மற்றும் புகைபிடிப்பது போன்றவை கண்களில் கருவளையங்களை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அதிகப்படியான புகை மற்றும் காஃபி பானங்கள்  உடலில் உள்ள நீரின் அளவைக் குறைத்து,  உடலை நீரிழப்புக்கு ஆளாக்கும்.

கண்ணுக்கு அதிக வேலை கொடுப்பது

நீண்ட நேரம் லேப்டாப், டிவி பார்ப்பது உங்களுடைய கண்களை மிகவும் கஷ்டப்படுத்தும். அதுமட்டுமல்லாமல், மொபைல் போன் உபயோகிப்பதும் இந்த பிரச்சனையை ஏற்படுத்தும்.

மேலும், நாம் தூங்கும்போது கண்களுக்கு கீழே உள்ள திசுக்கள் புத்துயிர் பெரும். ஒருவேளை இரவில் சரியாக தூங்காமல் இருந்தாலும் கருவளையங்கள் எளிதில் ஏற்படும். இதோடு மற்ற காரணிகளும் உண்டு,

  • மரபணு
  • உடல் சோர்வு
  • இரத்த சோகை
  • ஊட்டச்சத்து குறைபாடு

கருவளையத்தை போக்க எளிமையான வீட்டு வைத்திங்கள்:

ரோஸ்வாட்டர்

  • ரோஸ் வாட்டரில் பஞ்சை நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் 5-7 நிமிடங்கள் வைக்கவும்.
  • பின்னர் முகத்தை கழுவிடுங்கள். கருவளையங்களைத் தடுக்க வாரம் இருமுறை இந்த முறையை முயற்சிக்கவும்.
  • விரைவான பலனுக்கு இயற்கையான ரோஸ் வாட்டரை மட்டும் பயன்படுத்தவும்.

Also Read: மென்மையான கால்களை பெற இத ஃபாலோ பண்ணுங்க.. 

வெள்ளரி துண்டுகள்

வெள்ளரிக்காயில் வைட்டமின் கே உள்ளது, இது இரத்த நாளங்களை வலுப்படுத்துவதன் மூலம் கருவளையங்களை (best solution for dark circles) குறைக்கிறது. இது கருவளையங்களுக்கு ஒரு பிரபலமான தீர்வாகும்.

  • வெள்ளரிக்காயை வட்ட வடிவில் துண்டுகளாக வெட்டி, அதை 30 நிமிடங்கள் ஃபிரிட்ஜில் வைக்கவும்.
  • பின்னர், அதை எடுத்து இரண்டு கண்களிலும் 10-15 நிமிடங்கள் வைக்கவும். 
  • நீங்க இதை ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கூட செய்யலாம்

​​​​​​​Also Read: த்ரெட்டிங் செய்தால் ஆயுள் குறையுமாம்..

பால்

பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது வயதான மற்றும் நிறமிக்கு (pigmentation)எதிராக போராட உதவுகிறது. மேலும் குளிர்ந்த பால் கண்களுக்குக் கீழே உள்ள இரத்த நாளங்களுக்குத் தளர்வைக் கொடுக்கிறது.

  • 1/4 கப் சில் பாலை எடுத்து அதில் பஞ்சை நனைத்து கண்களை சுற்றிலும் வட்ட வடிவில் தடவும். 
  • விரைவான பலனுக்கு வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும்.

​​​​​​​Also Read: கேரளத்து பெண்களின் கூந்தல் ரகசியம்...

பச்சை உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் இயற்கையான ப்ளீச்சிங் தன்மை உள்ளது, இது கருவளையத்தை எளிதில் (best solution for dark circles under eyes) குறைக்கும்.

  • உருளைக்கிழங்கை வெட்டியும் பயன்படுத்தலாம் அல்லது அதன் சாறை எடுத்தும் கண்களில் தடவலாம். 
  • 10-15 நிமிடம் விட்டு, தண்ணீரில் கழுவவும்.
  • இதை வாரம் இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

டீ பேக்

  • டீ பேக்குகளை 5 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து, 20 நிமிடம் ஃபிரிட்ஜில் பெட்டியில் வைக்கவும்.
  • பின்னர், உங்கள் கண்களை மூடி, அந்த தண்ணீரை தடவவும்.
  • அவற்றை 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். குளிர்ந்த நீரில் கழுவவும்.

​​​​​​​Also Read: முகச் சுருக்கத்தை போக்கும் கொய்யா இலை..

கருவளையம் வராமல் எப்படி தடுப்பது?

  • அதிகமாக தண்ணீர் (permanent solution for dark circles) பருகுங்கள்.
  • இரவில் குறைந்தது 7 மணிநேரம் நன்றாக உறங்குங்கள்.
  • தினமும் சன்ஸ்கிரீன் அணியுங்கள்.
  • புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள்
  • ஆல்கஹால் மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும்
  • இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் கொலாஜன் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்
  • அதிகமாக, ஃபோன், லேப்டாப் பயன்படுத்துவதை குறையுங்கள்.

Tags:

How remove dark circles permanently, Dark Circles Solution at Home, best solution for dark circles, permanent solution for dark circles, best solution for dark circles under eyes


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்