Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Skin Whitening Cream at Home in Tamil: இந்த கிரீமை மட்டும் பயன்படுத்திட்டு வாங்க.. அப்பறம் பாருங்க மாயஜாலத்த...!!

Nandhinipriya Ganeshan August 13, 2022 & 14:15 [IST]
How to Make Skin Whitening Cream at Home in Tamil: இந்த கிரீமை மட்டும் பயன்படுத்திட்டு வாங்க.. அப்பறம் பாருங்க மாயஜாலத்த...!!Representative Image.

How to Make Skin Whitening Cream at Home in Tamil: சரும அழகை மேம்படுத்த பல கிரீம்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை அனைத்தும் செயற்கையாக கலக்கப்படும் கெமிக்கல் ஏராளம். இதனால், நன்றாக இருக்கும் சருமம் கூட மோசமாகவிடுகிறது. எனவே, அவற்றை தடுக்க இனி வீட்டிலேயே இயற்கையான ஃபேர்னஸ் கிரீமை தயாரித்து பயன்படுத்தலாம். இது உங்க சரும அழகை மேம்படுத்துவதோடு, சருமத்தை பளபளப்பாக மாற்றவும் உதவுகிறது. அதற்கு நீங்க இந்த கிரீமை தினமும் பயன்படுத்தினாலே போதுமானது. வாங்க, இந்த சூப்பரான ஃபேர்னஸ் கிரீமை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 

ரோஸ் எசன்ஷியல் ஆயில் - 2 சொட்டு

கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்

பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்

வைட்டமின் E கேப்ஸ்யூச் - 1 (ஜெல் மட்டும்)

ரோஸ் வாட்டர் - 1 டேபிள் ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன் 

செய்முறை:

மேற்க்கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு பவுளில் போட்டு நன்றாக அடித்து கலக்கினால் வெள்ளை நிறத்தில் சூப்பர் நறுமணத்தில் ஒரு ஜெல் கிடைக்கும். 
அவ்வளவு தான்! ஃபேர்னஸ் கிரீம் ரெடி.. இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃபிர்ட்ஜில் வைத்துக் கொண்டு இரண்டு வாரங்கள் வரை பயன்படுத்தலாம். 

பயன்படுத்துவது எப்படி?

  • தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, துடைத்து விடுங்கள். 
  • பிறகு, இந்த ஜெல்லை கொஞ்சம் தொட்டு முகம் முழுவதும்
  • தடவி, 2 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்து அப்படியே விட்டு விடுங்கள்.
  • மறுநாள் காலை முகத்தை கழுவிக்கொள்ளுங்கள். 
  • இவ்வாறு தினமும் இப்படி பயன்படுத்தி வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பத்தோடு, முகச்சுருக்கங்களும் மறையும். 

ஆயில் ஸ்கின்னா?

ஒருவேளை உங்களுக்கு ஆயில் ஸ்கின் ஆக இருந்தால், இந்த குறிப்பை பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் வரலாம். தாராளமாக பயன்படுத்தலாம் ஆனால் அதில் தேங்காய் எண்ணெய்யை மட்டும் சேர்க்காதீர்கள்.

குறிப்பு: இந்த குறிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் பாதாம் ஆயில், தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல், ரோஸ் வாட்டர் போன்றவற்றை இயற்கையாக பயன்படுத்தினால் முழு பலனை பெறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்