Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Dengue Symptoms & Treatment: உயிரைக் கொல்லும் டெங்கு நோயினைப் பற்றி கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை….!

Gowthami Subramani May 16, 2022 & 14:05 [IST]
Dengue Symptoms & Treatment: உயிரைக் கொல்லும் டெங்கு நோயினைப் பற்றி கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை….!Representative Image.

Dengue Symptoms & Treatment: கொசுக்கள் மூலம் மனிதனுக்கு பரவி, மக்களின் உயிரைக் கொல்லும் வகையில் அமையும் ஒரு கொடிய நோய் டெங்கு. சமீப காலத்தில், தற்போது பரவக்கூடிய கொரோனா தொற்று நோயைப் போல உலகின் பல்வேறு பகுதிகளில் டெங்கு வேகமாகப் பரவி வருகிறது. ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற வகை கொசு மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

உலகளாவிய வகையில் பாதிப்பு

எதாவதொரு வகையில், உலகம் முழுவதும் வைரஸ் பரவி மக்களுக்கு மிகுந்த துன்பத்தை விளைவிக்கிறது. அதன் படி, டெங்கு வைரஸால் உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆய்வு அறிக்கையின் படி, ஒரு வருடத்திற்கு மட்டும் 390 மில்லியன் மக்கள் டெங்கு வைரசால் பாதிக்கப்படுகின்றனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகளையும், இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் இங்கு காண்போம் (Dengue Symptoms & Treatment).

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்

இது ஒரு கடுமையான காய்ச்சல் போன்றதாகும். இதன் மூலம் சிறிய குழந்தைகள் முதல் வயது முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவர். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்களால் உயிரிழப்புகள் கூட ஏற்படும் அபாயம் உள்ளது. பொதுவாக, டெங்கு அறிகுறிகள் 2 முதல் 7 நாள்களுக்கு வரை நீடிக்கும். இதற்கு அடுத்து, 4 முதல் 10 நாள்களுக்குப் பிறகும் டெங்கு அறிகுறிகள் காணப்பட்டால், மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு உயிரிழப்புகள் ஏற்படும்.

டெங்குவின் லேசான அறிகுறிகள் (Dengue Symptoms)

  • கடுமையான தலைவலி
  • கண்களுக்குப் பின்னால் வலி
  • குமட்டல்
  • சொறி
  • வாந்தி எடுத்தல்
  • தசை மற்றும் மூட்டு வலிகள்

கடுமையான டெங்கு அறிகுறிகள்

  • லேசான தொற்றுக்களில் உருவான டெங்கு அறிகுறிகள் அதிகபட்ச காலமாக நீண்டு காணப்படும்.
  • இதில் 3 முதல் 7 நாள்களுக்குப் பிறகு நோயாளி முக்கிய கட்டத்தை நெருங்க வேண்டிய சூழல் ஏற்படும்.
  • இதில், பிளாஸ்மா எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும்.
  • சுவாசக் கோளாறு மற்றும் கடுமையான இரத்தப் போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கட்டுப்படுத்தும் முறை (Treatment for Dengue Virus)

டெங்கு நோய் பரவுவதற்கு மூலக் காரணமான கொசு உருவாவதை முதலில் தடுக்க வேண்டும்.

முக்கியமாகக் குடிக்கும் தண்ணீரைச் சுட வைத்துக் குடிக்க வேண்டும்.

மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், உடனே NS1 Ag, Dengue IgM அல்லது Dengue IGG போன்ற ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு டெங்கு நோய்க்குத் தீர்வு காணும் விதமாக “சனோஃபிபாஸ்டியர்” என்ற தடுப்பூசி சனோஃபி என்ற மருந்து நிறுவனத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. இது பிலிப்பைன்ஸ் நாட்டில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தடுப்பூசி மூலம் டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு காணலாம் என அறிக்கை வெளியிடப்பட்டது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்