Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Bottle Gourd Toxicity: என்னாது சுரைக்காயில நச்சு தன்மை இருக்கா? மக்களே உஷார்...!!

Nandhinipriya Ganeshan June 23, 2022 & 18:30 [IST]
Bottle Gourd Toxicity: என்னாது சுரைக்காயில நச்சு தன்மை இருக்கா? மக்களே உஷார்...!!Representative Image.

Bottle Gourd Toxicity: வெயில் காலங்களில் தான் சுரைக்காய் அதிகம் சமைக்கப்படுகிறது. ஏனென்றால் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாகும். இதை பலவகைகளில் சமைத்து சாப்பிடுவார்கள். இந்த சுவையான காய்கறியில் அதிக அளவு நார்ச்சத்துகளும், பல ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. இது பல நோய்களை தடுக்க உதவுகிறது. 

சுரைக்காயில நச்சா?

என்னதான் பல நன்மைகளை கொண்டிருந்தாலும் இதில் உள்ள நச்சுக்கள் குறித்தும் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானது. என்னாது சுரைக்காயில நச்சுத்தன்மையா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். பொதுவாக, சுரைக்காயில் டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டு என்ற நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மங்களை கொண்டுள்ளது.  இந்த நச்சானது தாவர உன்னி விலங்குகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சுரக்கப்படுகிறதாம். ஒரு சில சமயங்களில் சுரைக்காயை சாப்பிடும் போது ஒருவிதமான கசப்பு தன்மை இருந்தால், அதில் நச்சு அதிகம் இருக்கிறது (bottle gourd toxicity symptoms) என்று அர்த்தம்.

சாப்பிட்டால் என்ன ஆகும்?

எல்லா சுரைக்காயும் நச்சுத்தன்மை வாய்ந்தது கிடையாது. ஆனால், கசப்பான சுவை கொண்ட சுரைக்காயை மட்டும் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் உடலில் நச்சு எதிர்வினைகள் ஏற்பட்டு, வாந்தி, வயிற்று வலி, இரத்தக்கசிவு, வயிற்றுப்போக்கு, இரத்த சோகை, சில சமயங்களில் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். நன்றாக சமைத்து சாப்பிடும்போது அதன் பாதிப்பு பாதியாக இருக்கும். ஆனால், பெரும்பாலான மக்கள் சுரைக்காய் ஜூஸ் குடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படி பச்சையாக குடிக்கும்போது கசப்பாக இருந்தால் அதை உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. 

50-300 மில்லி டெட்ராசைக்ளிக் ட்ரைடர்பெனாய்டு சாப்பிட்டால் இரைப்பை குடல் ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை (raw bottle gourd juice side effects in tamil) ஏற்படுத்தலாம். இந்த வரம்பை விட அதிகமாக சாப்பிட்டால் விளைவு கடுமையானதாக இருக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

நச்சு தன்மையை எப்படி கண்டுபிடிப்பது?

கடையில் சுரைக்காயை வாங்கி வந்து நன்றாக கழுவிவிடுங்கள். பின்னர் அதிலிருந்து ஒரு சிறிய துண்டை வெட்டி பச்சையாக இருக்கும் தோல் பகுதியோடு (how to identify bitter bottle gourd) சாப்பிட்டு பாருங்கள். ஒருவேளை அது கசப்பாக இருந்தால் உடனடியாக அதை தூக்கிப்போட்டு விடுங்கள். அதே சாதாரணமாகவும், தண்ணீர் குடிப்பது போன்ற சுவையும் இருந்தால் அதை பயன்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்