Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குக்கரில் சமைத்து சாப்பிடுபவரா நீங்கள்..? அப்ப கண்டிப்பா இந்த பிரச்சனை உங்களுக்கு வரும்….!

Gowthami Subramani [IST]
குக்கரில் சமைத்து சாப்பிடுபவரா நீங்கள்..? அப்ப கண்டிப்பா இந்த பிரச்சனை உங்களுக்கு வரும்….!Representative Image.

Disadvantages of Rice Cooker: இன்று பெரும்பாலும், நேரத்தைச் சேமிக்கும் நோக்கத்திலும், எளிமையான முறையாக இருப்பதாலும், தினந்தோறும் அரிசியை குக்கரில் சமைத்து சாப்பிடுகிறார்கள். ஆனால், இதில் நன்மைகளும் அடங்கும், தீமைகளும் அடங்கும்.

குக்கரில் சாதம் வைத்து சாப்பிடும் போது, நாம் பெரும்பாலான உடல் உபாதைகள் வருவதை உணரலாம்.

இந்தப் பதிவில் குக்கரில் சமைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

குக்கரில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

  • இன்றைய கால கட்டத்தில் எதை நாம் வேகமாக சுலபமாகச் செய்ய முடியும் என்பதைத் தான் யோக்கிறோம்.
  • அந்த வகையில், சீக்கிரமாக நாம் உணவைப் பெறுவதற்கு இந்த குக்கரில் செய்து உண்ணலாம்.

ஆனால், குக்கரில் வைத்து சமைப்பதில் பல்வேறு தீமைகள் உள்ளன. அவற்றையும் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்வது அவசியம். பெரும்பாலும், குக்கரில் சமைத்து சாப்பிடுவதில் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உள்ளது.

குக்கரில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

நாம் தினந்தோறும் குக்கரில் சமைத்து சாப்பிடும் போது, உடல்பருமன், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கான அபாயம் உள்ளது.

குறிப்பாக, குக்கரில் சமைக்கும் போது கஞ்சி முழுவதுமாக வெளியே வராது. ஆனால், பாத்திரத்திலோ, மண் சட்டியிலோ வைத்து சமைக்கும் போது கஞ்சியை வடித்து விடுவதால், மிகக் குறைவாகவே அரிசியுடன் இருக்கும்.

இவ்வாறு கஞ்சி  நீக்கப்படாத குக்கர் உணவைச் சாப்பிடும் போது அதில் கலோரி குளுக்கோஸ் அளவு அதிகம் இருக்கும். இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கவும் கூடும்.

அது மட்டுமல்லாமல், புதிதாக சர்க்கரை நோயை உண்டுபண்ணுவதற்கு இது வழி வகுக்கும். இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு நார்ச்சத்து நிறைந்த கஞ்சி நீக்கப்பட்ட சாதமே உதவியாக இருக்கும்.

அதே சமயம், பாத்திரத்திலோ, மண் சட்டியிலோ வைக்கும் போது அரிசியை பதம் பார்க்க முடியும். ஆனால், குக்கரில் வைத்து சமைத்தால் குறைந்த நேரத்திலேயே சாப்பாடு வேகும். இது உடலுக்கு நல்லதல்ல எனக் கூறப்படுகிறது.

குக்கரில் சமைக்கும் சாப்பாட்டினால் சிலருக்கு மூட்டு வலி வரக்கூடும் எனவும் கூறப்படுகிறது.

பாத்திரம் அல்லது மண் சட்டியில் சமைக்கும் சாப்பாட்டிலேயே மிகுந்த சத்து உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்