Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

பெண்கள் கர்ப்ப காலத்தில் பருக வேண்டிய ஆரோக்கிய பானங்கள்..!!

Nandhinipriya Ganeshan July 26, 2022 & 17:45 [IST]
பெண்கள் கர்ப்ப காலத்தில் பருக வேண்டிய ஆரோக்கிய பானங்கள்..!!Representative Image.

பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில், கர்ப்பிணி பெண்கள் பருக வேண்டிய ஆரோக்கிய பானங்கள் பற்றி பார்க்கலாம்.

❖ தினமும் 2-3 கிளாஸ் பால் குடிக்க வேண்டும். பாலில் காணப்படும் கால்சியம், புரதம், வைட்டமின் பி 12 போன்றவை தாய், சேய் இருவருக்கும் தேவையான ஊட்டச்சத்துகளாகும்.

❖ கர்ப்பிணிகள் தினமும் ஒரு கிளாஸ் மோர் குடித்து வர மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் எளிதில் குணமாகும். அதுமட்டுமல்லாமல், உடலை நீரேற்றமாகவும் வைத்துக் கொள்ளும்.

வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா?

❖ ஒரு கிளாஸ் தண்ணீர்ல் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து தயாரிப்படும் எலுமிச்சை ஜூஸ் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் உடல் சோர்வு, குமட்டல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

❖ கர்ப்பக்காலத்தில் ஏற்படும் செரிமான சிக்கல்கள் மற்றும் உஷ்ணம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க இளநீர் ஒரு சிறந்த தீர்வு. வாரத்தில் 3 முறை குடிக்கலாம்.

ஞயாபக சக்தி அதிகமாகனுமா? முருங்கை கீரையை இப்படி சாப்பிடுங்க..!!

❖ வாரத்தில் இருமுறை சர்க்கரை சேர்க்கப்படாத பீட்ரூட் ஜூஸை குடித்து வந்தால், உடலில் இரத்த வெள்ளையணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும். அதோடு, இரத்த சோகை மற்றும் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளையும் தடுக்கிறது.

❖ கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை சுகவீனத்தை குறைக்க கேரட் ஜூஸ் மிகவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், கேரட்டில் இருக்கும் வைட்டமின் சி, ஆண்டி-ஆக்ஸிடன்ஸ் அவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. வாரத்தில் மூன்று முறை கேரட் ஜூலை பருகலாம்.

❖ கொத்தமல்லி விதைகள் மற்றும் இஞ்சியை இடித்து சிறிதளவு பன வெல்லத்துடன் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பக்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலில் இருந்து உடனடியாக விடுபடலாம்.

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஜூஸ்கள்…

❖ இது எல்லாவற்றிற்கும் மேலாக தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இது இயற்கை நமக்கு அளித்த சுத்தமான மருந்து. எனவே, கர்ப்பிணிகள் தினமும் குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்