Thu ,Nov 07, 2024

சென்செக்ஸ் 80,378.13
901.50sensex(1.13%)
நிஃப்டி24,484.05
270.75sensex(1.12%)
USD
81.57
Exclusive

How to Change Name After Marriage in India: திருமணத்துக்கு அப்பறம் பெண்கள் பெயரை மாற்றாததால் இத்தன பிரச்சனையா...?

Nandhinipriya Ganeshan July 03, 2022 & 11:00 [IST]
How to Change Name After Marriage in India: திருமணத்துக்கு அப்பறம் பெண்கள் பெயரை மாற்றாததால் இத்தன பிரச்சனையா...?Representative Image.

How to Change Name After Marriage in India: பெண்களின் பெயருக்கு பின்னால், ஒரு ஆணின் பெயர் எப்போதுமே குடும்பப் பெயராக அல்லது இணைப்பு பெயராக சேர்ந்து வருகிறது. திருமணத்திற்கு முன்பு வரையில் தனது தந்தையின் பெயரை இணைப்பு பெயராக பயன்படுத்தி வரும் பெண்கள், திருமணத்திற்கு பிறகு தங்களது கணவர் பெயரை சேர்த்து பயன்படுத்த தொடங்குகின்றனர். 

ஆனால், ஆண்களுக்கு இம்மாதிரியான பிரச்சனை எதுவும் கிடையாது. இருப்பினும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு இணைப்பு பெயரை மாற்ற வேண்டும் என்று சட்ட ரீதியான கட்டாயம் எதுவும் கிடையாது. ஆனால், இந்தியாவை பொறுத்த வரை இணைப்பு பெயரை மாற்றுவது மரியாதைக்கு உரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் ஒரு சில பெண்கள் மட்டுமே தங்களது கணவரின் பெயரை இணைப்பு பெயராக மாற்றிக்கொள்கிறார். இப்போது இணைப்பு பெயரை மாற்றுவதன் மூலம் ஏற்படும் குறைகள் மற்றும் நிறைகளை (pros and cons of changing your surname after marriage) பற்றிப் பார்க்கலாம். 

இணைப்பு பெயரை மாற்றுவதால் ஏற்படும் நிறைகள்:

❖ சொத்து ரீதியான ஆவணங்களை தயார் செய்யும் போது கணவர் பெயர் உங்களுடைய இணைப்பு பெயராக இருந்தால் வருங்காலத்தில் பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். 

❖ பேங்கில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து ஜாயிண்ட் அக்கவுண்ட் திறக்க விரும்பினால், அந்த காரியம் சுலபமாக முடியும். 

❖ உங்க குழந்தைக்கு எந்த இணைப்பு பெயரை பயன்படுத்த போகிறீர்கள் என்ற விவாதம் (benefits of changing surname after marriage) குறையும். 

❖ இப்போது நீங்களும் அவருடைய குடும்பத்தில் ஒரு அங்கமம் என்பதை வெளிப்படுத்தும். கணவன்-மனைவி இருவருக்கும் ஒரே குடும்பப் பெயர் இருந்தால் அது உங்களை ஒருவராக்கும். 

இணைப்பு பெயரை மாற்றுவதால் ஏற்படும் குறைகள்:

❖ இத்தனை நாட்களாக நீங்க பெருமையுடன் பயன்படுத்தி வந்த உங்க குடும்பத்தின் பாரம்பரிய பெயர் அல்லது அன்பான தந்தையின் பெயரை இழப்பீர்கள்.

❖ நீங்க ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் முக்கியமான அடையாள அட்டைகள், பேங்க் அக்கவுண்ட் உள்ளிட்ட பல ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும்.

❖ இதையெல்லாம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல், ரொம்ப நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

❖ கணவர் அவருடைய தந்தை பெயரை மாற்றாமல் இருப்பதால், உங்களுக்கு இருவருக்கும் இடையில் பொறாமை காரணமாக அடிக்கடி சண்டை வரவும் வாய்ப்பு உள்ளது.

❖ முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது குழப்பம் (disadvantages of not changing surname after marriage in tamil) ஏற்படும். 

இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், பெண்கள் திருமணம் உறுதி செய்தவுடனோ அல்லது திருமணத்திற்கு பிறகோ பெயரை மாற்றம் செய்துக் கொள்வது நல்லது. 

இதையும் படிங்க: திருமணத்திற்கு பிறகு வீட்டிலிருந்தே உங்க ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரியை மாற்ற வேண்டுமா? இந்த வழிமுறைகளை பின்பற்றுங்க...

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tags:

How to change name after marriage in india | disadvantages of not changing surname after marriage in tamil | benefits of changing surname after marriage | pros and cons of changing your surname after marriage


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்