Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பரோட்டா பிரியர்களே.. உங்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி.. பரோட்டா சாப்பிட்டால் இந்த பிரச்சனையும் வருமாம்…

Gowthami Subramani July 31, 2022 & 13:30 [IST]
பரோட்டா பிரியர்களே.. உங்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி.. பரோட்டா சாப்பிட்டால் இந்த பிரச்சனையும் வருமாம்…Representative Image.

பசிக்காக சாப்பிட்ட காலம் மாறி, ருசிக்காக சாப்பிடும் காலம் வந்தாச்சு. ஒரு காலத்தில், என்ன வகை உணவு, உப்பு, காரம், சுவை என எதையும் பார்க்காமல், வயிற்றுப் பசிக்காக மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால், தற்போது உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தாலும் சுவைக்காக உண்ணுகிறோம்.

தெரிந்தும் உண்ணுவது

இதில் முக்கியமானது என்னவென்றால், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், பரோட்டா, மற்றும் இன்னும் சிலவற்றை சாப்பிட்டால், நம் உடலுக்கு பாதிப்பு வரும் என்பதைத் தெரிந்தும் அதை தான் சாப்பிடுகிறோம். இதன் காரணமாக, அதன் விளைவுகளை எந்த காலத்திலும் சந்திக்க நேரிட வாய்ப்பு உண்டு. சில துரித உணவுகள் உடலுக்கு உபாதைகளை உடனடியாகவும் தர நேரிடும். அல்லது கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து எதிர்காலத்தில் விளைவுகளைத் தரக்கூடியவையாக மாறும்.

 

உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் உணவுப் பொருள்களில் பரோட்டாவும் ஒன்று. பரோட்டா சாப்பிடுவதால் உருவாகும் விளைவுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

அன்றாடம் எடுத்துக்கொள்ளுதல்

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுப் பொருள்களில் பரோட்டாவும் ஒன்றாக மாறியுள்ளது. ஹோட்டல் கடையில் சாப்பிட போனால், முதலில் கேட்பது பரோட்டாவைத் தான். பரோட்டாவை பல்வேறு ஊர்களில் பல்வேறு வகையான வகைகளில் கிடைக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் விதவிதமாக பரோட்டாவால் சிறப்பும் அடைந்துள்ளனர்.

சுவைக்காக மட்டுமே

சுவைக்காக எந்தவொரு பொருளையும் அதிக அளவில் சாப்பிடும் போது, பக்க விளைவுகள் தான் உண்டாகும். அதே போல, பரோட்டாவை சாப்பிடுவதால், உடல் உபாதைகள் ஏற்படும். குறிப்பாக பரோட்டா செய்யப்படும் மாவு தான் இதற்கு முக்கியக் காரணம்.

கோதுமை அரைக்கும் சமயத்தில், வெளியாகும் தவிடு தான் மைதா மாவு ஆகும். அதிலிருந்து செய்யப்படும் பரோட்டாவைத் தான் நாம் சாப்பிட்டுக் கொண்டு வருகிறோம்.

பரோட்டாவின் தீமைகள் மற்றும் விளைவுகள்

மைதா மாவு மிகவும் மென்மையாக இருப்பதால் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது. பசை போல காணப்படும் மைதாவால் செய்த பரோட்டாவை நாம் உண்ணும் போது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும்.

பரோட்டாவை நாம் பெரும்பாலும், மாலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தான் வழக்கமாக வைத்திருப்போம்.

நாம் சாப்பிடும் உணவுப்பொருள்களால், நம்முடைய உடலுக்கு நல்ல விதமான பலன்களை அளிக்கக் கூடியவையாக இருக்கவேண்டும். அந்த வகையில் பரோட்டாவால், எந்த வித நன்மையும் இல்லை.

பரோட்டா சாப்பிடுவதால் மன அழுத்தம்

பரோட்டா சாப்பிடுவதால், நமக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படும். இதன் காரணமாக இதயத்திற்கு செல்ல வேண்டும் இரத்தம் செல்லாமல், இதயம் பலவீனமடைந்து காணப்படும்.

பரோட்டாவைச் சாப்பிடும் போது, நமக்கு செரிமானம் எடுத்துக் கொள்ள அதிக நேரம் எடுக்கிறது. இவ்வாறு வயிற்றிலேயே தங்கி விடுவதால் நம்மால் எந்த வித செயல்களையும் செய்ய முடியாது. மேலும், இதன் காரணமாக மன அழுத்தம் உருவாகி, உடல் சோர்வும் அதிகரிக்கும்.

பரோட்டாவில் சேர்க்கப்படும் அதிக அளவு எண்ணெய் கொல்ஸ்ட்ராலை அதிகரித்தும் உடல் பருமனைக் கூட்டுகிறது.

இப்படி ஏராளக்கணக்கான பிரச்சனைகளைச் சொல்லிக் கொண்டால் போகலாம். அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு. பரோட்டாவாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட அளவு சாப்பிட்டால் போதுமானது. பெரும்பாலும், பரோட்டாவை சாப்பிடாமல் இருப்பது உடலுக்கு மிக நல்லது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Disadvantages of Parotta | Parotta Side Effects | Maida Parotta Side Effects | How to Digest Parotta Fast | Can We Eat Parotta Once a Month | Why is Parotta Bad of Health | Maida Parotta Benefits | Parotta Side Effects in Tamil | Is Parotta Banned in Kerala | Sugar Patient Can Eat Parotta | Alloxan Side Effects | Parotta is Good or Bad for Health in Tamil | Disadvantages of Parotta in Tamil | Parotta Side Effects in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்