Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,437.01
493.33sensex(0.68%)
நிஃப்டி22,313.45
165.55sensex(0.75%)
USD
81.57
Exclusive

Seetha Pazham Benefits in Tamil: கர்ப்ப காலத்தில் சீதாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா...? 

Nandhinipriya Ganeshan July 30, 2022 & 12:50 [IST]
Seetha Pazham Benefits in Tamil: கர்ப்ப காலத்தில் சீதாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா...? Representative Image.

Seetha Pazham Benefits in Tamil: ஸ்வீட் சாப்பிட்டால் உடல் எடை கூடி விடும், கொழுப்பு சத்து, சர்க்கரை ஏறி விடும் என்ற பயம் எல்லாருக்கும் இருக்கும். ஆனால், ஸ்வீட்டுக்கு இணையான சுவையும், அற்புதமான நன்மைகளை கொண்ட சீதாப்பழம் அந்த பயத்தை அடியோடு விரட்டுகிறது. பொதுவாக, பழங்கள் என்றாலே ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, வாழை, மாதுளை போன்றவைத்தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். சீஸன் பழங்கள் எல்லாம் அந்த நேரத்துக்கு மட்டுமே நினைவுக்கு வரும். 

ஆனால், சில பழங்களை மட்டுமே சாப்பிட தொடங்குவோம். அதில் ஒன்று தான் சீதாப்பழம். சீதாப்பழம் வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட பருவத்தில் தான் மரத்தில் காய்க்கும். பழங்களில் தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. நம் நாட்டில் சீதாப்பழம் என்று அழைக்கப்படும் இப்பழத்தை ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்றழைப்பார்கள். 'கஸ்டர்ட்' என்ற ஐஸ்கிரீம் போன்ற சுவை இந்தப் பழத்திற்கு இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. 

சீதாப்பழத்தை பலரும் சாப்பிடத் தயங்குவது அதில் அதிகமாக விதைகள் இருக்கும். இந்த விதைகளை விதைத்தும், பதியம் போட்டும் சீதாப் பழ மரங்களை வளர்க்கலாம். முதன் முதலில் இந்த பழ மரங்கள் மேற்கு இந்தியத் தீவினர்களால்தான் வளர்க்கப்பட்டன. இதன் தனிப்பட்ட ருசியும் மணமும் எல்லோரையும் கவரவே இன்று உலகில் எல்லா இடங்களிலும் வளர்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இனிப்பு சுவையின் காரணமாக மில்க் ஷேக்குகள், ஐஸ்கிரீம்கள், கீர்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இப்போது இந்த அற்புதமான சீதாப்பழத்தின் மகிமைகளை பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்..

செரிமானத்திற்கு நல்லது

சீதாப்பழத்தில் டையட்டரி நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும், இது வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. இவை குடல் இயக்கத்தை சீராக்கி குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்துகிறது. இதனால், ஜீரண சக்தி அதிகரித்து மலசிக்கல், அல்சர், நெஞ்செரிச்சல், அஜீரணம், அமிலத்தன்மை போன்ற இரைப்பை பிரச்சனைகளை தடுக்கிறது.

கண்பார்வையை மேம்படுத்துகிறது

சீதாப்பழத்தில் இந்த பழத்தில் அதிக அளவு லுடீன், ஜியாக்சாண்டின் மற்றும் ரைபோஃப்ளேவின் ஆகியவை நிரம்பியுள்ளன, இது நல்ல பார்வை ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். அதோடு, வயதானால் ஏற்படும் மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை போன்ற கண் சம்பந்தமான பிரச்சனைகளை தடுக்கிறது. மேலும், கண்கள் அடிக்கடி வறண்டு போவதையும் தடுக்கிறது.

உடல் எடையை அதிகரிக்க

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு, அதிக சீதாப்பழம் சாப்பிடுவது சிறந்த வழி. ஏனெனில், சீதாப்பழம் உங்கள் பசியின் அளவை கட்டுப்படுத்துகிறது. மேலும், இது அதிக ஊட்டச்சத்துக்கள், சரியான அளவு கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களால் நிரம்பியுள்ளது. சீத்தாப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக உடல் எடை அதிகரிக்க செய்யும்.

இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது

சீதாப்பழத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் காணப்படுவதால், இது இதய நோய்களின் அபாயத்திலிருந்து நமது இதயத்தைப் பாதுக்காக்கிறது. மேலும், இது இதய துடிப்பை சீராக்கி நரம்பு மண்டலத்தை சரியான செயல்பாட்டில் வைத்திருக்கும். இதில் இரும்புசத்து அதிகம் இருப்பதால், அவை உடலில் ஹீமோகுளோபின் (custard apple benefits for skin) அளவை அதிகரிக்க உதவும். 

புற்றுநோய்க்கு சிறந்த மருந்து

சீதாப்பழம் மனித உடலில் ஆரோக்கியமான செல்களை பாதிக்காமல் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கிறது. ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளதால், இது பல வகையான புற்றுநோய்கள் மற்றும் கட்டிகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. னவே, புற்றுநோய் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியைத் தவிர்க்க இந்த பழத்தை (custard apple benefits in tamil) உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கர்ப்ப காலத்தில் 

கர்ப்ப காலத்தில் சீதாப்பழத்தை சாப்பிட்டால், சிசுவின் மூளை, நரம்பியல் அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு நல்லது. மேலும், தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கிறது; பிரசவ வலியை குறைக்கிறது. கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும் இந்த பழம் உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை போக்குவது எப்படி?

ஆஸ்துமாவுக்கு நல்லது

சீதாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி 6 மூச்சுக்குழாய் அழற்சியை எதிர்த்து போராடுகிறது. ஆஸ்துமாவையும் தடுக்க உதவுகிறது. ஆஸ்துமா, காசநோயை கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். வைட்டமின் சி இருப்பதால் சளி பிடிக்கும் என்ற பயம் வேண்டாம். இது சளியை போக்கிவிடும்.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

சீதாப்பழத்தில் டையட்டரி நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது, இது உடலில் சர்க்கரை உறிஞ்சப்படும் அளவை குறைக்கும். இதனால் டைப் - 2 சர்க்கரை நோய் உருவாகும் அபாயம் குறையும். எனவே, சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் சாப்பிடலாம்.

Tags: 

Can i eat custard apple during pregnancy | Custard apple during pregnancy in tamil | Seetha Pazham Benefits in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்