Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57
Exclusive

எய்ட்ஸ் நோய் வர முக்கியமான காரணம் இதுதானாம்.. ஜாக்கிரதையா இருங்க..

Nandhinipriya Ganeshan Updated:
எய்ட்ஸ் நோய் வர முக்கியமான காரணம் இதுதானாம்.. ஜாக்கிரதையா இருங்க..Representative Image.

எய்ட்ஸ் (Acquired Immunodeficiency Disease Syndrome) என்பது ஹெச்.ஐ.வி (Human Immunodeficiency Virus) என்ற வைரசால் உண்டாகும் உயிர்க்கொல்லி நோயாகும். பெண்களை காட்டிலும் ஆண்களை சற்று அதிகமாகவே பாதிக்கிறது. இந்த கொடிய நோய் வந்தால் குணப்படுத்த முடியாது. ஆனால், இந்த தொற்றுநோயை கட்டுப்படுத்தவும் நோயின் தீவிரத்தை தடுக்கவும் முடியும். நம் சமூகம் எய்ட்ஸ் நோயை, ஒழுக்கக்கேடு சார்ந்த ஒரு நோயாக கருதுவதால், எய்ட்ஸ் என்ற பெயரைக் கேட்டதும் முகம் சுழிப்பதும், எய்ட்ஸ் நோயாளிகளை தனிமைப்படுத்துவதும் இயல்பாகிவிட்டது. 

சமூகத்தின் பார்வையை தவிர்க்கவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 ஆம் தேதி 'உலக எய்ட்ஸ் தினம்' அனுசரிக்கப்படுகிறது. இப்போது, உண்மையில், இந்த நோய் வருவதற்கான காரணங்கள் என்ன, வந்தால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம். 
 

எய்ட்ஸ் நோய் வர முக்கியமான காரணம் இதுதானாம்.. ஜாக்கிரதையா இருங்க..Representative Image

எய்ட்ஸ் என்றால் என்ன?

ஹெச்.ஐ.வி வைரஸ், ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை கொண்டவர்களையும் எளிதில் பாதிக்கக் கூடியது. அதாவது, இந்த வைரஸ் உடலில் நுழைந்ததும் வெள்ளை அணுக்களைப்போல தன்னை உருமாறி கொள்வதோடு, நோயெதிர்ப்பு சக்திக்கு காரணமாக இருக்கும் வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அழிக்க தொடங்குகிறது. இதனால் உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. பாதிக்கப்பட்டவர் முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு கொடிய நோய் இது. 

எய்ட்ஸ் நோய் வர முக்கியமான காரணம் இதுதானாம்.. ஜாக்கிரதையா இருங்க..Representative Image

எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?

மனித உடலில் மட்டுமே உயிர்வாழக்கூடிய இந்த ஹெச்.ஐ.வி வைரஸ், நீர், காற்று, உலர்ந்த இரத்தம், மண் என அனைத்து இடங்களிலும் சில நிமிடங்கலேயே அழிந்துவிடுவதால், கண்ணீர், உமிழ்நீர், கொசுக்கடி, சளி போன்றவற்றால் பரவாது. 

பொதுவாக, இந்த நோயானது பரிசோதனை செய்யப்படாத இரத்தம் ஏற்றுவதன் மூலம், பிறர் பயன்படுத்திய ஊசியை சுத்தம் செய்யாமல் பயன்படுத்துவதன் மூலம் பரவுகிறது. அதுவே, குழந்தைக்கு தாயின் மூலம் பரவுகிறது. ஆனால், 80% இது உடலுறவின் போது தான் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.    
 

எய்ட்ஸ் நோய் வர முக்கியமான காரணம் இதுதானாம்.. ஜாக்கிரதையா இருங்க..Representative Image

எய்ட்ஸ் நோயின் பொதுவான அறிகுறிகள்:

ஹெச்.ஐ.வி என்னும் தொற்று நிலையை கண்டறியும் போதே சிகிச்சை பெற்றால் எய்ட்ஸ் என்னும் நிலையை தடுக்க முடியும். எச்.ஐ.வி. நோய் தாக்கியவருக்கு அதற்கான அறிகுறிகள் நோய்த்தொற்றின் கட்டத்தை பொறுத்து மாறுபடும். அதன்படி, நோய்த்தொற்று தீவிரமாகும் போது ஏற்படக்கூடிய அறிகுறிகளாவன, 

திடீர் எடை இழப்பு

தொடர் காய்ச்சல்

பசியின்மை

அதீத சோர்வு

குளிர் உணர்வு

இரவில் வியர்வை வடிதல்

தொடர் இருமல்

தோல் தடிப்புகள் (அ) புடைப்புகள்

நாள்பட்ட வயிற்றுப்போக்கு

வீங்கிய நிணநீர் சுரப்பிகள்

நாக்கு, வாய், பிறப்புறுப்பில் புண் 

மேலும், இந்த நிலையில் தான் சிறுநீரக நோய், காசநோய், நிமோனியா, நுரையீரல் புற்றுநோய், இரத்த புற்றுநோய், குடல் புற்றுநோய், தோல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை உருவாகி உயிரையே பறித்துவிடுகிறது. 

எய்ட்ஸ் நோய் வர முக்கியமான காரணம் இதுதானாம்.. ஜாக்கிரதையா இருங்க..Representative Image

எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி?

அன்றாட வாழ்க்கைமுறை மாற்றங்களால் இதயநோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் போலவே, எய்ட்ஸ் நோயாளிகளும் முறையான சிகிச்சைகள் மூலாம் சராசரி வாழ்க்கையை வாழ முடியும். ஆனாலும், எய்ட்ஸ் என்ற நோயே வராமல் தடுக்க வேண்டுமென்றால் நல்லொழுக்கம் சார்ந்த வாழ்க்கை முறை மட்டுமே ஒரே வழி. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்