Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காதலியை பிரேக் அப் செய்ய விரும்புவரா நீங்கள்..? அப்போ இந்த பரிசு பொருளை கொடுத்து பாருங்கள்...!

Bala August 09, 2022 & 12:08 [IST]
காதலியை பிரேக் அப் செய்ய விரும்புவரா நீங்கள்..? அப்போ இந்த பரிசு பொருளை கொடுத்து பாருங்கள்...!Representative Image.

பெண்கள் தான் உயிருக்கு உயிராக காதலித்து கடைசியில் பிரேக் அப் செய்வதாக ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் உண்மையில் அதிகளவில் ஆண்கள் தான் பிரேக் அப் செய்வதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. கருத்து வேறுபாடு காரணமாகவும், சரியான புரிதல் இல்லாததாலும் பெரும்பாலான ஆண்கள் பிரேக் செய்வதாக கூறப்படுகிறது. 

அன்பானவர்களிடம் இருந்து சிலவற்றை அல்ல, பலவற்றை பெண்கள் எதிர்பார்ப்பது உண்டு. அவை சின்ன சின்ன சந்தோஷங்களில் இருந்து பரிசுப்பொருட்கள் வரை.. பிறந்த நாளின் போது அவன் என்ன பரிசு கொடுப்பான் என அதற்கு முதல் நாளே அவர்கள் யோசிக்க தொடங்கி விடுவார்கள்..இது சாதாரண விஷயம் தான்...

ஆனால் பெண்களின் அன்பை புரிந்து கொள்ளாத சில தற்குறி ஆண்கள்..அதை ஒரு எரிச்சலாகவே பார்க்கின்றனர். மேலும் ஒரு கட்டத்தில் இவளிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று நன்பர்களிடம் ஆலோசனை எல்லாம் கேட்க தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் உள்ள ஆண்கள்..

இங்க பாரு கௌசி நா சுத்தி வலச்சுலான் பேச விரும்பல என்றெல்லாம் இனி பேச தேவையில்லை...


1- வாசனை திரவியங்கள்:-

சிலர் காதலியின் பிறந்த நாள் அன்று, கம, கம வென மணக்கும் வாசனை திரவியங்களை பரிசாக அளித்து வருகின்றனர். பொதுவாக இது பெண்களை எரிச்சலடைய வைக்குமாம். ஒரு சில பெண்களுக்கு நீங்கள் வாசனை திரவியங்களை பரிசாக அளித்தால், அப்போ என் மீது  தூர்நாற்றம் வீசுகிறதா என கேட்க தொடங்கி விடுவார்கள். இது உங்கள் தென்றல் வாழ்வில் புயலாக மாறிவிடும்.

2-ஆடைகள்:-

பிறந்த நாளின் போது பரிசாக ஆடைகள் வழங்குவது உண்டு. பெண்களுக்கு ஆடைகள் மீது பொதுவாகவே அதிக நாட்டம் உண்டு. ஆனால் அதுவே அன்பாவனவரிடம் இருந்து  பிறந்த நாள் பரிசாக வந்தால் அதை சில பெண்கள் ஏற்க மாட்டார்கள். ஆடை என்பது அவர் அவர்களின் தனிப்பட்ட விஷயம், அதில் மூக்கை நுழைப்பது அன்பு காதலானக இருந்தாலும்  பெண்கள் அனுமதிக்க மாட்டார்கள்..

3-செல்ல பிராணிகள்:-

பெண்களுக்கு நாய், செல்ல பிராணிகள் மீது அதீத ஆசை உண்டு. பொதுவாகவே அன்பை அள்ளி எறியும் பெண்களுக்கு வாயில்லா ஜீவன்களை பார்த்தால் சொல்லவா வேண்டும். ஆனால் அந்த கொஞ்சலோடு சில பெண்கள் நின்று விடுவார்களாம். தை வீட்டில் வளர்க்கும் அளவிற்கு எல்லாம் சில பெண்களுக்கு பொறுமை இல்லை. 

4-சமையல் பொருட்கள்:-

நவீன காலகட்டத்தில் சிலர் காதலிக்கு சமையல் பொருட்களை பரிசாக வழங்குகிறார்கள். ஆனால் அதை அவர்கள் தான் சமையல் அறையில் உள்ளே இருக்கும் வேண்டும் என அவர் நினைப்பதாகவே நினைக்கின்றனர். இது காதலியிடம் மனக்கசப்பையே ஏற்ப்படுத்தும்.

5-கிப்ட் வவுச்சர்கள் :-

பணி புரியும் இடங்களிலோ, அல்லது இலவசமாக கிடைக்கும் கிப்ட் வவுச்சர்களை சிலர் காதலிக்கு வழங்கின்றனர். ஆனால் அது பெண்களை சங்கடத்திற்கு உள்ளாக்குமாம். வீணாக உள்ளதை தம்மிடம் தள்ளிவிடுவதாகவே அவர்கள் எண்ணுவார்கள்..

6-குளியல் பொருட்கள் :-

சிலர் சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்களை காதலிக்கு பரிசாக வழங்குகின்றனர். அப்படி நீங்கள் அதை வழங்கினால் உங்களுடைய கடைசி பரிசாக இருக்க வாய்ப்புள்ளது. பர்சனாலிட்டி என்பது அவர் அவர்களின் தனிப்பட்ட ஒன்று, அதில் கடவுளாக இருந்தாலும் தள்ளி நிற்பது தான் நல்லது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்