Mon ,Apr 15, 2024

சென்செக்ஸ் 73,380.76
-864.14sensex(-1.16%)
நிஃப்டி22,272.15
-247.25sensex(-1.10%)
USD
81.57
Exclusive

Rewind 2022 | 2022-இல் மண்ணை விட்டு மறைந்த திரை பிரபலங்கள்..

Nandhinipriya Ganeshan Updated:
Rewind 2022 | 2022-இல் மண்ணை விட்டு மறைந்த திரை பிரபலங்கள்.. Representative Image.

ஒவ்வொரு முறை புத்தாண்டு பிறக்கும் போதும் வரும் ஆண்டில் நாம் இந்த சமுதாயத்தில் என்னென்ன சம்பவங்களை சந்திக்கப்போகிறோமோ என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், பயம் மறுபக்கம் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும், நாம் ஒவ்வொரு வருடம் முடியும் போதும் அந்த வருடத்தில் நடந்த பலவிதமான சுவாரஸ்யங்கள், சம்பவங்கள், மறைக்க முடியாத நினைவுகள், சமூக நிகழ்வுகளை திரும்ப ஒருமுறை நினைவுப்படுத்தி பார்க்கும் போது உண்மையில் இந்த ஒரு வருடத்தில் இத்தனை நடந்திருக்குமா? என்று நம்மை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கும். அந்தவகையில், 2022 ல் நம்மை விட்டு மறைந்த திரை பிரபலங்களின் பட்டியலை பார்க்கலாம். 

Rewind 2022 | 2022-இல் மண்ணை விட்டு மறைந்த திரை பிரபலங்கள்.. Representative Image

பிரதாப் போத்தன்:

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படத் துறையில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் பிரதாப் போத்தன். இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல துறையில் பணிப்புரிந்திருக்கிறார். இந்தநிலையில், இவர் கடந்த ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும்போதே ஆகால மரணமடைந்தார். வயது 70.

Rewind 2022 | 2022-இல் மண்ணை விட்டு மறைந்த திரை பிரபலங்கள்.. Representative Image

சிவநாராயணமூர்த்தி:

நடிகர் விசுவால் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட சிவநாராயணமூர்த்தி, பூந்தோட்டம் என்னும் படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக திரையில் ஜொலித்தார். சிவாஜி, ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுடன் 218 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விவேக் மற்றும் வடிவேலு காமெடிகளில் மிக முக்கிய துணை நடிகராக நடித்து வந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாக டிசம்பர் 8 ஆம் தேதி காலமானார். வயது 67.

Rewind 2022 | 2022-இல் மண்ணை விட்டு மறைந்த திரை பிரபலங்கள்.. Representative Image

மர்மதேசம் லோகேஷ்:

90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிடித்தமான தொலைக்காட்சி தொடர்களாக வெளியான மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான தமிழ் நடிகர் லோகேஷ் ராஜேந்திரன். குடும்ப பிரச்சனையால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த வந்த இவர் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தற்கொலை செய்துக் கொண்டார். கனவுகளுடன் சுற்றி திரிந்த லோகேஷின் தற்கொலை திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வயது 34.

Rewind 2022 | 2022-இல் மண்ணை விட்டு மறைந்த திரை பிரபலங்கள்.. Representative Image

சலீம் கவுஸ்:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் வில்லனாக நடித்தவர் சலீம் கவுஸ். 1978ல் ஸ்வர்க் நராக் என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்த இவர் திரைப்பட தயாரிப்பாளர்,  நாடக இயக்குனர் மற்றும் ஒரு தற்காப்பு கலைஞரும் ஆவார். பல ஹாலிவுட் படங்களிலும் ஒரு பகுதியாக இருந்துள்ளார். சுமார் 50 படங்கள் வரை நடித்துள்ள இவர் டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இந்தநிலையில், ஏப்ரல் 28 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். வயது 70.

Rewind 2022 | 2022-இல் மண்ணை விட்டு மறைந்த திரை பிரபலங்கள்.. Representative Image

கிருஷ்ணகுமார் குன்னத்:

எல்லோராலும் கே.கே என்று அன்போடு அழைக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னாத் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் பல பாடங்களைப் பாடியுள்ளார். தமிழில் காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே, அந்நியன் படத்தின் அண்டங்காக்கா கொண்டக்காரி, மன்மதன் படத்தின் காதல் வளர்த்தேன் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் பாடல்களைப் பாடியுள்ளார். இந்தநிலையில், கடந்த மே 29 ஆம் தேதி கொல்கத்தாவிலுள்ள குருதாஸ் நஸ்ரூல் மன்சா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாடல் பாடும்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

Rewind 2022 | 2022-இல் மண்ணை விட்டு மறைந்த திரை பிரபலங்கள்.. Representative Image

ஹரி வைரவன்:

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடி குழு படம் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகர் ஹரி வைரவன். இவர், வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இந்தநிலையில், கிட்னி செயலிழந்து வறுமை காரணமாக உயிருக்கு போராடி வந்த இவர் கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். 

Rewind 2022 | 2022-இல் மண்ணை விட்டு மறைந்த திரை பிரபலங்கள்.. Representative Image

பம்பா பாக்யா:

புல்லினங்கால், சிம்டாங்காரன் என ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வித்தியாசமான கணீர் குரலுடன் பாடல்களை பாடி ரசிகர்களின் மூளைக்குள்ளே தனது குரலை செலுத்திய பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா. இவர் கடைசியாக, பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி பாடலின் துவக்க வரிகளை பாடியுள்ளார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். வயது 49. 

Rewind 2022 | 2022-இல் மண்ணை விட்டு மறைந்த திரை பிரபலங்கள்.. Representative Image

ரங்கம்மாள் பாட்டி:

எம்ஜிஆர் முதல் வடிவேலு வரை பல முன்னணி நடிகர்கள் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானவர் ரங்கம்மாள் பாட்டி. இதுவரை தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 500 படங்களில் நடித்துள்ளார். 9 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த பொழுதிலும், கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாமல் போனது. இதனால், மெரினா கடற்கரையில் கர்ச்சிஃப் விற்று தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி நலக் குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக காலமானார். வயது 75.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்